தேடுகிறேன் 4
பொத்திவச்ச ஆசையெல்லாம்
பொதஞ்சிதான் போயிடுச்சோ
அடுக்கிவச்ச ஆசையெல்லாம்
அழிஞ்சிதான் போயிடுச்சோ
கண்கள் கண்ட கனவெல்லாம்
கலஞ்சிதான் போயிடுச்சோ
ஏத்திவச்ச தீபமெல்லாம்
அணைஞ்சிதான் போயிடுச்சோ
நீங்காத நினைவுகளையெல்லாம்
நித்தமும் தேடுகிறேன்
பெண்ணே
நினைவுகள் எல்லாம் மீண்டும்
நிஜமாக மாறுமா என்று...,!!!