என் இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்
அற்புதமான கவிஞரே ! அகிலத்திற்கோர் எடுத்துக்காட்டே !
பொற்புடையக் கவிதைகளால் பொறுமையுடன் சாதிக்கும்
கற்றவரே ! எத்திக்கும் கருத்தோங்கும் கன்னித்தமிழே !
வெற்றிகளைக் குவித்திட்ட வீரத்தின் வியன்பொருளே !
இற்றைக்குப் பிறந்தநாள் இனிமையான நன்னாளாம் !
ஏற்றிடுவீர் என்வாழ்த்தை எந்நாளும் இவ்வுலகில் !