விநாயகர்

கணபதி நூல்கள்: : கணபதி உபநிடதம், ஹேரம்ப உபநிடதம், கணேசபுராணம், கணேசமான்மியம், கணேச காண்டம், பார்க்கவ புராணம், கணேச கல்பம், கமேசாச்சர சந்திரிகை, முத்கல புராணம், கணேச கீதை, கணேச தந்திரம்.

முதல் விநாயகர் பாடல்: : தமிழ் இலக்கியங்களில் முதல் முதல் விநாயகரை போற்றிய காப்புச் செய்யுள் காணப்படும் இலக்கியம் திருமந்திரம், திருமந்திரத்தில் ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்திரன் இளம் பிறை போலும் எயிற்றினை, என்று தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ளது.

விநாயகர் இருப்பிடம்: : கயிலாயத்தில் சிவபெருமான், திருப்பாற்கடலில் திருமால் அது போல விநாயகர் இருப்பிடம் ஆனந்த புவனம் ஆகும். வட மொழி சுலோகம் ஒன்று ஆனந்தமயா தேவஸ்துஸ்வானந்தேச கஜான் என்கிறது.

விநாயகர் தேவிகள்: : விநாயகர் புராணத்தில் காணப்படும் சித்தி, புத்தி, வல்லபை தவிர மோதை, பிரபோதை, கமலை, சுந்தரி, மனோரமை, மல்கலை, கேசினி, காந்தை, சாருகாசை, சுமந்திமை, நந்தினி, காமதை ஆகிய பதினைந்து தேவியர் விநாயகருக்கு உள்ளனராம்.

விநாயகர் விரத நாட்கள்:
சதுர்த்தி: ஆவணி மாத சுக்ல பட்ச சதுர்த்தி

துர்வா கணபதி விரதம் : கார்த்திகை மாத சுக்லபட்ச சதுர்த்தி
சித்தி விநாயகர் விரதம்: புரட்டாசி சுக்லபட்ச சதுர்த்தி

சங்கடகர சதுர்த்தி: மாசி மாதம் செவ்வாய் சதுர்த்தி முதல் ஓராண்டு முழுவதும்

மோதக் கதை: : விநாயகருக்கு மிகவும் உகந்தது மோதகம் என்ற கொழுக்கட்டை. பிரும்மம் எப்படி சர்வ வியாபியாக விளங்குகிறதோ அப்படி விநாயகர் எங்கும் சர்வ வியாபியாக விளங்குகிறார். அப்படிப்பட்ட விநாயகர் தன் இல்லம் வரும் நாளினை குறிப்பினால் “அருந்ததி அறிந்து கொண்டாள்.
பிரும்மம் இந்த கண்டத்தில் எங்கும் நிறைந்திருக்கிறது என்ற ரகசியத்தை அறிந்த அருந்ததி இந்த உண்மையை உலகத்துக்கு எடுத்துக்காட்ட விரும்பினாள். அண்டம் என்ற பொருள், பூர்ணமாக நிறைந்திருக்கிறது என்ற பொருளின் உள்ளே அமிர்தமயமான பூர்ணத்தை வைத்து அதை தன் இல்லம் வரும் விநாயகருக்கு படைத்தாராம். விநாயகரும் அதனை ஏற்று அருந்ததி தம்பதியருக்கு நல்வரங்களை அளித்தாராம். அந்த தத்துவம் நிறைந்த மோதகத்தை உலகோர் காண ஸ்ரீகணேசர் எப்போதும் தன் கையில் வைத்துக்கொண்டிருக்கிறார்.

எழுதியவர் : (18-Jul-16, 3:34 am)
பார்வை : 188

மேலே