நடைவண்டி
மூன்று சக்கரத்தோடு
மரத்தால் செய்த வண்டி இது
நடைவண்டியின் துணையோடு
முதல் அடி எடுத்துவைத்து...
தானே சிரித்து தம்மையும்
சிரிக்க வைக்கும் மழலையின்
பிஞ்சு பாதம் முன்னேறி செல்ல..
முதல் அடி எடுத்துக்கொடுத்த..
நடைவண்டி இது....
தலைமுறை தலைமுறையாக
பலரது வீட்டில் அன்று இருந்தது..
இந்த நடைவண்டி... நாகரீக வளர்ச்சியால்..
இப்போது வெவ்வேறு பெயர்களில்
நிறைய வந்தாலும்...
நம் பாரம்பரியத்தின் அடையாளம் இது..