அவள் ஒரு மழை

மேக மழையே நீ வர மறுக்கிற தினங்கள் ....
என் கடைசி பசியின்
இறுதி பருக்கைகள்...
என் கனவுக் கதறலின்
தெருமுனை கூட்டங்கள் ...
என் போலிக்கவிதைகளின் நிஜமான வரிகள்...
என் வைராக்கிய கொள்கைகளின்
வலுவிழந்த கெஞ்சல்கள்....
என் ஆழ்ந்த புரிதல்களின்
குறிப்பிடப்படாத வேற்றுமைகள்...
இப்படி என் உணர்வுகளை இரக்கமில்லாமல் கிளறிப்போடும்
அந்த நாட்களில்
அழுகைச்சாயத்தை கொண்டு புன்னகை வரைந்து கொள்கிறேன்..
நாளைக்கான
மீண்டும் ஒரு காத்திருப்பு..
எனக்குள் பல கோடிக்கணக்கான
ஒளி வருடங்களை தாண்டுமோர்
சக்தியை யாசிக்கிறது...
நம்பிக்கையே வாழ்க்கை! சரிதான் நின் வருகை உருவாக்கும் ஈரத்தில்
தான் தழைத்து வாழ்கிறேன்...
ஆகவே, நீ வராமல் போகும் சூரியனின் பூமி சுற்றுக்கள் என் மேல் பகலையும்,இரவையும் நீட்டி தெளிப்பதை கேட்டு தெரிந்துகொள்..
ஏனெனில்...
காதலின் காத்திருப்பு ...
ஒரு கொடும்வலியின் ஆனந்த தாண்டவம்...
கண்கள் விரிக்கிறேன் அடுத்த காலைக்காக......
வருகை மறுக்காதே என் அன்பே....