காதலைலே தேடி-6
காதலை(லே) தேடி-6
காதலை இதயத்தில்
கட்டிக்கொண்டு அடம்பிடிப்பது
நான் இல்லை....
என்னை பார்க்கும்போதெல்லாம்
உன் கண்களால் என்
இளமையை கட்டிக்கொண்டு
சிறைபிடிப்பது நீயேதான்......
புரிந்துகொள்ள மனம்
வரவில்லை உனக்கு.......
உன்னை விட்டு பிரிந்து செல்லவோ
மனமே வராது எனக்கு......
இதற்கிடையில் என்று நடந்தேறுமோ
நம் திருமண அரங்கேற்றம்.......
ஜீவிக்கிறேன் உன்னை என்
மறுபாதியாக மாற்றும்
அந்த நொடிபொழுதுக்காகவே........
வீட்டுக்கு வந்ததும் இந்த சம்பந்தம் வேண்டாம் என்று சாரதியின் அம்மா உறுதியாக கூற, எதுவும் பேசாமல் தன் அறைக்கு சென்ற சாரதி அதிலிருந்து வீட்டில் யாரிடமும் எதையும் பேசவில்லை....தன் வேலை உண்டு, தான் உண்டென்றபடியே அலுவலக வேளையிலும், வீட்டிற்கு வந்தால் சில புத்தகங்களை எடுத்துக்கொண்டு படிப்பதிலுமாய் மூழ்கி போனான்......
இரண்டு நாட்கள் இப்படியே ஓடி விட........சாரதியின் அம்மா இன்னொரு சம்மந்ததோடு வந்து நின்றாள்....
சாரதி இந்த பொண்ணு ரொம்ப அழகா இருப்பாடா, இந்த இடம் நமக்கு சரியா வரும்டா.......இன்னைக்கு நல்ல நாளா இருக்கு, இன்னைக்கே போய் பாத்துட்டு வந்துடலாமா? நீ ஆபிஸ்க்கு லீவ் சொல்லிடறயா, இல்ல பெர்மிஷன் போட்டா போதுமா.....என்று தன் பேச்சில் மூழ்கி இருந்த பார்வதியை...."அம்மா ஸ்டாப் இட்" என்ற மகனின் குரல் தடுமாற வைத்தது...
என்னப்பா என்ன ஆச்சு? புரியாமல் பார்வதி விழிக்க, மேலும் அவளை உறைய வைப்பதில் மகன் தீவிரமானான்........
அம்மா நீங்க என்ன சொன்னாலும் சரிம்மா, எனக்கு சகிய தான் பிடிச்சிருக்கு.....எனக்கு கல்யாணம்னா அது இந்த பொண்ணோட மட்டும் தான் நடக்கும்......ஏதோ கோவத்துல சொல்றேன் இன்னும் கொஞ்ச நாள்ல சரி ஆகிடும்னு நினைக்காதீங்க, எனக்கு கல்யாணத்துக்கு முன்னாடி காதலிக்கறதுல இஷ்டம் இல்ல...கல்யாணம் பண்ணிட்டு என்னோட மனைவியை காதலிக்கனும்னு பல கனவுகள் வச்சிருக்கேன்......என் கனவும் சரி என் கல்யாணமும் சரி அது இவளோட மட்டும் தான்...... ப்ளீஸ் என்ன புரிஞ்சிகோங்கமா.....ஆயிரம் இருக்கும், உங்களுக்கு பிடிக்காத விஷயங்கள்......அதை பத்தி நான் எதுவும் விமர்சனம் பண்ணல, ஆனா எனக்கு சகிய தான் பிடிச்சிருக்கு.....இதுக்கு மேல சொல்றதுக்கு எதுவும் இல்ல, நீங்களே நல்லா யோசிச்சு ஒரு நல்ல முடிவா எடுத்துட்டு கூப்பிடுங்க......அப்புறம் என் கல்யாணத்த பத்தி பேசலாம், அதை விட்டுட்டு இன்னொரு பொண்ண போய் பாத்துட்டு வரலாம்னு இதுக்கு மேல என்கிட்ட ஆர்க்யூமென்ட் பண்றதுல நோ யூஸ்........முகத்தில் கோவம் படர நறுக்கென்று தெள்ள தெளிவாக அம்மாவிடம் தன் இறுதி முடிவை கூறிவிட்டே வெளியில் கிளம்பினான்.....
பாருங்க உங்க பிள்ளை எப்படி பேசிட்டு போறான்னு, எனக்கென்னவோ இந்த சம்பந்தமே பிடிக்கல ஆனா அவன் என்னவோ கட்டினா அவளை தான் கட்டுவேன் இல்லைனா பிரம்மச்சாரியத்துல புகுந்துடுவேன்ர மாதிரியே டைலாக் பேசிட்டு போறான்.....இத்தனை நாள் நான் சொன்ன பேச்ச கேட்டு வளர்ந்த பிள்ளை, இன்னைக்கு எனக்கே பாடம் சொல்லிகுடுத்துட்டு போகுது......நீங்களும் எல்லாத்தையும் வேடிக்கை பாத்துட்டு மௌனமா இருந்தா என்ன அர்த்தம்......
"அதான் நீயே சொல்லிடயேமா அவன் இத்தனை நாளும் நம்ப பேச்சு மீறி நடக்காத நல்ல புள்ளதான்னு.... இப்போ அவன் உன் பேச்சையும் மீறி இவ்ளோ தூரம் தன்னோட விருப்பத்தை வெளிப்படுத்தறான்னா அதுக்கு என்ன காரணம், இது அவனோட வாழ்க்கை.....இந்த முடிவு அவனோட வாழ்க்கையில இறுதி வர பயணிக்க போகுது....இதுல நாம நம்ப விருப்பத்தை திணிக்கறது கொஞ்சம் கூட சரி இல்ல, உனக்கு ஏன் இந்த சம்பந்தம் பிடிக்கலேன்னு தெரியல........ஆனா அவனுக்கு சகியோட கேரக்ட்டர் பிடிச்சி போச்சு, தனக்கு மனைவியா அவ தான் வரணும்னு அவன் மனசுல ஆணி அடிச்சாப்புல நின்னுடுச்சு......இப்போ போய் நாம எதையாவது பேசிட்டு இருந்தோம்னா, அது சாரதிக்கும் நமக்கும் இடையில ஒரு விரிசலை ஏற்படுத்திடும்......"
நீயே நல்லா யோசிச்சி பாரு, அந்த பொண்ணுக்கு என்ன குறை, அழகா இருக்கா, நல்ல புடிச்சிருக்கா, பக்குவமா யோசிச்சு எதையும் முடிவு செய்ற குணம் அவகிட்ட இருக்கு...இதை விட வேற என்ன வேணும்னு நீ நினைக்கிற?"
"இதெல்லாம் போதுமாங்க, இப்படி எல்லார் முன்னாடியும் தான் தான் பெரியவன்ற மாதிரி அவ பாட்டுக்கு நியாயம் பேசிட்டு இருக்கா....நாளைக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டு இங்க வந்தாலும் அதே மாதிரி தான் எடுத்தெறிஞ்சி நம்மக்கிட்டயும் நடந்துக்குவா.......நான் ஒன்னும் பணத்தை மட்டுமே குறிக்கோளா வச்சிக்கிட்டு இந்த சம்மந்தம் வேணாம்னு சொல்லல, நாளப்பின்ன என்னலாம் பிரச்சனை வரும்னு யோசிச்சு தான் வேணாம்னு சொல்றேன்....."
சரிம்மா நீ சொல்றதும் சரியா தான் இருக்கு, ஆனா இன்னொன்னு யோசிச்சியா? அந்த பொண்ணு எல்லார் முன்னாடியும் பேசினா தான்......ஆனா அவ பேசினதுல ஏதவாவது தப்பு இருக்கா? தன் வாழ்க்கையை மட்டும் இல்ல ரெண்டு குடும்பத்தோட நிம்மதி போய்ட கூடாதுன்ற அக்கறையும் அவ முகத்துல தெரிஞ்சதுமா.....அதனால தான் அப்படிலாம் பேசிருப்பா, சொல்லப்போனா அந்த பொண்ணு ரொம்ப தன்னடக்கம், மரியாதை உள்ள பொண்ணுமா....."
எனக்கு என்னவோ இந்த சம்மந்தம் சரிவரும்னு தான் தோணுது, இதுக்கு மேல நீ தான் உன் சம்மதத்தை சொல்லணும்......
நான் உன்னை கட்டாயப்படுத்தல, நிதானமா யோசிச்சு ஒரு முடிவை எடு.....ஒண்ண மட்டும் மறந்துடாத நீ எடுக்கற முடிவுல தான் நம்ப பையனுக்கும் நமக்கும் உள்ள உறவோட பிணைப்பே இருக்கு, இதுக்கு மேல நீயே ஒரு நல்ல முடிவா எடுமா.......என்று வேதாச்சலம் கூறிவிட்டு கிளம்ப யோசனையில் ஆழ்ந்தார் பார்வதி......
"ஹேய் சகி , ஒரு நிமிஷம் நில்லு, ஐ வில் கம் தேர்" என்று கத்திகொண்டே சாரதி தன் பைக்கை பார்க் செய்ய அவனின் குரல் கேட்டவளாய் கோவில் விட்டு வெளியே வர முயற்சி செய்தவள் அப்படியே பின் வாங்கி கோவிலினுள் சிறிது தூரம் சென்ற பின் நின்றாள்.....
பைக்கை பார்க் செய்துவிட்டு மூச்சு வாங்க சகி முன் நின்றவன் "எப்படி இருக்கீங்க? வீட்ல இருக்கவங்க எல்லாரும் நல்லா இருக்காங்களா" என்று நலம் விசாரித்து முடிக்க......அவனுக்கு புன்முறுவலோடு சிறு தலையசைப்பையே பதிலாய் கூறிவிட்டு வெளியே செல்ல முயன்றாள்....
சகி ஒரு நிமிஷம், உங்ககிட்ட பேச தான் உங்களை வைட் பண்ண சொன்னேன்........நீங்க என்னனா இப்படி ஒரு வார்த்த கூட சொல்லாம கிளம்பறீங்களே.......என்று பரிதாபம் பொங்கி வழியும் குரலில் சாரதி கூறவும் சற்று நிதானித்து விட்டு அவனை நேருக்கு நேராய் பார்த்தபடி சகி நின்றுகொண்டாள்.......
"என்கிட்ட என்ன பேசணும், சீக்கிரம் சொல்லுங்க........நான் வீட்டுக்கு போகணும்"
அது அது வந்து.......
அதான் வந்துடீங்களே, இதுக்கு மேல எங்க வர போறிங்க......சட்டுனு விஷயத்தை சொல்லுங்க, எனக்கு டைம் ஆகுது......
கலெக்ட்ர் ஆஃபீஸ் போய் கையெழுத்து போடபோறவ மாதிரியே பறக்கறாளே......."ஒன்னும் இல்ல, சீக்கிரமே ஒரு நல்ல முடிவோட உங்க வீடு தேடி வருவோம், அதை சொல்ல தான் வைட் பண்ண சொன்னேன்........
ம்ம்ம்ம், அவ்ளோ தான, சொல்லிட்டீங்கல்ல.......சரிங்க அப்போ நான் கிளம்பறேன்"
சொல்லிவிட்டு விருட்டென்று கிளம்பியவளின் சடை பின்னல் அவளின் வேக நடையில் அசைந்தாடுவதை பார்த்த படியே நின்றுந்தவனின் மனதில் ஏகத்திற்கும் வருத்தம்.....
"ச்சை, என்னடா சாரதி இதெல்லாம், உனக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது......இத்தனை நாளை எவ்ளோ பொண்ணுங்கள பார்த்தும் வராத இந்த காதல், இவளை பாத்ததும் சக்குனு மனசுல ஒட்டிக்கிச்சே......
ஆனா இதையெல்லாம் யாருமே புரிஞ்சிக்காம அவங்க பக்கம் இருக்க சூழ்நிலையையே பாத்துட்டு என்ன அலைக்கழிக்கறாங்களே.....கடவுளே நீ தான் என் ஆசையை கரைசேத்தனும்......என் சகியோட கைக்கோர்க்க வழி செய்யணும்...கன்னத்தில் போட்டுகொண்டு அங்கிருந்து கிளம்பினான்......
ஒரு பக்கம் அம்மா, மறு பக்கம் எதையும் வெளியில் சொல்லமாட்டேன், எது நடந்தால் எனக்கென்ன என்றிருக்கும் சகி.......ஏற்கனவே பலத்த கண்டிஷன்களுக்கு நடுவில் சம்மதம் சொல்லி இருப்பவள் ஒரு பக்கம் என்றால், அம்மாவோ சம்மதம் சொல்லவே அடம்பிடிக்கிறார்......என்ன செய்ய என்று குழம்பியபடியே பைக்கை ஓட்டலானான்........