காப்பாற்றிய வாக்குறுதி

========================
ஊருக்குள் ஆங்காங்கே
ஆண்களுக்காய் திறக்கப்பட்ட
மதுக்கடைகள் மூலம்
பெண்களுக்கான் கண்ணீரை
வற்றா நதியாக்கியதில்
காப்பாற்றினார்கள்.
ஆட்சிக்கு வந்ததும்
தண்ணீர் பிரச்சினையைத்
தீர்ப்பதாகச் சொன்ன வாக்குறுதியை

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (18-Jul-16, 2:19 am)
பார்வை : 87

மேலே