காலம்
நாளையை நினைத்து
நேற்றை மறந்து
இன்றே உனது என்பதை மறந்திடாதே -தோழா!
நேற்றையே நினைத்து
இன்றை மறந்தால்
நாளை என்பது உனக்கில்லை தோழா!
எதற்கு கவலை?
எதையும் எதிர் கொள்ள துணிவு இருந்தால்...
உனக்கான நிமிடங்களை
சரியாக பயன்படுத்திக் கொண்டால்...
துன்பம் உன்னை நெறுங்குமோ?
உனக்காக இருக்கும் காலத்தை
எதற்காகவும் வீண் செய்யாதே மனிதா!