அழகிய திருமகள்

அழகிய திருமகள்...

முத்துப்பல் அல்லியவள்
தெத்திப்பல் ராணியவள்;
கன்னல் நிறக் கன்னியவள்
தேவலோக ரம்பையவள்.....!

பெண்ணிற்கு பெண்ணாக
ஆணிற்கு இணையாக
பெண்மைக்கு தாயாக
பெற்றெடுத்தாள் அன்னையவள்....!

அழகில் ஓவியமாய்
அறிவில் காவியமாய்
அகிம்சை பேரொளியாய்
கருணை ஆழ்கடலாய்
மலர்கின்ற மங்கையவள்........!

பூவுக்குள் பூகம்பமாய்
மனதிற்குள் மாணிக்கமாய்
பாெறுமையில் சிகரமாய்
அமைதியில் துருவமாய்
மிளிர்கின்ற சக்தியவள்......!

அன்பில் நிலவாெளியாய்
பண்பில் குலவிளக்காய்
துணிவில் சுடர்ஒளியாய்
வாக்கில் உத்தமியாய்
வாழ்கின்ற மனிதியவள்......!

கற்பில் கண்ணகியாய்
நட்பில் தாரகையாய்
சிரிப்பில் பகல்நிலவாய்
சினத்தில் கவிமாெழியாய்
ஜாெலித்திடும் இறைவியவள்......!

அவள் அழகை வடித்திடவோ
வார்த்தையில்லை என்னிடத்தில்
தன் அழகை கண்டிடவோ
விழிப்பார்வையில்லை அவளிடத்தில்.....!

முகமெங்கும் புன்னகையாய்
அகமெங்கும் தோழமையாய்
நம் விழியில் தோன்றிவிட்டாள்
அழகுத் திருமகளாய்............!

எழுதியவர் : அன்புடன் சகி (25-Jul-16, 6:06 am)
பார்வை : 486

மேலே