என் இதயக் கதவு திறக்கிறது
பூ வரித்தபடி
நீ என்னை கொஞ்சம்
வெறுத்தபடி
என் கனவுகள் என்னை
கொன்றபடியும் நின்ற
காலமடி இது
மேகங்களும் உன் மீது
காதல் கொண்டு
இருக்க நீ யாரே
என்று பார்க்க மேகத்துக்கும்
காதல் தோல்வி வந்து
பொழிகின்றதடி அழிகின்ற
அளவுக்கு கண்ணீர்த் துளிகளை
மழைத் துளியாய்
உள்ளத்தை அலங்கரித்த
என் வார்த்தைகளும்
அவமதித்து வீட்டது
என்னை நீ என்னை
தூக்கி எரிந்த போது
கண்ணோடு பேசிய
காலங்கள் மறைந்து
கல்லோடு பேசத்தான்
முடிந்தது என்னோடு
சிதைந்த ஞாபகங்களை
திரட்டிய போது
பல முறை நீ
என்னை விரட்டியும்
என் வாழ்க்கையை புரட்டத்தான்
முடிந்ததே தவிர
என்னை விரட்டவே முடியவில்லை
இரட்டையனாய் இருந்த
என் உள்ளத்திலிருந்து உன்னை
என் மீது சாபகங்களும்
சாதகமானலும்
உன் ஞாபகங்கள்
எப்போது என்னை தலாட்டிக் கொன்டு இருக்கும்
பொத்துவில் அஜ்மல்கான்
இலங்கை

