அன்பும் அறனும் உடையோர் வாழும்

பிறவா வரம் தாரும் - பெம்மானே
பிறவா வரம் தாரும்
மறுபடியும் பிறந்தால்
மலராய்ப் பிறக்க விடு! அல்லால்
பறவையாய்ப் பிறக்க விடு!

மானிடனாய் நான் பிறப்பதென்றால்
மறு பிறப்பில் நல்ல மனிதர்கள் வாழும்
வேற்று கிரகத்திலாவது பிறக்க விடு!
அன்பும் அறனும் உடையோர் வாழும்
வேற்று நாட்டிலாவது பிறக்க விடு!

அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு. 74 அன்புடைமை

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Jul-16, 9:39 pm)
பார்வை : 159

மேலே