மேலை நாட்டு புத்தகம்-சிறுகதை
“ என் வீட்டுக்கு வந்து பாருடா, நீயே ஆச்சர்யபடுவாய்” என பெருமையாய் சொன்னான் கனகராஜன். அப்படி என்ன இருக்க போகுது? அவன் வீட்ல, அப்படின்னு அவன் வீட்டுக்கு போனான் மணவாளன்.
உபசரித்து வீட்டை சுற்றி காண்பித்து . ஒரு அறைக்குள் கூட்டிபோனான் கனகராஜன். .
அசந்து போனான் மணவாளன். அறை முழுவதும் புத்தகங்கள் அத்தனையும்……. மேலாண்மை தொடர்பாகவும், தன்னம்பிக்கை தொடர்பான மேல்நாட்டு எழுத்தாளர்களின் படைப்புகள்.
கனகராஜனுக்கு கைக்குலுக்கி, இவ்வளுவு புத்தகங்கள் சேகரித்துள்ளீர்களே…அத்தனையும் படித்து முடித்து விட்டீர்களா” என்று மணவாளன் கேட்டான்.
….”—ம்… வாங்கும்போதுள்ள ஆர்வம்…அப்புறம் காணாம போயிடுது. அத்தனையும் விலையுயர்ந்த புத்தகங்கள். வெளிநாட்டு எழுத்தாளர் எழுதி, அதனை தமிழாக்கம் செய்யப்பட்ட படைப்புகள் என்றான் கனகராஜன். .
என்னதான் எழுதி இருக்கிறார் வெளிநாட்டு எழுத்தாளர் என்று படித்து பார்த்தான் மணவாளன்.
வெளிநாட்டு எழுத்தாளர் எழுதியது இதுதான்”
அதிகாலையிலேயே எழுந்திருங்கள், இயற்கையை கண்குளிர காணுங்கள், கதிரவனின் கதிர்கள் உங்கள் மேல் படரட்டும்
எழுந்திருக்கும்போதே, தீமை செய்தவரை பகைமைப்பாராட்டாமல் ”நல்லண்ணத்தோடு எழுந்திருங்கள்
அன்றைய வேலைகளை திட்டமிட்டு,அன்றே முடித்து விடுங்கள்
இலக்குகளை நிர்ணயிங்கள், தடைகளைத் தகர்த்தெறியுங்கள். வெற்றி தோல்வி பற்ற கவலைப்படாதீர்கள்.
எப்போதும், புன்னகையுடன் முகத்தை மலர்ச்சியாக வைத்திருங்கள்.
இப்படி தலைப்பிட்டு, அதற்கு தேவையான சிறுசிறு கதைகளையும் உள்ளடக்கி ஒரு பெரிய புத்தமாக வெளிநாட்டு எழுத்தாளர் வெளியிட, நம்மூர் எழுத்தாளர் ஒருவர் அதனை மொழிபெயர்த்து சந்தையில் வெளியிட்டுள்ளார்.
புத்தகத்தை மூடிவிட்டு , நண்பா, இந்த புத்தகத்தில் வெளிநாட்டு எழுத்தாளர் கூறிய விவரங்கள் எல்லாம் நம் தமிழ்நூல்களில் நீதிபோதனைகளாகவம், ஆத்திச்சூடிகளிலும் , திறக்குளிலும் இருக்கின்றனவே . அதைவிட்டு விட்டு வெளிநாட்டு எழுத்தாளரின் புத்தகங்களையும் வாங்கி அடுக்கி வைத்து விட்டு, நம்மூர் புத்தகங்கள் நூலகத்தில் கேட்பாற்ற்று கிடைக்கிறதே, அதை படிக்காமல் இருப்பதில் என்ன நியாயம் ”என கேட்டான் மணவாளன்.
வெளிநாட்டு எழுத்தாளர் சொன்னதெல்லாம், ஏற்கனவே இங்கிருந்தவைதானே
அதிகாலையிலேயே எழுந்திருங்கள் என்கிறார்.
நம் முன்னோர்கள் அதைத்தானே சொன்னார்கள். அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்தால் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி என்றார்கள்.
நல்லெண்ணத்தோடு எழுந்திருங்கள் என்கிறார்.
திருக்குறளில் என்ன சொல்லப்பட்டுள்ளது.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்துவிடல்”
என்று பகைவரையும் பாசமாக்கி கொள்ளுங்கள் என்றல்லவா குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்றைய வேலையை திட்டமிட்டு அன்றே முடித்துவிடுங்கள்.
இதையேத்தான் ”பருவத்தே பயிர்செய்” என்று நம் முன்னோர்கள் சொல்லி உள்ளார்கள்.
இலக்குகளை நிர்ணயிங்கள், தடைகளைத் தகர்த்தெறியுங்கள்.
இதையே நம் திருக்குறளில்
”துன்பம் உறவரினும் செய்க, துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை” என்று உரைத்துள்ளாரே
எப்போதும் புன்னகையுடன் மலர்ச்சியாக வைத்திருங்கள் என்கிறார். திருவள்ளுவரும் இதையேதான்
”இடுக்கண் வருங்கால் நகுக” என்றும் சொல்கிறார்.
இப்படி ஒவ்வொரு விவரத்தையும் ஒப்பிட்டு மணவாளன் எடுத்து கூறியதும், நண்பர் கனகராஜன் ”வாப்பா மணவாளா வெளியே போகலாம்” என்றான்.
என்ன நான் ஏதாச்சிலும் தப்பா சொல்லிட்டேனா?
இல்லேப்பா, நீ சொன்னது சரிதான், ”நூலகத்திற்கு சென்று நம் தமிழ் நூல்களை எடுத்து வரலாம், நானும் நாலு பேருக்கு சொல்கிறேன் என்று புறப்பட்டான் கனகராஜன்.
--- கே. அசோகன்.