இன்றைய காதல் சின்னங்கள்

இன்றைய காதல் சின்னங்கள்

என் காதலை ஏற்க மறுத்தவள்
இனி எதற்காக வாழவேண்டும்
வாயோடு கழுத்தையும் சேர்த்து வெட்டு - அரிவாள்

எனக்கு கிடைக்காத அழகை
இன்னொருவன் அடையலாமா?
முகம் சிதைத்து உயிர் பறி - அமிலம்

என் விருப்பம் நிராகரித்தவள்
இனி மானத்தோடு வாழலாமா?
அவளது அந்தரங்கத்தை
ஆபாசப் பக்கங்களில் பதிவேற்று
தானாகவே தற்கொலை
செய்து கொள்ளட்டும் - முகநூல்

பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவியானாலும்
என்னை மணம்முடிக்க சம்மதிக்காதவள்
எதற்கு அடுத்தவனுடன் வாழவேண்டும்
ஏமாற்றி தனியிடம் அழைத்துசென்று
பாலியல் வன்முறைக்குப்பின்
கழுத்தை இறுக்கி கொல் - துப்பட்டா

இன்றைய காதல் சின்னங்களின்
ஆணிவேர்கள்
காதலற்ற காமத்தின் உச்சம்
உடலின்ப வெறியின் மிச்சம்
தன்னிலை உணரா சமூக
மிருகங்களின் இச்சை
பெண்மையை அடையும் பேராசையின் எச்சம்

எழுதியவர் : சூரியகாந்தி (24-Jul-16, 1:13 pm)
சேர்த்தது : சூரிய காந்தி
பார்வை : 196

மேலே