காதலை தேடி-7

காதலை(லே) தேடி-7

காதலை மனதில்
முடிந்து கொண்டவனுக்கு
உன் கழுத்தில்
மாங்கல்யத்தை முடிக்க
எவ்வளவு நேரம் ஆகும்?
இருந்தும் உன்
இதழ் சம்மதத்திற்க்காகவே
காதல் உணர்வுகளோடு
உறைந்து கிடக்கிறேன்........
என்னவளாய் நீ உதிர்க்கபோகும்
மௌன வார்த்தைகளை
விழிகளால் படித்து
பரிமாறிக்கொள்ள.......


குழப்பத்திலேயே வீடு வந்த எனக்கோ மிகப்பெரிய அதிர்ச்சி.......

ஹாலில் சோபாவாவில் எனக்காக காத்துக்கொண்டிருந்த அம்மா நான் வந்ததும் வராததுமாய் "சரிப்பா எனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம், நாம நாளைக்கே போய் பொண்ணு வீட்ல பேசிட்டு வந்துடலாம்.....சீக்கிரமே கல்யாணத்த வச்சிக்கலாம்னு சொல்லிடலாம், நீ விருப்பப்பட்ட சகியே உனக்கு மனைவியா வர போறா உனக்கு சந்தோஷம் தானப்பா" என்று அம்மா சரளமாக சொல்லி முடிக்க நானோ திகைப்பில் அப்பாவை பார்த்தேன், அவரோ குறும்பு புன்னகையோடு கண்சிமிட்டி எல்லாம் அவரது வேலை தான் என்று உறுதிப்படுத்தினார்.....

"அம்மா......."கண்கள் கலங்க( சந்தோஷத்தில் கண்கள் கலங்க) அம்மாவை அணைத்துக்கொண்டு தாங்க்ஸ்மா ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்..........

உண்மையிலேயே மிகப்பெரிய அதிர்ச்சி தான்,அதுவும் இன்ப அதிர்ச்சி.....

"அம்மா, ஐ அம் ரியலி சாரிமா....உங்ககிட்ட அவ்ளோ கடுமையா பேசிட்டேன், எனக்கு வேற வழி தெரியலம்மா......எங்க இந்த கல்யாணம் நடக்காம போய்டுமோ, சகி எனக்கு கிடைக்காம போய்டுவாளோன்ற பயம்...அதான் உங்ககிட்டயே அப்படிலாம் பேசிட்டேன், சாரிமா" என்று இப்பொழு என் கண்கள் வருத்தத்தில் கலங்கியது.....

"சரி விடுப்பா, உன்மேல என்ன தப்பு இருக்கு, உனக்கு பிடிச்சிருக்குனு தெரிஞ்சும் நான் தான் கொஞ்சம் பிடிவாதம் பிடிச்சிட்டேன்....போனது போகட்டும்ப்பா, இனி நடக்க வேண்டியத பத்தி யோசிப்போம்......கல்யாணம்னு பேச்சு ஆரம்பிச்சதுக்கப்புறம் கல்யாணம் முடியற வர உட்கார நேரம் இல்லாம பல வேலைகளை பாக்க வேண்டியது வரும்....அதுவும் நீ எங்களுக்கு ஒரே புள்ள, உனக்கு கல்யாணம்னா நாங்க அதை எவ்ளோ கொண்டாட்டமா செய்யணும்.....என்னோட எண்ணம் முழுக்க அதை பத்தி தான்பா இருக்கு......நாளைக்கு உறுதி பண்ண கையோட கல்யாணம் முடியற வர உன் அத்தைய இங்கயே தங்கிக்கிறயான்னு கேட்கணும்......அவங்க இங்க இருந்தா தான் எல்லாம் ஒழுங்கா நடக்கும்.....அப்பறம் நான் பொண்ணு வீட்ல ஏற்கனவே போன்ல பேசிட்டேன்...அவங்களும் அவங்க நெருங்கிய சொந்தத்தை மட்டும் கூப்பிடறாங்களாம், இது உறுதி பன்றது தான, நிச்சயம், கல்யாணத்துக்கு எல்லாரையும் கூப்டுக்கலாம்னு சொன்னாங்கப்பா........நாமளும் அதே மாதிரி அத்தை, மாமா, எல்லாருக்கும் போன்லயே தகவல் சொல்லிடலாம்...ஏன் முன்னாடியே சொல்லலைனு கோவிச்சுக்குவாங்க.....எப்படியோ அவங்கள பேசி சமாதானம் செய்யணும்" இப்படி தன் போக்கில் பேசி கொண்டு போன அம்மாவை பார்க்க ஆச்சரியமாக தான் இருந்தது......

இரண்டு நாட்களுக்கு முன் இந்த பெண்ணா, வேண்டவே வேண்டாம் என்று ஒத்த காலில் குச்சுப்புடி ஆடிய அம்மா இன்று என்னவோ காலம் காலமாக அவள் எனக்கு தான் என்று பேசி வைத்ததை போல ஒரே மூச்சாக நிற்கிறாள் இந்த கல்யாணத்தை எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடித்தே ஆக வேண்டும் என்று........

இதே குழப்பம் என் முகத்திலும் தெரிய அம்மாவே "என்னப்பா இப்படி முழிக்கற, என்ன யோசனை?" என்று என் குழப்பத்தை தீர்க்க சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுத்தார்...

"அம்மா, சகிய கல்யாணம் பண்ணிக்கணும், அது தான் என் விருப்பம்.......ஆனா இவ்ளோ சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கனும்னு நான் சொல்லலையேமா, எதுக்கு இந்த அவசரம்".....

அம்மா தயக்கத்தோடு அப்பாவை பார்த்துவிட்டு " இல்லப்பா, இன்னும் ஒரு மாசத்துல உனக்கு கல்யாணம் முடிச்சே ஆகணும்னு நம்ப குடும்ப ஜோசியர் சொல்லிட்டாருப்பா, அப்படி ஒரு மாசத்துல கல்யாணம் முடிக்கலைனா அப்பறம் என்ன பண்ணாலும் உனக்கு கல்யாணம் நடக்கறது ரொம்ப கஷ்டம்னு சொல்லிட்டாரு...இதுவரை அவர் சொன்னதெல்லாம் சரியா நடந்துருக்கு...... இந்த முறை அவர் சொன்னதை கேட்காம விட்டா அப்புறம், ஒருமுறை கண்களை அழுந்த மூடிக்கொண்டு திறந்த அம்மாவின் கண்களில் சில நீர்த்துளிகள் கருவிழியோடு கலந்து அவரின் துக்கத்தை பேசிக்கொண்டிருந்தது.......

"அம்மா அப்படிலாம் ஒன்னும் நடக்காது, இப்படி இந்த காலத்துல ஜோசியம், ஜாதகம்னு நம்பறதெல்லாம் சுத்த முட்டாள்தனம்.....வேணும்னா பாருங்களேன்....இன்னும் ரெண்டு மாசம் கழிச்சு சகிய கல்யாணம் பண்ணி இதை ப்ரூவ் பண்ணி காட்டறேன்" இப்படியெல்லாம் அம்மாவிடம் பேச முடியாது, ஏன்னா அம்மா அவ்ளோ சென்டிமென்ட் சின்னத்திரை...சீரியலில் வரும் அம்மாக்களை போல சென்டிமென்ட் சின்னத்திரைனு சொல்றேன்......அது மட்டுமில்லாது சகியை நான் கல்யாணம் பண்ணிக்கொள்ள அம்மா சம்மதித்திருப்பது கூட இந்த காரணத்தினால் தான் என்று எனக்கு பட்டது, கண்டிப்பாக இதனால் தான் இருக்கும்......இப்போ போய் நான் எதையாவது பேசி வைத்தால் நிலைமை தலைகீழாய் மாறி போகும் என்று உள்ளுணர்வு உணர்த்த.....

"சரி ஓகேம்மா , இன்னும் ஒரு மாசத்துல இந்த கல்யாணம் நடக்கணும்.......அவ்ளோ தானே, சரி கண்டிப்பா நடக்கும்.......அதுக்கு போய் இப்படி கண்கலங்கிட்டு இருக்காதிங்க....என் செல்ல அம்மா தானே நீங்க"......என்று கொஞ்சி கொண்டிருந்த சாரதிக்கு தெரியாது இந்த அம்மாவை பல காலம் பார்க்காமல், இப்படி கொஞ்சாமல் பிரிந்திருக்க போகிறான் என்று.....

போன் எடுத்தது அவள் தான், அவளே தான் என்பது உறுதியானதும் உறுதியான குரலில் களம் இறங்கினேன்.....

"ஹலோ, யார் பேசறது????" வழக்கமான கேள்வியோடு ஆரம்பித்தாள்.....

"நீயே கண்டுபிடியேன், நான் யார்னு.."..(கொஞ்சம் விளையாடி பார்க்க ஆசைப்பட்டது என் மனது)

"நீங்க என்ன லூசா? போன் பண்ணிட்டு கண்ணாமுச்சி விளையாடிட்டு இருக்கீங்க......."

"ஆமா கொஞ்ச நாளா நான் லூசா தான் மாறிட்டேன், அதுக்கு காரணம் கூட நீ தான்......"

"இங்க பாருங்க, நீங்க யார்கிட்ட பேசணும்....ஐ திங்க் நீங்க ராங் நம்பற்கு கால் பண்ணிருக்கீங்க, செக் யுவர் நம்பர்......"

"அப்படி ஒன்னும் எனக்கு தெரியலையே, சரியான நம்பர் அண்ட் சரியான பெர்சன்கிட்ட தான் பேசறேன்...."

"யாருனு சொல்லாம இப்படி பேசிட்டு இருந்திங்க நான் போன கட் பண்ணிடுவேன்"

"நமக்குள்ள கட் பண்ண முடியாத உறவிற்கு கண்ணம்மா, அப்படி இருக்கும்போது போன கட் பண்ண ஏன் இப்படி அவசரப்படற.....

"நீங்க சொன்ன கேட்கமாட்டீங்க, நான் கட் பன்றேன், நீங்க தனியாவே பேசிட்டு இருங்க....ஐ ஹாவ் மெனி ஒர்க்ஸ்......." என்று

"ஏய் போன கட் பண்ணிடாத......நான் சொல்லி முடிப்பதற்குள் அவள் கட் பண்ணி முடித்திருந்தாள்.....

ஆமா இவ்ளோ நேரம் நான் சகிகிட்ட தான் வம்பிழுத்து கொண்டிருந்தேன்......ஏன் இப்படி அவளிடம் வழிந்துகொண்டு சிறுபிள்ளை தனமாக அவள் சொல்வதைப்போல கண்ணாமூச்சி விளையாட்டெல்லாம் ஆடிக்கொண்டிருக்கிறேன்......எதற்காக நான் அவளுக்கு போன் பண்ணினேன், நம் கல்யாணம் உறுதியாகி விட்டது, இனி நீ என்னவள் என்று சொல்ல தானே, அதை மறந்து விட்டு அவளை வெறுப்பேத்தி விளையாடும் இந்த மனதை என்னவென்று சொல்வது.....

சரி மீண்டும் அழைக்கலாம் என்று அவள் எண்ணை அழுத்திவிட்டு காத்திருந்தால்.....

சாரி,திஸ் நம்பர் இஸ் ஸ்விட்ச் ஆஃப்.....அவள் குரலை கேட்க நினைத்தவனுக்கு எவளோ ஒருத்தியின் ஆர்டிபிசியல் வாய்ஸ் கடுப்பை ஏற்றியது.....

இந்த பெண்ணுக்கு அப்படி என்னதான் பிரச்சனை, ஏன் குரலை கூடவா அடையாளம் கண்டுபிடிக்க முடியாது, அப்படி என்ன தான் அவள் மனதில் நினைத்து கொண்டிருக்கிறாள்.........என்னை நினைத்துக்கொண்டிருந்தால் அதை விட பெரிய சந்தோசம் வேறு எதுவுமில்லை......ஆனால் என்னவாக இருக்கும், புரியாமல் குழப்பத்தில் தவித்த மனதுக்கு சரி ஒருவேளை உண்மையிலேயே ஏன் எண்ணையும் என் குரலையும் அவள் அடையாளம் தெரியாமல் தான் இப்படி செய்திருப்பாள் என்று அறிவு அறிவுரை கூறினாலும் மனம் சமாதானம் அடையாமல் குழப்பத்திலேயே தவித்துக்கொண்டிருந்தது.....

ஒருவேளை அவளுக்கு என்னை பிடிக்கவில்லையா? என் பேச்சில் சிறிது கரைந்து சம்மதித்தாலும் அவள் என்னை விரும்பாமல் ஏதோ போனால் போகிறதென்று இந்த கல்யாணத்தில் உடன்பட்டிருக்கிறாளோ?

இந்த கேள்விக்கு அடுத்த நாளே பதில் கிடைக்க போகிறதென்று அறியாமலே துவண்டு போனது சாரதியின் மனம்.......

நினைவுகள் தொடரும்....

எழுதியவர் : இந்திராணி (15-Jul-16, 1:03 pm)
பார்வை : 484

மேலே