என்னவள்

சாளரம் நுழைந்த தென்றலே என் தென்றலே
நெஞ்சில் படிந்த வண்டலே என் வண்டலே
தூரல் காற்றில் தோகை விரித்த பொன் மயிலே
சாரல் மழை தினம் கொடுக்கும்
கரு முகிலே..!

கருவிழியால் சிக்குண்டேன் உனக்குள் நானே
வான்வெளியில் வலம் வந்தேன் உன்னால் நானே...!

மண்ணில் புதைந்த பொன் நீயடியே
கண்ணில் ஒளிந்த கனவு நீயடியே
சொல்லில் பொதிந்த பொருள் நீயடியே
ஏக்கம் ஏற்றும்
எழில் மங்கை நீயடியே..!

மலரில் தவழும் மென்மை நீயடியே
சுனையில் ஊரும் சுவைநீர் நீயடியே
காற்றில் கலந்த நறுமணம் நீயடியே
பசுங்கிளி பாடும்
பைந்தமிழ் பாட்டும் நீயடியே..!

சாளரம் நுழைந்த தென்றலே என் தென்றலே
நெஞ்சில் படிந்த வண்டலே என் வண்டலே
தூரல் காற்றில் தோகை விரித்த பொன் மயிலே
சாரல் மழை தினம் கொடுக்கும் கரு முகிலே..!

கருவிழியால் சிக்குண்டேன் உனக்குள் நானே
வான்வெளியில் வலம் வந்தேன் உன்னால் நானே...!

எழுதியவர் : தமிழ் குமரன்.மு (20-Jul-16, 9:50 am)
Tanglish : ennaval
பார்வை : 88

மேலே