புதினா ஜூஸை குடிப்பதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்
புதினா ஜூஸை குடிப்பதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் - இயற்கை மருத்துவம்
புதினா நிறைய மருத்துவ குணங்களை கொண்டுள்ள கீரை வகை. இது வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் மற்றும் பற்கள், ஈறுகள் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு குணம் தருகிறது. அதுமட்டுமல்லாமல் புற்று நோயை வரவிடாமல் தடுக்கும், கண்பார்வையை அதிகரிக்கச் செய்யும்
வயிற்று வலியை குணப்படுத்தும் :-
புதினாவில் ஃபைடோ சத்துக்கள், மென்தால், மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. இவை வலியை குறைக்கும் ஆற்றல் தருபவை. புதினா ஜூஸ் குடித்தால், அஜீரணம், வயிற்றில் ஏற்படும் தொற்று ஆகியவை குணமாகிவிடும்
புற்று நோயை தடுக்கும் :-
பெரிலைல் ஆல்கஹால், என்ற பொருள் குடல் மற்றும் இரைப்பை புற்று நோய் வரவிடாமல் தடுக்கும் ஒரு வேதிப்பொருளாகும். இது புதினாவில் அதிகம் உள்ளது
சரும பாதிப்புகளை குறைக்கும் :-
புதினா சாறு பாக்டீரியாக்களின் தொற்றால் உண்டாகும், மரு, பருக்கள் ஆகியவற்றை நீக்கிவிடும். சருமத்திற்கு போஷாக்கும் அளிக்கும். சுருக்கங்களைப் போக்கும். இளமையான சருமத்தை தரும். அலர்ஜி, சரும எரிச்சல், மங்கு ஆகியவற்றை போக்கிவிடும்.
அலர்ஜியை குணப்படுத்தும் :-
காக்ஸ் -1 காக்ஸ்-2 என்ற இந்த இரு என்சைம்களும் வலி மற்றும் அலர்ஜியை உண்டாக்குபவை. இந்த இரண்டையும் கட்டுப்படுத்தும், ரோஸ்மரினிக் அமிலம் புதினாவில் உள்ளது. ஈசனோபில் என்ற அலர்ஜியை தூண்டும் ரத்த செல்களை கட்டுப்படுத்துகிறது புதினா. இதனால் அலர்ர்ஜியினால் உண்டாகும் பக்க விளைவுகளை குறைக்கும்.
மன அழுத்ததை கட்டுப்படுத்தும் :-
புதினா நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கச் செய்யும். இதில் விட்டமின் ஏ,பி, மற்றும் ஈ ஆகியவை உள்ளது. இது மாதவிலக்கு சமயத்தில் வரும் மன அழுத்தம் மற்றும் வயிற்று வலியை குணப்படுத்தும். தீவிர வேலைகளால் உண்டாகும் மன அழுத்தத்தை குறைக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தும்.
காய்ச்சல் ஜலதோஷத்திற்கு மருந்து :-
ஜலதோஷம் மற்றும் காய்ச்சலாம் அவதிப்படுபவர்கள் புதினா சாறினை எடுத்துக் கொண்டால் விரைவில் இவற்றிலிருந்து விடுபடுவார்கள். இது சிறந்த கிருமி நாசினி. நுரையீரலை சுத்தப்படுத்தும். பலப்படுத்தும்.