அன்பு கணவருக்காக
இனியும் காலம் தாழ்த்த வேண்டாம்
இந்த தருணமே எனை கொல்லுகிறது
இத்தனை வருடம்
உனை பிரிந்து எப்படி வாழ்ந்தேன் என்று தெரியவில்லை
வாயோடு வாய் வைத்து முத்தங்கள் பல தா
எனை பிடித்த பிடியை விட்டுவிடாதே(தளர்த்தி விடாதே)
இறுக்கமாக (நன்றாக) கட்டிக்கொள்
உடல்கள் இரண்டோ
ஒன்றோ
என்பது அறியா (உணரா)
வண்ணம்
பாம்புகளை போல் பிண்ணிப் பிணையலாம்
உடல்கள் இரண்டல்ல
ஒன்றென்று நாம் வாழலாம்
கைகள் பத்தும் பத்தும் நாம் கோர்த்துக் கொள்ளத்தான்
உன் தோள்கள்
நான் சாயத் தான்
உன் மார்பு
நான் துயிலத் தான்
உன் மடி
நான் படுக்கத் தான்
அதேபோல்
என் உடல் பொருள் ஆவி
அனைத்தும்
உனக்கே உனக்காகத் தான்
என் வயிற்றில்
நீ ஸ்பரிசிக்கும்
அந்த தருணம்
நம் உயிரை
முத்தம் இடும்
அந்த நொடி
வெட்கப்படுவேனா!
இல்லை ஆனந்த கண்ணீர் வடிப்பேனா!
நீ தான் அறிவாய்...
என் பரம்பொருளே
உன் பாதச் சுவடை பின் தொடர்ந்து நடக்கிறேன்
உன் மலரடியில் படுக்கிறேன்
என் மார்பில் கை வைத்து கேள்
துடிக்கும் இதயமும்
உன் பெயரில் தான் துடிக்கும்
என் கண்ணீரை
துடைக்க
உன் கைகள்
இருக்கும் பொழுது
என் கைகள் என்ன செய்யும்!?
உனை கட்டிக்கொள்ளத் தானே செய்யும்
எந்த வலியை
வேண்டுமானாலும்
தாங்கிக்கொள்வேன்
ஆனால்
உனை பிரியும்
ஒற்றை நொடி வலி
உயிரை உருவி எடுக்கிறது
எனை பிரிய வேண்டுமாயின்
உன் கையை பிடித்துக்கொண்டு
உன் மடியில் கண்மூடுகிறேன்
எனை புதைத்து விட்டு
பிறகு
எங்கு வேண்டுமானாலும்
செல்.
நான் உயிரோடு இருக்கும் வரை
உன்னருகில் தான் இருப்பேன்
மண்ணோடு
போனாலும்
நம் பந்தம்
மாறாது
தீப்பந்தம்
பிடித்தாலும்
உயிர் தீபம்
அணையாது
தென்றலும்
புயலும்
நமை ஒன்றும் செய்யாது
நமக்கு எல்லாம்
ஒன்று தான்
நாம் சேர்ந்திருக்கையில்
நாம் இணைந்திருக்க
இருள் எது
பகல் எது
தேவை இல்லை
சுகம் சுமையாக
நீயின்றி
சுமை சுகமானது
நாமாகி
என் உடலிலுள்ள
ஒவ்வொரு அணுவும்
உன் உடலின்
ஒவ்வொரு அணுவிலும்
இணைந்திருக்க வேண்டும்
தூணிலும் இருப்பான்
துரும்பிலும் இருப்பான்
என் உடல் உயிர் பொருள் என
எங்கும் இருப்பான்
எதிலும் இருப்பான்
என் நாதன்
காற்றும்
சுவாசமும்
பிரிக்க முடியாதது போல
உன்னையும்
என்னையும்
பிரிக்க முடியாது
பிரித்தால்
சுவாசம் நின்றுவிடும்
காற்றோடு காற்றாகி
காதலால் நாம் வாழ்வோம்
~ பிரபாவதி வீரமுத்து