குழம்பிய மனிதம் முன்னேற்ற பாதையில் உலகம்

பல புதிய கண்டு பிடிப்பு ,
பலர் பாராட்டும் செயல்கள் ,
சகலரும் ஏற்க !
சாதனை என விளிக்க!

காலங்கள் ஓட ..
கண்டுபிடிப்பின் மறு பக்கம் -ஒரு பார்வை !
செயல்களின் பின்விளைவால் எதிர்வினை !

மறுபடியும் ஒரு பரிசீலனை ,
முற்றிலும் முரணாய் வேறு பல கருத்து !
பழங்கால வழக்கமே மீண்டும் நிறுவப்பட ,
அதுவும் அரியதாய் ஆகிப் போக ,
விலையும் அதற்கேற்ப ஏறி போக !
.......
பசுமை புரட்சி -அன்றொரு காலத்தில் !
'குழம்பிய மனிதம் ! முன்னேற்ற பாதையில் உலகம் !'

எழுதியவர் : மகா !! (20-Jul-16, 1:06 pm)
பார்வை : 134

மேலே