ராணுவ வீரர்களுக்கு நன்றி

எல்லையில் நின்று எல்லை
இல்லா இன்னல்களை அனுபவித்தாய்
இதயத்தை இரும்பாக்கி கொண்டாய்
தன் தாயை பிரிய,
இதயத்தை பலப்படுத்தி கொண்டாய்
எதிரிகளிடமீருந்து தன் தாய் நாட்டை
பிரியாது காக்க,
நீங்காத துன்பத்திலும் துப்பாக்கியை
நீ கையில் ஏந்தி
எதிரியை அழிக்கும் உண்மை
கடவுள்,
மண்ணில் நீ விழுந்தாலும்
விதையாய் விழுந்து விருச்சமாய் வளர்ந்து
மக்களை காக்கும் சக்தியே,

மரணத்தை கூட முன் பதிவு
செய்து கொண்ட வீரன் எங்கள்
ராணுவ வீரன்

"வீர வணக்கம்`

எழுதியவர் : அன்னை ப்ரியன் மணிகண்டன் (20-Jul-16, 1:06 pm)
பார்வை : 6443

மேலே