நீ சந்து, நீ சந்து, இங்க வாடா

நீ சந்து, நீ சந்து, இங்க வாடா
@@@@@
யாரப் பாட்டிம்மா நீ சந்து, நீ சந்து-ன்னு கூப்புட்டுடே இருக்கறீங்க?
@@@@@
நா யாரடி தங்கம் கூப்படப் போறேன், எம் பேரனத்தாம். எம் மக
வெண்ணிலாவும் அவளோட ஊட்டுக்காரரும் பீக்காருல இருந்து அஞ்சு
வருசம் கழிச்சு எஞ் செல்லப்பேரனக் கூட்டிட்டு வந்திருக்காங்க. அவம்
பேரு நீ சந்து-ன்னு சொன்னாங்க.
@@@@@
பாட்டிம்மா, உங்க பேரம் பேரு நீ சந்து இல்ல பாட்டிம்மா. நிஷாந்த் அவம் பேரு. அதிகமா
சினிமாப் பாக்கறவங்களும் படிச்சவங்களும் பிள்ளைங்களுக்கு இந்திப்
பேருங்களத்தான் வச்சுக்கறாங்க. இப்ப அது தான் இப்ப தமிழர்களோட
நாகரிகம்.
@@@@
அட அவுங்க என்ன பேரையோ வச்சுட்டுப் போகட்டும் என்ன மாதிரி
பட்டிக்காட்லெ பொறந்து வளந்து பட்டிகாட்லயே இருக்கறவளுக்கெல்லாம்
அந்த மாதிரி பேரையெல்லாம் சரியாச் சொல்லமுடியாதடி தங்கம். சரி, நீ
சந்து –ங்கற அந்தப் பேருக்கு என்னடி அர்த்தம்.
@@@@@
பாட்டிம்மா, அந்த மாதிரி பேருங்கள நானும் கேள்விப்பட்டிருக்கேன். எங்க
பக்கத்துவீட்டு இந்தி ஆசிரியர்கிட்ட நிஷாந்த் –ங்கற பேருக்கு என்ன
அர்த்தம்னு போன வருசமே கேட்டன். நிஷாந்த் –ன்னா அமைதியான,
”விடியற்காலை, வைகறை, இரவின் முடிவு”ன்னு பல அர்த்தங்கள்
இருக்குதுன்னு சொன்னாரு.
@@@@
அடி ஆத்தாடி. நல்ல அர்த்தமெல்லாம் இருக்குது. ஆனா எல்லாராலயும்
அந்த மாதிரி பேருங்களச் சரியாச் சொல்ல முடியுமா?
@@@@@@@@@@@
முடியாது பாட்டி. நெறையத் தமிழர்கள் அர்த்தம் தெரியாத, உச்சரிக்க
முடியாத பேருஙகள் வச்சுக்கறதாம் பெருமையா நெனைக்கறாஙக
பாட்டிம்மா. சிலரு சினிமா மோகத்திலெ பெண் கொழந்தைக்குப் பவித்ரா
–ன்னு பெரு வச்சிருவாஙக. அதச் சரியா உச்சரிக்கவும் தெரியாது, அதுக்கு
என்ன அர்த்தம்னு தெரியாது. இது தற்கால தமிழர்களோட நிலை. (Paivitra
= প঵িত্র ; പവിത്ര ; पवित्र ; பவித்ர ; ਪਵਿਤ੍ਰ ; પવિત્ર ; ಪವಿತ್ರ ; పవిత్ర = Pure = தூய்மையான, புனிதமான,
குற்றமட்ட) ஆனா இந்தப் பேரப் பிள்ளைஙக்ளுக்கு வச்சிட்டு Bavithra-ன்னு கூப்புடுவாங்க.
இந்தப் பேர அவுஙக் நடத்தற கடைக்குப் பேரா வச்சிருந்தா Bavithra –ன்னே வெளமபரப்
பலகையலயும் எழுதுவாங்க. இதுதாம் பாட்டிம்மா நம்ம தமிழர்களோட நாகரிகம்
@@@@@@@@@@@@@@@@@@@
Nishant or Nishanth is a common Indian male given name derived from the Sanskrit name for dawn or the end of night. In Sanskrit Nishaa (निशा) means "Night" and Anta (अन्त) means "End", which can be alliterated as the end of night or the first ray of the morning sun. Wikipedia
End of night; Dawn; Peaceful; Early morning
தமிழ் அர்த்தங்கள்: நன்றி Universal Delux Dictionary.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நான் சிரமப்பட்டு இந்தத் துணுக்கை பதிவு செய்வது யாரையும் சிரிக்க வைக்க
அல்ல. மொழிப் பற்றை வளர்க்க. எந்த மொழியையும் தரம் தாழ்ந்தது என்று
என்றும் சொல்லமாட்டேன். எனினும் பாரதியின் ”யாமறிந்த மொழிகளிலே”
என்ற கவிதை என் நெஞ்சில் பதிந்து நிலைபெற்று இருக்கிறது. ஒரு
எழுத்தாளன் அந்த மொழியின் வீழ்ச்சிக்குத் துணை போகக்கூடாது. வர்த்தக
நோக்கில் மொழியைச் சீரழிப்பவர்களுக்கும் அவர்கள் தவறைச்
சுட்டிக்காட்டி.அவர்களை நல்வழிப்படுத்த எண்ணவேண்டும். சான்றாக
வர்த்தகர்கள் லோன் மேளா, டபுள் தமக்கா என்ற சொற்களைப்
பயன்படுத்துவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

எழுதியவர் : மலர் (24-Jul-16, 6:43 pm)
பார்வை : 176

மேலே