அது ஒரு பொற்காலம்
![](https://eluthu.com/images/loading.gif)
மலரும் நினைவுகள்!!
******************************
மகிழ்ந்திடும் பலவும்
சின்னச் சின்ன மன உழைவுகள் சிலவும்
மறந்திட முடியா கனவுகள்
இன்றும் நிழலாடுகின்றன.
பல கூட்டுப் பறவைகள்
பள்ளிக்கூடமே
வேடந்தாங்களாய் கூடிட்ட
வெண்ணிற பட்சிகள்!!
அரிவரி தொடங்கி
அறியா பல கலை பயின்று
ஆடிப்பாடியே களித்த
அசைபோடும் நினைவுகள்!!
பள்ளி விதி முறை மீறி
பல மீறல் செய்தும்
எம்மாசான் உதிர்த்த மொழி கேட்டு
கறை களைந்திட்ட பொற்காலம்!!
மாமர நிழலும்
மரத்தடி வகுப்பும்
மாவடுக்காய் கல்லெறியும் -அந்நாள்
இன்றும் என்றும் சுவைக்கும்!!
சிறு உண்டிச் சாலை
சுவைக்கத் தந்திட்ட உணவில்
பகிர்ந்தே கடித்துப் பிரித்துண்டு
பழகிய அக் காலம் இனிமை!!
எம்மாசான்களுக்காய் - அறியா
பட்டம் பல சூடி
மறை பொருள் பல பேசி
மகிழ்ந்த அந் மலரும் நினைவுகள் !!
இனியொரு காலம்
இனித்திடும் அழகிய அக்காலம்
எத்தவம் செயினும்
அவ்யுகம் இனி வருமா?