தோசுத்து எங்கடா காணம்

ஏண்டா பேரப் பையா பழனி, உன்னப்பாக்க அடிக்கடி பாக்க வருவானே அந்தக் கருவாப் பையன் அவனக்கூட நீ தோச்த்து,:தோசுத்து-ன்னு கூப்புடுவயே எங்கடா அவன ரண்டு மாசமா காணம்.
@%@
தாத்தா அவம் பேரு இளவமுதன். அவன நா தோஸ்த்-ன்னுதான் கூப்புடுவேன்.
@#@##
அதென்னடா தோசுத்து. அதுக்கு என்னடா அர்த்தம்?
#%@
தாத்தா தோஸ்த்-ன்னா நண்பன், தோழன்-ன்னு அர்த்தமஂ
@%#%%
இப்பத்தாண்டா தெரியுது உம் லட்சணம். ஏண்டா நீ படிச்சு பட்டம் வாங்கி எந்த வேலைக்கும் போகத்தகுதி இல்லாத உனக்கு எப்பிடிடா வேல கெடைக்கும்?
@#%#@
என்ன தாத்தா இப்படியெல்லாம் பேசறீங்க?
@#%@#
ஏண்டா 4 வருசப் படிப்ப உழுந்து பொரண்டு 6 வருசம் கழிச்சு கம்மி மார்க்கு எடுத்து பாஸ் பண்ணின அறிவாளி. உனக்கு எப்பிடிடா தாய்மொழிப் பற்று வரும்? அந்த லட்சணந்தாம் தெரியுதே. அதானல தான் நீ நண்பன், தோழன்னு அழைக்கற சொல்லுக்குப் பதிலா தோசுத்துன்னு சொல்லற. இந்த அரகொற படிப்பு படிச்ச அரைவேக்காடு பட்டதாரிகளாலும் தமிழுக்கு ஆபத்து.நல்ல புத்தகங்கள படிடா பழனி. அப்பத்தான் நல்ல சிந்தனை வரும். கணிப்பொறி அலைபேசி வெளயாட்ட எந்த நேரமும் வெளையாடி வெட்டாய் பொழுதப் போக்கினா நீ எப்பிடிடா உருப்படுவ.
@#%௤##%@@@@@@@@@@@#@######
சிந்திக்க.மொழிப் பற்றை வளர்க்க

எழுதியவர் : மலர் (15-Jul-16, 1:46 am)
பார்வை : 176

மேலே