தமிழனின் தலையெழுத்து
தலை நிமிருமா...
என் தமிழனின் தலையெழுத்து...
தலைப்பு செய்தியாய் தற்கொலை, கொலை...
தடமாறி நிற்கும் என் தமிழகம்...
தட்டிக்கேட்டிட ஒருவருக்கும் துணிவில்லை...
உண்மையை உரைத்திடும் செய்தித்தாளும்...
உவமை தமிழில் பரப்பரப்பாய் பதிவிட்டு...
பணம் எனும் காகித தாளிற்கு தரும் மதிப்பை...
மனிதத்திற்கு தர மறுப்பது ஏனோ !
நடிகர்களுக்கு தரும் மதிப்பை..
மற்றவர்களுக்கு தர மறுப்பது ஏனோ !
விழிமுன் நடக்கும் சிறு தவறையும்...
அதட்டி கேட்டிட எமக்கு நேரமில்லை.
சங்கம் வளர்த்த மண்ணில்..
சண்டைகளிடுவது ஏனோ !
விடியல் உண்டா !
அன்பாய் வாழ்ந்திட!