விதையொன்று வேண்டும்
விதையொன்று வேண்டும்
இறைவா
வரமாய் இங்கு கிடைத்திடுமா?
மரமொன்று வேண்டும்
நல்ல மனிதம் அதில்
பூத்திடுமா?
கிளை பல வேண்டும்
அதில்
அன்பின் கனிகள் காய்த்திடுமா?
பழுத்த கனிகள்
இனித்திட வேண்டும்
அதில் ஒற்றுமையின் சுவை
தெரிந்திடுமா?
எங்கள் தமிழ் கொண்டவேர் பல வேண்டும்
அது
பகுத்தறிவு கவி பாடிடுமா?
சகோதரத்துவம் ( மண் )நிலம்
வேண்டும் -அது
பாசங்கொண்டு விளைத்திடுமா?
நல்ல ஜனநாயகம் மழை
பெய்திட வேண்டும்
அதில் தீண்டாமை களைந்திடுமா?
கேட்ட மரம் பரிசளிக்க வேண்டும் - எங்கள்
வாரிசுகளுக்கு கிடைத்திடுமா?
எங்கள் ஏக்கம் கண்டு
வரம் கொடுத்த
இறைவா
நல் விதையொன்றை
எங்கள் சமூகம் கரம் பெற்றிடுமா?
இங்கு விதைத்திடுமா?