தும்முக்கோவக் காணம்

எண்டியம்மா எழிலரசி தும்முக்கோப் புள்ளய எங்கயாவது பாத்தயா? அவள ரொம்ப நேரமா காணம்.
@#@@
யாரு பாட்டிம்மா தும்முக்கோ?
@#@
அடியே கூருகெட்ட கூமட்ட எம் பேத்தி தும்முக்கோவை உனக்கு தெரியாதா?
#%@
கோவிச்சுக்காதீங்க பாட்டிம்மா. நா கொஞ்சம் கொழம்பிப் போயிட்டேன். உங்க பேத்தி பேரு துமகோ.
@#@@#
என்னடி பண்ணறது எழிலு பெரிய படிப்பு படிச்ச எம் மவனும் மருமவளும் எஞ் செல்லப் பேத்திக்கு வாயில நொழையாத அர்த்தம் தெரியாத தும்முக்கோ-ன்னு பேரு வச்சிருக்காங்க.
@%@@
பாட்டிம்மா இப்பெல்லாம் டாக்டர் பட்டம் வாங்கின பிரபல தமிழ்ப் பேராசிரியர்களே அவுங்க பிள்ளைங்களுக்கு அர்த்தம் தெரிஞ்ச அல்லது தெரியாத இந்திப் பேருங்கள வச்சுக்கறதுதான் நாகரிகம்னு நெனைக்கறாங்க. துமகோ -ன்னா உன்ன, உனக்கு- ன்னு அர்த்தம் பாட்டிம்மா. உங்க மகனும் மருமகளும் அர்த்தம் தெரியாமலே துமகோ-ங்கற இந்தி வார்த்தையை உங்க பேத்திக்கு பேரா வச்சிருக்காங்க.
@@####
என்னடி அநியாயம். நம்ம தாய் மொழில பேருக்கு பஞ்சம் வந்த மாதிரி இந்திப் பேருங்கள நம்ம பிள்ளைங்களுக்கு வச்சு அவுங்களயும் நம்ம மொழியையும் அசிங்கப்படுத்தறதா? உனக்கு, உன்ன- ன்னெல்லாம் பேரு வச்சுக்கறதா. ஏண்டி இந்திக்காரங்க இதக் கேள்விபட்டா நம்மளக் கேவலமா நெனைக்கமாட்டாங்க?
@##
பாட்டிம்மா படிச்ச தமிழருங்கதான் தமிழச் சீரழிக்கறதிலே தீவிரமா இருக்கறாங்க. அவுங்கள யாரு மாத்தமுடியும். எழுத்தறிவில்லாத தமிழர்களும் படிச்ச தமிழருங்களப் பாத்துத்தான் கெட்டுப்போறாங்க. அதிகாரம் உள்ளவங்கதான் இதயெல்லாம் சரி செய்யணும்.

@@###ஃ#@#####################
நண்பர்களே துமகோ என்ற இந்திச் சொல்லை யாரும் ஒரு குழந்தைக்குப் பெயராக வைக்கமாட்டார்கள். மெத்தப் படித்த மேதாவி தமிழர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு இந்திப் பெயரகளைச் சூட்டி எழுத்தறிவு இல்லாத தமிழர்களையும் கெடுக்கிறார்கள். நான் ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவன். என் மகனுக்கும் மகளுக்கும் அழகான தமிழ்ப் பெயர்களைத்தான் சூட்டியுள்ளேன். 98% தமிழர்கள் ஊடகக் தாக்கத்தால் இந்திப் பெயர் மோகம் கொண்டவர்களாக இருப்பதைச் சுட்டிக் காட்டவே இது போன்ற படைப்புகள். நான் மொழிவெறியன் அல்ல. மொழிப் பற்றாளன். மொழியியல் பயின்றவன். 35 ஆண்டுகள் மொழியியல் பாடத்தையும் கற்பித்தவன். கருத்துச் சொல்ல இடமளிக்காதது உங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பாததால்.

எழுதியவர் : மலர் (14-Jul-16, 9:59 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 132

மேலே