ஆனந்த கண்ணீர்

அன்புள்ள ரோஜா........
பிறக்கும்போதே
நான் அழுதேன்.
இறந்தபின்
ஊரார் அழுவார்கள்.
ஆனால் நீ.......
பிறக்கும்போதும்
அழவில்லை.
இறந்தபின்
உனக்காய் நாங்களும்
அழவில்லை.
கண்ணீருக்கு
விடைகொடுத்து
புன்னகைக்கு
விருந்து கொடுத்த
உனக்கு.....
நான் என்ன கொடுப்பேன்.
என்
ஆனந்த கண்ணீரை தவிர.............