புதுமையான விடியல்

புதுமையான விடியல் ....

யார் அவனோ?
விடையில்லா விடுகதைக்கு
விடியல் என்று பெயர்வைத்தவன்!

கதிரவன் ஓடி மறைகிறான்
நாளை என்றால் முகம்சுழிக்கிறான்
இது தான் விடியலோ?
சந்திரன் சத்தமில்லாமல் எண்ணி நகைக்கிறான்!

இந்த மனிதர்களுக்கு
இதே இடைவெளிதான்
பகல் இரவாம்...
தூங்குவோர் உறங்கட்டும்
விழித்திருப்போர் எண்ணட்டும்
புது விடியலை!

வேரூன்றி வளர்ந்தமரம்
பல பண்டிதர்கள வாழ்ந்த இடம்
யார் தீட்டிய கோடாரியோ?
நீ விட்டேரிந்தால் விழுமே
மனிதம்
அல்லது உன் தலைமீதே!


யார் குருதி சுவைக்க இந்த கோடாரியோ?
விட்டெறிந்து நீ பிளப்பது
மரம் என்ற மனிதம் மட்டுமல்ல
நம் வாரிசுகளையும் தான்!

தீண்டாமை நஞ்சு தீட்டிய கூரிய கோடாரியென்ன உன் ஆயுதமா?
அறியாமை தோல் போர்த்திய நீ யாரோ?

பகுத்தறிவு பாலூட்டி
வளர்த்த நெஞ்சம் எங்கள் தமிழ்த்தாய்
வள்ளுவர் குறள்கொண்டு
பிரபஞ்சம் போர்த்திய தமிழ்சான்றோர் எங்கள் பலம்

"யாதும் ஊரே யாவரும் கேளிர் "என்று முழங்குமே
எங்கள் பாட்டன் கூட்டம்
கைகோர்ப்போம் சகோதர பாசத்துடன்
நல்ல மனிதமே - எங்கள் மொழி
அதுவே நம் தமிழ் கல்வி என முழங்கட்டும்!

கோடாரி பலி ஆகட்டும்
எங்கள் மரம் தழைக்கட்டும்
மறைந்த கதிரவனே
நாளை கொண்டு வந்துவிடு புதுவிடியலை ..

கதிரவனே! சந்திரனிடமுமம் கூறி விடு எங்கள் அவ்வை நல்வழியே அந்த விடுகதைக்கு விடையென
"நல்வழி வெண்பா :
சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்
பட்டாங்கில் உள்ள படி "

எழுதியவர் : மருதுபாண்டியன். க (24-Jul-16, 11:10 pm)
சேர்த்தது : மருதுபாண்டியன்க
பார்வை : 418

மேலே