பாற்கடலும் பார்க்கும் கடலும்
![](https://eluthu.com/images/loading.gif)
பாற்கடலும் அது சூழ்ந்த வைகுண்டமும்
தத்தம் பெருமையை உந்தன்
தண்மை பொருந்திய
கண்களில் உள்ள
கண்ணிமையின் அழகினில்
நிறைந்த பெண்மையில் இழக்கும்
நம்மிருவரும் தோள் சேர்ந்து
நடந்து வரும் தோரணையில்
சொர்க்கத்தின் தோரணை வாயிலும்
பொறாமை கொள்ளும்
நம் இன்பத்தை கண்டு