திருப்பதி செல்லும் பொழுது காலஹஸ்தி சென்று வரவேண்டுமா

திருப்பதி செல்லும் பொழுது காலஹஸ்தி சென்று வரவேண்டுமா /காலஹஸ்தி முதலில் தரிசனம் செய்து விட்டு பெருமாளை தரிசனம் செய்ய வேண்டுமா ?

தற்பொழுது திருப்பதி என்று அழைக்க படும் ஏழுமலை கொற்கை கோவில் என்று சொல்வதற்கு காரணம் ...?(காசி ராமேஸ்வரம் சென்று வந்தால் துன்பம் வருவது ஏன் ?என்ற பதிவில் பதிந்த பொழுது ஒரு அன்பர் கேட்ட கேள்வி )

சில அடிப்படை விவரம்களை நாம் மறந்து விட்டோம் ,
முதலில் அதை நான் நினைவு படுத்த விரும்புகிறேன் .

தமிழர்கள் நிலை திணைகளை 5 ஆக பிரித்து ,
அவைகளுக்கு ஒரு தெய்வத்தை உருவாக்கி வழிபட்டார்கள் ..

குறிஞ்சி -மலையும் மலை சார்ந்த இடம்களும்--வணங்கிய தெய்வம் சேயோன் (குறத்தியை முருகன் மணந்தது )

முல்லை -காடும் காடு சார்ந்த இடம்களும்-மாயோன் (கிருஷ்ணன் வாழ்ந்தது )
மருதம் --வயலும் வயல் சார்ந்த இடம்களும்--இந்திரன் (தஞ்சை ,மதுரை )

நெய்தல் --கடலும் கடல் சார்ந்த இடம்களும்--வருணன் (சத்யம் ,நீதி ,ஒழுக்கம் இவைகளுக்கு அதிபதி)

பாலை -குறிஞ்சி --முல்லை இடைய அமைந்த பாழ் பகுதிகள்--கொற்றவை (சக்தி தேவியின் வீரம் ,தைரியம் )

இவைகள் தான் தமிழர்கள் வகுத்து வழிபாடு செய்த விதம் .

மலை வனத்தில் உள்ளவர்கள் நீலி ,வனதேவதை ,கொற்கை என்று அழைக்கப்படும் பெண் தெய்வத்தை வழிபாடு செய்வார்கள் என்று நூல்கள் சொல்கிறது .இவள் அன்னை பாரசக்தியின் அவதாரம் என்றும்
சிங்கத்துடன் இருப்பதாக நூல்கள் சொல்கிறது .

சோதிட ரீதியாக பார்க்கும் பொழுது செவ்வாய் மலைகளுக்கு அதிபதி ,
முருகன் குறிஞ்சி பகுதிகளுக்கு உடையவன் ,
பாலையும் குறிஞ்சியும் சேரும் இடத்தில கொற்கை தேவி குடி இருப்பாள் ,முருகனை மால் என்றும் அழைப்பது உண்டு,
ஏழு மலை தொடர்ச்சியில் வழிபாடு செய்யப்பட்டு கொற்கை தேவி என்ற விவரத்தை நாம் புரிந்து கொள்ள ....

பெருமாளுடன் பெண் தேவியர் நிற்க படவில்லை காரணம் இந்த தேவியுடன் மற்ற ஒரு பெண்ணை நிற்க வைக்க கூடாது என்று ராமனுஜர் அறிந்து இருந்தார் .
கோவிலின் கோபுரத்தில் சிங்கம் உருவ சிலைகள் இருக்கிறது (தற்பொழுது அவைகள் அகற்ற பட்டது )

இந்த தகவல்கள் நான் யூகித்து சொல்ல வில்லை

சொன்னவர் --அக்னி கோத்ரா தாத்தாச்சாரியார் "எங்கே செல்கிறது இந்து
மதம்" என்ற நூலை எழுதியவர் 103 வயது வரை வாழ்ந்தவர் .

யூத குல பெண்மணி ஏழுமலைக்கு ஒரு ஆய்வுக்கு வந்த பொழுது அவருடன் வந்த தாத்தாச்சாரியார் கருவறைக்குள் செல்ல அனுமதி பெற்று உள்ளே சென்று பெருமாளை சுற்றி பார்த்த பொழுது அவர் கண்டது தலையின் பின் புறம் பெண்களுக்கு உண்டான சடை இருக்கிறது என்றும்
ராமானுஜர் பெண் தெய்வத்தை உருமாற்றி பெருமாளாக அமைத்தது உள்ளார்
என்று பதித்து உள்ளார் ......

வன காளி கோவில் இன்று மணிகண்டன் கோவில் ஆனது போல கொற்கை கோவிலும் கோவிந்தராஜ பெருமாள் கோவிலானது ....

காலஹஸ்தி கோவில் பரிகார கோவில் என்று சொல்லலாம் ,
இதற்கும் கோவிந்தராஜ் பெருமாளுக்கும் ஒரு போதும் சம்பந்தம் கிடையாது.

என்னிடம் பலர் ஏழுமலை போகும் முன் கேட்கும் கேள்விகள் இது ,
நான் அவர்களிடம் சொல்வது அத்தனை தொலைவு செல்லும் நீங்கள் இரு கோவில் நிலைகளையும் தரிசனம் செய்து விட்டு வரலாமே என்பேன் .

சோதிட ரீதியாக கவனிக்கும் பொழுது ராகு சாப /தோஷம் /பரிகாரம் செய்வது திருகாளத்தி,

ஏழுமலை செவ்வாய் தன்மை திருமணம் ,வியாபாரத்தில் உயர்வு ,நல்ல லாபம் கிடைப்பது,மருத்துவ செலவுகளில் விடுதலை போன்ற மேன்மைகள்
கிடைக்கும் ....

பொதுவாக செவ்வாய் /ராகுவின் தோசம்களுக்கு பரிகாரம் மற்றும் மேன்மைகள் தரும் கோவில்கள் என்று சொல்லலாம் ..

ஏழுமலையில் தரிசிக்க வேண்டிய இடம்கள்

அலமேலு மங்கபுரம்
ஸ்ரீனிவாச
பத்மநாத சாமீ
கபில தீர்த்தம்

மலை மேற்பகுதியில் ..
கோவிந்தராஜ பெருமாள்
அகாச கங்கை
பாப விநாசனம்
சக்கரை தீர்த்தம் ....இவைகள் அவசியம் தரிசனம் செய்ய வேண்டிய இடம்கள் ....

நன்றி ...
அகத்தியர்
காக்கை சித்தர் ஆசிகளுடன் ........

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (18-Jul-16, 12:44 am)
பார்வை : 1994

சிறந்த கட்டுரைகள்

மேலே