நல்லதுக்கு காலமில்லை
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு
என்றிருந்ததெல்லாம், அந்தக்காலம்.
அதை காசு கொடுத்து
வாங்கிக்கொள்ளலாம், இன்றையக்காலம்.
ஏனெனில்
சாத்தான்கள், சர்வவல்லமை வாய்ந்தவை.......
இன்றும் இருக்கின்றன
சாத்தான்கள், உயிர்த்தெழுந்தபடியே....
கடவுள் மட்டுமே
நிரந்தரமாக, மரித்துப்போனவர்.
இதனாலேயே
இங்கு நல்லவர்களும்
கெட்டுப்போனால் தான், நல்லதென்கிறார்கள்.
ஏனெனில் நல்லதுக்குதான் காலமில்லையே.!