காதல் சுகம்

எத்தனை அழகு இந்த காதல்
உன்னாலே அறிந்து கொண்டேன்

பெண்மையின்
சுகம் அறிந்தேன்
பெண்ணே உன்னாலே
காமத்தால் அல்ல
காதலால்

நீண்ட நெடுஞ்சாலை
இரவின் வாசனையோடு
உன்னோடு கைகோர்து
நடப்பது ஒரு சுகம்

உறக்கமே இல்லாத போதும்
உன் மடியில்
உறங்குவது ஒரு சுகம்

இடைவெளி இல்லாமல்
இரவு முழுவதும்
உன்னோடு பேசுவது ஒரு சுகம்

என் மடியில்
உனை சுமப்பது ஒரு சுகம்
உன் மடியில் நீ எனை சுமப்பது
ஒரு சுகம்
உன் தோளில்
தலை சாய்ப்பது ஒரு சுகம்
நீ கோபப்பட்டாலும் அதை நான்
ரசிப்பது ஒரு சுகம்

உன் வெட்கம் ஒரு சுகம்
உன் வியர்வை
நனையும் கன்னத்தை
கில்லி கொஞ்சுவது ஒரு சுகம்

உன் சிறுபிள்ளை பேச்சை
கேட்பது ஒரு சுகம்
சில சமயம் உன் தாய்மையின்
உள்ளம் காண்பது ஒரு சுகம்

அழுதாலும் அடித்தாலும்
நீ வேண்டாம் போ என்று சொன்னாலும்
மறுகனமே மடி சாய்ந்து
மன்னிப்பு கேட்டு
எப்போதும் என்னோடு நீ இரு என்று சொல்லும்
உன் உண்மையான காதல் ஒரு சுகம்

நீ தரும் சுகம் எல்லாம்
தீராத தாகமடி
நீ இல்லை என்றால்
எனக்கேது வாழ்கையடி

இனம் புரியாத காதல்
இல்லை இது
இதயம் பரிமாறிய காதல்

எத்தனை முறை உனை
காதலிக்க வேண்டும் சொல் காதலிக்கிறேன்
அத்தனை முறையும் என்னோடு மட்டும் நீ இரு

உன் பெயரோடு என் பெயர் சேர்வது எப்போது
நம் பெயரை நம் பிள்ளைகள் சேர்ப்பது எப்போது

எனை விட்டு போகதே சகியே
போனால் என் உயிர் கொண்டு போய் விடு என் தாய்க்கு பின் எனக்கு உயிர் கொடுத்தவள் நீ அல்லவா

சாகா வரம் ஒன்று மட்டும் போதும்
உனக்கும் எனக்கும்
காதலோடு சதா வாழலாம்
வேறென்ன வேண்டும் நமக்கு

இரவுகளை தொலைக்கலாம்
கனவுகளை கலைக்களாம்
காதலை வளர்க்களாம்
காதலித்து வாழலாம்
காதலோடு சாகலாம் .


அ .ஏனோக் நெஹும்

எழுதியவர் : ஏனோக் நெஹும் (21-Jul-16, 11:13 pm)
Tanglish : kaadhal sugam
பார்வை : 139

மேலே