பிஞ்சுகளுடன் பிஞ்சாய்

பிஞ்சுகளுடன் பிஞ்சாய்!!!!
****************************
தரம் ஒன்றிலே
மூக்குச் சளி இழுத்த கையாலே
அ ,ஆ போட தடுமாறுகையில்
அவனை அணைத்தே
அக் கை பிடித்தே
அ, ஆ போட்ட ஆசான்!!

அம்மா என அழைத்தே
தொடர் மழையாய் அவன் அழ
தாலாட்டுப் பாடலாய்
தாழித்து தலை தடவி
அவன் கூடே
சிரித்து மகிழ்ந்த ஆசான்!!

விடை இல்லா வினாக்களும்
அர்த்தமில்லா சொற்களும்
பொய்யாய் வேசங்களும்
பொழிப்பாய் அழகாய்ச் சொல்லி
பிஞ்சி உள்ளங்களை
கவர்ந்திட்ட ஆசான்!

நாற்பது குழந்தைகளும்
சத்தமாய் ராகம் பாட
தாயை விஞ்சியே ரசித்து
பொய்யாய் அவர் முன்னே மகிழ்ந்து
தாயாய் சேவகியாய்
தனை மாய்க்கும் ஆசான்!!

ஒரு கூட்டுப் பறவையாகி
அவரோடே இவரும் சேர்ந்து
மணி ஐந்தும் செல்ல
மயக்கமே வந்துவிடும்
இவரைப் பார்த்து
இகழ்ந்துரைப்பார்- பாவம்
பாவப்பட்ட ஆசான் இவர்!!

பாசமிகு இவ்வாசான்
கற்றுத் தந்த பாடம்தான்
மனதில் தொட்டு இன்னும் நிற்கிறது
எட்ட நின்று நோக்காமல்
கிட்ட நின்று பார்த்துணர்ந்து
இவர் உண்மை நிலை அறிந்திடுவோம்!!

எழுதியவர் : ஜவ்ஹர் (19-Jul-16, 9:57 am)
பார்வை : 469

மேலே