தினம் ஒரு காதல் தாலாட்டு - ஜோடி பாடல் 53 = 171

“காற்றே பூங்காற்றே
நீ என்னை நெருங்கு சற்றே
ஊற்றே தேன் ஊற்றே
உன்னிதழில் ஊறப் பார்த்தேன்..!”


கூடு சிறு கூடு
இது குருவி கட்டிய வீடு
கூலி கேட்கும் பழக்கம்
குருவிக்கு கிடையாது

காடு கருங்காடு
காட்டில் மூலிகையோடு
வீச கிடைக்கும் காற்று
நாட்டில் கிடைக்காது

சொல்லு நீ சொல்லு
மங்களப்பூவே நின்னு
மாதம் முழுதும் எனக்கு
மனம் தருவாயா என்று

மலராக இருந்தால்
மனம் நான் தருவேன்
பூவையாகிவிட்டேன்
அறையைத்தானே தரமுடியும் !



மயிலு ஆண் மயிலு
தோகைவிரிக்கும் அழகு
கார்மேகம் குடைபிடித்தால்
மயில் நடனம் அரங்கேறும்

குயிலு கான குயிலு
குயில்பாடும் அழகு
ஊருலுகம் எங்கெங்கும்
கேட்காத தேவகானம் !

பயிலு நீ பயிலு
பலவித கலைகள் பயிலு
விரகங்கள் நான் நடத்த
வந்து பூமெத்தையில் புரளு !

எழிலு இயற்கை எழிலு
இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் சென்று
விரதங்கள் நானிருந்து
விரைவில் உன்னை கைபிடிப்பேன்!

எழுதியவர் : சாய்மாறன் (24-Jul-16, 4:38 pm)
பார்வை : 88

மேலே