முதுமை--------------------------படிக்க பகிர்க

முதுமை ----- அதுதான் முழுமை பெற்ற இளமை

முதுமையின் கனிவோ இன்றே
முற்றத்தில் தெரிகிறது முழுமையாய் ..
வாஞ்சையுடன் ஆட்டினைக் கயிற்றினால்
வகையாகப் பற்றுகின்ற போக்கில்
நெஞ்சத்துப் பாசத்தில் என்றுமே
நிறைவாகத் தெரிகிறது உன்னழகு .
உன் தலைக்கு நரையுண்டு....
உன் கனிவானத் தாயுள்ளத்திற்கு ???
முகமது சுருங்கலாம் தாயே உனக்கு .
முதுமை எனநான் அழைப்பதோ ???
அகமது சுருங்கா அன்புள்ளத்திற்கே
அன்றும் என்றும் இன்றும் முதுமை
அதுதான் முழுமை பெற்ற இளமை .
வாழ்க்கை

எழுதியவர் : (17-Jul-16, 2:45 pm)
பார்வை : 126

சிறந்த கட்டுரைகள்

மேலே