அழகுப் புதையல்
அவளோ அன்னார்ந்து
பார்க்கின்ற அம்புலி - நானோ
அன்றாடம் தோற்கின்ற வெம்புலி
அவளோ பூப்பெய்தி
பூத்திருக்கும் கன்னி - நானோ
காப்பெய்திக் காத்திருக்கிறேன்
வைத்துவிட்டு கண்ணி
அவளோ காதில் வைரத்தை
அணிந்திருக்கும் கனி - நானோ
காதல் வைரசை
சுமந்திருக்கும் கணினி
அவளோ அழகுப் புதையலை மறைக்கமுடியாமல்
தவிக்கும் மங்கை -நானோ
ஆசைக் குவியலை அடக்க முடியாமல்
தவிக்கும் கங்கை
அவளோ மல்லிகையில் பூச்சூடி
மாளிகையில் தூங்குபவள் - நானோ
மலிவான விலை தேடி
மளிகையை வாங்குபவன்
அவளோ கடலைக்
காய்ச்சிக் குடிக்கும் ஆகாயம் - நானோ
கடலூரில் காய்ச்சிக்குடிக்கிறேன் சாராயம்