அழகிய தமிழ்மகள்

நெற்றியில் சந்தனமிட்டு
தேக நிறத்துடன் போட்டியிடுகிறவள்
திருநீறும் சந்தனமும் கலந்த
தமிழின் நிறத்தவள்
சந்தனம் நிச்சயம் தோற்றே இருக்கும்

உதட்டுச் சாயமில்லாது
கள்ளம் கபடமற்ற சிரிப்பு சூழலால்
சிக்காத மனமுண்டோ
சிதைந்துத் தான் போனேன்

அள்ளி முடிக்காத கேசம்
காற்றில் கலைந்தோடி அது
நம்மில் இழைந்தோடி இருப்பது
பெரும் மோசம்

உயரமான தேகம் தான்
கொடியில் மலர்ந்த மலர்களாய்
அவள் தாவணிக்கு வெளியே தாண்டாது
நம் கண்களை விட்டும் அகலாது

உரலிடையை தாங்கும் மெலிந்த கால்கள்
அவளிடையே இதுதான் அழகோ
இன்னும் தான் இருக்கோ
சொல்லுங்களேன் என் கவிதோழர்களே!!!

எழுதியவர் : ப. சம்பத்குமார் (18-Jul-16, 12:32 am)
Tanglish : alakiya tamilmagal
பார்வை : 122

மேலே