என்ன பேர வைக்கறதுன்னு தெரிலயே

மாமா, நம்ம பாப்பா பொறந்து மூணு நாள் ஆகுது. நாளைக்கு எங்கள வீட்டுக்கு அழச்சிட்டு போறேன்னு சொல்லறீங்க. இன்னம் பாப்பா பேர பதிவு செய்யல. இன்னைக்கு 4 மணிக்குள்ள பேரச் சொன்னா அத நகராட்சி அனுப்பி வச்சிருவாங்களாம். அதனால நம்ம பையனுக்கு நல்ல இந்திப் பேரா வச்ச மாதிரி பாப்பாவுக்கும் ஒரு நல்ல பேராச் சொல்லுங்க மாமா.
@%@@
செல்வி, இந்த மூணு நாளா நானும் யோசிச்சுப் பாக்கறேன். எந்தப் பேரும் பிடிபடல.
@%@@@
சரி எதாவது புதுமையான பேராச் சொல்லுங்க. தமிழ்ப் பேரா மட்டும் இருக்கக் கூடாது.
@%#@
சரி சொல்லறஞ் செல்வி. ...... பாமா, பூமா, ஹேமா, சீமா இந்த மாதிரி பேருங்கள நெறையக் கொழந்தைகளுக்கு வச்சிருக்காங்க. ம்.. இரு, இரு . கொஞ்சம் பொறு. நேத்து ஆங்கில நாளிதழ்ல ஒரு புதுமையான பேரப் பாத்தேன். ம்..
இப்ப ஞாபகம் வந்திருச்சு. பேமா, பேமா. அடடா எவ்வளவு அழகான பேரு. அது இந்திப் பேரான்னு எனக்குத் தெரியாது. அர்த்தமும் தெரியாது. அதையே பாப்பாவு வச்சிருலாம்.
@#@@
மாமா, பேரோட அர்த்தத்தைப் பத்தியெல்லாம் கவலப்படத் தேவையில்லை. தமிழர்கள்ல 98% பேர் அவுங்க பிள்ளைங்களுக்கு இந்திப் பேருங்களத்தாம் வைக்கறாங்க. ஆனா அவங்கள்ல 10% பேர் கூட அர்த்தம் தெரிஞ்ச இந்திப் பேருங்கள வைக்கமாட்ட. நம்ம பாப்பா குடுத்து வச்சவ மாமா. பேமா -ங்கறது எவ்வளவு அருமையான பேரு. வாட் எ ஸ்வீட், ஸ்வீட் நேம் மாமா.
@@@@@@@@@@##@@@@@@@@@@
மொழிப் பற்றை வளர்க்க. சீரிளமை குன்றா செம்மொழி நம்மொழியின் வளமை, தொன்மை ஆகியவற்றை உலகிற்கு உணர்த்துவது கல்வியறிவுள்ள தமிழர்களின் கடமை.

எழுதியவர் : மலர் (18-Jul-16, 11:55 pm)
பார்வை : 301

மேலே