ஆசான் ---====தெய்வத்தின் குரல்

"ஒருத்தன் மாத்ரு பக்தியால் இந்த லோகத்தையும், பித்ரு பக்தியால் அந்தரிஷ லோகத்தையும், ஆசார்ய பக்தியால் ப்ரஹ்ம லோகத்தயும் அடைகிறான்" என்று சொல்லும்போது ஆசார்யனைத்தான் ரொம்பவும் சிறப்பித்திருக்கிறார்.

இவர்களுக்கு சுச்ரூஷை செய்யும் பலனை இப்படி உயர்த்தச் சொல்லியிருப்பது போலவே, இவர்களுக்குக் கொஞ்சம் த்ரோஹம் செய்துவிட்டாலுங்கூட மஹாபாபம் ஸம்பவிக்குமென்று எச்சரித்திருக்கிறது.


அத்யாபகர்

சொல்லிக் கொடுத்துத் திருத்துவது, அருள் சக்தியால் திருத்துவது, மந்த்ர சக்தியால் சிஷ்யனை வேதஸம்ஸ்காரம் கொண்டு சுத்தி செய்து தத் -த்வாரா (அதன் வழியே) திருத்துவது என்று மூன்று தினுஸு. அருள் சக்தியை சாஸ்த்ரத்துக்குள் கொண்டுவர

முடியாதாதலால் ஸ்ம்ருதிகளில் அதைப்பற்றிய ப்ரஸ்தாவம் இல்லை. மற்ற இரண்டை எடுத்துக்கொண்டால், 'மந்த்ரோபதேசத்தால் ஸம்ஸ்கார பூர்வமாக (வேதச் சடங்கினால்) சிஷ்யனைப் பரிசுத்தி பண்ணி அப்புறம் பரிபூர்ணமாக வித்யையும் போதிக்கிறவரே குரு, ஸம்ஸ்கார க்ரியை இல்லாமல் முழுக்கவோ, ஒரு பகுதியோ வித்யை மாத்திரம் போதிப்பவர் ஆசார்யர்' என்பது ஒரு அபிப்ராயம். இன்னொரு அபிப்ராயம் ஆசார்யரே மந்த்ர பூர்வ ஸம்ஸ்காரத்திலிருந்து வேதாந்த போதனை முடிய எல்லாம் செய்பவர் என்பது. இந்த இரண்டு வித ஆசார்யருக்கும் "அத்யாபகர்" என்ற பெயர் உண்டு. இவரில் கீழ்ப்பட்டவரே சம்பளத்துக்கு போதிக்கும் உபாத்யாயர்

எழுதியவர் : (17-Jul-16, 3:33 am)
பார்வை : 86

மேலே