பிறையில் கறை

இக்கதையில் வரும் கதாபாத்திரங்களும் நிகழ்வுகளும் வெறும் கற்பனையே.

பிறையில் கறை ..

1.

"ஒரு தேவதை வந்து விட்டாள் என்னைத் தேடியே .. வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்கத் தேரிலே" என்ற பாடலைக் கேட்டவாறே, வேளச்சேரி பேருந்து நிலையம் எதிர்புறம் இருக்கும் வங்கி ஒன்றிலிருந்து வெளியே வந்த வைத்தீஸ்வரன் மேடவாக்கம் வரை செல்லும் ஷேர் டேக்ஸி வரக் காத்திருந்தான்.

மாலை நேரம் ஆகியிருந்தபடியால் சாலைகள் எங்கும் வாகனங்கள் ஒன்றையொன்று முந்திச் செல்ல முயன்றதில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது. அதில் சிக்கியிருந்த பல வாகனங்கள் ஆங்காங்கு ஸ்தம்பித்து நின்றிருந்தன.

ஏராளமான மக்கள் அவர்கள் போகவிருக்கும் பேருந்து வரக் காத்திருந்தனர் அங்கு. ஸ்தம்பித்து நின்ற வாகனங்கள் சில தாறுமாறாக இருந்ததால், போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தவிர வேறு சிலரும் வழியில் நின்று வாகனத்திலிருந்தவர்களை திட்டிக்கொண்டே, நிலைமையை சீர்திருத்துவதில் ஈடுபட்டிருந்தனர். அவர்களின் தொடர் முயற்சியின் பலனாக போக்குவரத்து ஒருவழியாக சீரமைக்கப்பட்டு, வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக முன்னேறிச் சென்றன.

அடுத்தடுத்து வந்த மூன்று ஷேர் டேக்ஸியை கண்டதும் தலை தெறிக்க ஓடினர் மக்கள் இடம்பிடிப்பதற்கு. வைத்தீஸ்வரன் பொறுமையுடன் காத்திருந்தான்.

எங்கிருந்தோ திடீரென அவன் முன் வந்து நின்றது ஒரு தனியார் வாகனம். அதில் ஓட்டுநர் இருக்கையருகில் இருந்த ஒருவன் கார் ஜன்னல் வழியே தலையை நீட்டி, “மேடவாக்கம் .. மேடவாக்கம்” என்று உறக்கக் விளம்பவும், வைத்தீஸ்வரன் காரின் கதவைத் திறந்து, அதன் உள்ளில் ஏறிக்கொண்டான். அவனை அடுத்து வேறொருவனும் ஏறிக்கொண்டான். இதற்கிடையில், ஒரு போலீஸ் கையிலிருக்கும் தடியால் காரில் அடித்து, “எடுறா வண்டியை” என்று அதட்டவும், நகர்ந்தது அந்த வாகனம்.

வேளாச்சேரி இரயில் நிலையம் மேம்பாலத்தருகில் கார் நின்றது. அங்கிருந்த ஒரு யுவதி காரில் ஏறி, காரின் கதவை அடைக்கும் பொழுதே கார் நகர்ந்ததால், தன் கட்டுப்பாட்டை இழந்த அவள் வைத்தீஸ்வரன் மேல் விழ, “பார்த்து உட்காரம்மா” என்று சொல்லி அவன் சற்று நகர்ந்து உட்காரவும், அவள் வைத்தீஸ்வரனை ஒட்டி அமர்ந்துகொண்டாள். வைத்தீஸ்வரனை அடுத்திருந்த மனிதரின் உடல் சற்று பருமனாக இருந்தமையால் அவனும் சற்று நகர்ந்து அமர்ந்து கொள்ள வழியின்றி ஒன்றும் சொல்லாமல் மௌனமாகவே இருந்தான்.

மேம்பாலத்தை கார் கடக்கும் பொழுதே, ஓட்டுநர் இருக்கை அருகில் அமர்ந்திருத்தவன், “பள்ளிக்கரணை வரை பத்து ரூபாய். மேடவாக்கத்திற்கு இருபது ரூபாய்” என்று எல்லோரும் கேட்கும்படி கூறினான் . “காமாட்சி ஆசுபத்திரி ஜங்க்ஷன்ல இறங்கணும்” என்று வைத்தீஸ்வரன் அருகில் அமர்ந்திருந்தவர் கூற, “பள்ளிக்கரணை வரைக்கும் பத்து ரூபா தான்” என்றான் ஓட்டுநர்.

வழியில் இருந்த ஒருசில குழிகளை கார் கடந்து செல்லும் பொழுது ஏற்பட்ட குலுக்கலில் வைத்தீஸ்வரன் மீது ஓரிருமுறை அவள் தோள் உரசியது. வைத்தீஸ்வரன் அவளை நோக்கவும், “தி ரோட் இஸ் புல் ஆப் பாத்தோல்ஸ்” என்று ஆங்கிலத்தில் சொல்ல, “எஸ் எஸ்” அவனும் தலையாட்டி ஆமோதித்தான்.

காமாட்சி ஆசுபத்திரி ஜங்க்ஷனில் அந்த பருத்த மனிதர் இறங்கவும், அவரிருந்த இடத்திற்கு நகர்ந்து அமர்ந்து கொண்டான் வைத்தீஸ்வரன். அங்கிருந்து வேறொருவர் காரில் ஏறிக்கொள்ளவும், அந்த யுவதியும் சற்று நகர்ந்து வைத்தீஸ்வரனை ஒட்டியபடியே அமர்ந்து கொண்டாள்.

“அடுத்து எங்கு நிறுத்தணும்ன்னு சொல்லுங்க” என்றபடியே காரின் வேகத்தை அதிகரித்தான் ஓட்டுநர். ஒருவரும் அதற்கு பதில் கூறவில்லை. ஜெருசலம் காலேஜ், நாராயணபுரம், பள்ளிக்கரனை தாண்டி கார் சென்று கொண்டிருக்கும் பொழுது “ஆயில்மில் ஸ்டாப்ல நிறுத்தப்பா” என்று கடைசியாக ஏறியவன் சொல்ல, கார் ஆயில்மில் வந்ததும் நின்றது.

அவன் இறங்கிக்கொண்டபின், பின்னிருக்கையில் வைத்தீஸ்வரனும் அந்த யுவதியும் மட்டுமே இருந்தனர். மூவர் இருக்கையில் அவர்கள் இருவர் மட்டுமே இருந்ததால், வைத்தீஸ்வரன் தன் உடலோடு உடல் உரசாதபடி இருக்க அவள் சற்று நகர்ந்து அமர்ந்து கொள்வாள் என்று எதிர்பார்த்தான். ஆனால் அவள் சற்றும் அசைந்து கொடுக்ககவில்லை. “என்ன ஜென்மமோ இவள்” என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டான்.

கார் மேடவாக்கம் சோழிங்கநல்லூர் சந்திப்பு வந்ததும் நின்றது. “இங்கு இறங்கிக் கொள்ளுங்கள்” என்று ஓட்டுநர் சொல்லவும், தன் கைப்பையைத் திறந்து அதிலிருந்து இருபது ரூபா நோட்டு ஒன்றை எடுத்துக் கொடுத்துவிட்டு அவள் வெளியேறும் பொழுது, வைத்தீஸ்வரன் நூறு ரூபா நோட்டை நீட்டியவாறே, காரில் இருந்து இறங்கி விட்டான்.

“சில்லறையா கொடுங்க சார்” என்று ஓட்டுநர் சொல்லவும், வைத்தீஸ்வரன் “என்னிடம் சேஞ்சு இல்லையே” என்று கூற, “ஐ வில் கிவ் யூ” என்று சொல்லி அவள் கைப்பையிலிருந்து ஒரு ஐம்பது ரூபா நோட்டும் ஐந்து பத்து ரூபா நோட்டும் வைத்தீஸ்வரன் கையில் கொடுத்து அவனிடமிருந்து நூறு ரூபாயைப் பெற்றுக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

அப்பெண் கொடுத்த பணத்திலிருந்து இருபது ரூபாய் காரோட்டியிடம் கொடுத்துவிட்டு, மீதி பணத்தை அவன் பர்சில் வைக்கும் பொழுது, பணத்துடன் ஒரு விசிட்டிங் கார்டு இருப்பதைக் கண்டான். அதில் பவித்ரா@ என்ற பெயருடன் ஒரு மொபைல் நம்பரும், அதன் கீழ் " எவெரிதிங் ஹேப்பண்ஸ் ஃபார் எ ரீஸன்" என்றொரு வாசகமும் அச்சடிக்கப்பட்டிருந்தது.

அவளுக்கு பவித்ரா என்பவள் கொடுத்த கார்டா இருக்கும். தவறுதலாக பணத்தோடு கார்டும் வந்திருக்கலாம் என்றெண்ணி அதை அவளிடம் கொடுக்க நினைத்தான். அதற்குள் சற்று தூரம் அவள் சென்று விட்டிருந்தமையால் , வைத்தீஸ்வரன் அவளை துரிதமாக பின்தொடர்ந்து சென்று, "ஹலோ .. நீங்க கொடுத்த பணத்துடன் இந்த கார்டும் இருந்தது. இந்தாங்க" என்று சொல்லி விசிட்டிங் கார்டை அவள் முன் நீட்டினான்.

அதை அவள் பெற்றுக்கொள்ளாமல், "ஐ ஆம் பவித்ரா அன்ட் இட் இஸ் மை மொபைல் நம்பர். கீப் இட் வித் யு .. எவெரிதிங் ஹேப்பண்ஸ் ஃபார் எ ரீஸன்"என்று சொல்லிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்திற்குள் மறைந்து சென்றாள்.

2.

"முன்பின் தெரியாத ஒரு பெண்ணின் விசிட்டிங் கார்டை தான் ஏன் வைத்துக்கொள்ள வேண்டும் " என்று மனதில் நினைத்தவாறே, சர்வீஸுக்கு கொடுத்திருந்த அவன் பைக்கை வாங்க சோழிங்கநல்லூர் செல்லும் சாலைக்குள் நுழைந்தான் வைத்தீஸ்வரன்.

ஒர்க்ஸ் ஷாப்பிற்குள் நுழைந்த வைத்தீஸ்வரன் அங்கு பணிபுரியும் ஒரு சிறுவனைப் பார்த்து, “ராஜு எங்கப்பா” என்று கேட்க, “அதோ அங்கே இருக்காரு” என்று அவன் முதலாளி இருக்குமிடத்தை சுட்டிக் காட்டினான்.

வைத்தீஸ்வரன் அங்கு சென்றடைவதற்குள் ராஜு வைத்தீஸ்வரன் அருகில் ஓடி வந்து, “உங்க பைக்கு ரெடியா இருக்கு சார்” என்று சொல்லி அவனது பைக் இருக்குமிடத்திற்கு அழைத்து சென்றான். “சொன்ன வேலையெல்லாம் செய்துவிட்டாய் அல்லவா” என்று வினவ, “எல்லா ஜாபும் கம்ப்ளீட் சார்” என்றான்.

“சரி எவ்வளவு தரணும், சொல்லு” என்று வைத்தீஸ்வரன் வினவ, “உங்களிடம் எப்பவாவது அதிகமா வாங்கி இருக்கேனா சார்” என்று சொல்லி ஒரு சிறிய பேப்பரை வைத்தியிடம் கொடுத்துத்தான். “வண்டில பெட்ரோல் இல்லைன்னு தெரிஞ்சுது. ரெண்டு லிட்டர் போட்டுருக்கேன் சார்” என்றும் கூறவே , ”ஓகே .. ஓகே” என்ற வைத்தி பேப்பரில் குறிப்பிட்டிருந்த பணத்தை கொடுத்துவிட்டு பைக்கில் ஏறி அமர்ந்து ஸ்டார்ட் செய்து பள்ளிக்கரணையில் அவன் தங்கியிருக்கும் இல்லம் நோக்கி விரைந்தான்.

இரண்டுநாள் பிறகு ..

வைத்திக்கு "டிரைக்கிளீனுக்கு கொடுத்த துணியெல்லாம் ரெடி” என்று . டிரைக்கிளீன் கடையிலிருந்து ஃபோன் வந்தது. “நாளை வந்து பெற்றுக்கொள்கிறேன்" என்று பதிலளித்தான்.

மறுநாள் ஆஃபிஸ் வேலை முடிந்து டிரைக்ளீன் கடைக்குச் சென்று துணிகளை வாங்கிக்கொண்டான். பணம் கொடுக்கும் பொழுது, அவன் பர்ஸிலிருந்து அந்த விசிட்டிங் கார்டு கீழே விழவும், அதை எடுத்து பர்சில் வைத்துக் கொண்டு பைக்கில் வரும்போது மீண்டும் பவித்ரா இறுதியாகக் கூறிய “கீப் இட் வித் யு .. எவெரிதிங் ஹேப்பண்ஸ் ஃபார் எ ரீஸன்" என்ற வார்த்தைகள் அவன் செவிகளில் ஒலித்தன. வேகமாக வீட்டிற்கு வந்தான்.

மொட்டைமாடிக்குச் சென்று, கார்டில் இருந்த எண்களை மொபைலில் பதித்த சில நொடிகளில் மறுமுனையிலிருந்து "ஹலோ" என்று குரல் கேட்டது.

பவித்ராவின் குரலிலொரு இனிமை இருப்பதை உணர்ந்து, "ஹலோ .. பவித்ரா .. நான் வைத்தீஸ்வரன்" என்றான்.

"விச் வைத்தீஸ்வரன்" என்று அவள் கேட்க, “தன் பெயர் அவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லையே .. தான் சொல்லவே இல்லையே” என்று மனதில் நினைத்து, இரண்டு நாள் முன் நடந்ததை அவன் விளக்கினான்.

"ஓ .. யுவர் நேம் இஸ் வைத்தீஸ்வரன் ? நைஸ் நேம். யு ஹேண்ட்ஸம்" என்று கூறி நிறுத்தி, அவன் என்ன பதில் தரப்போகிறான் என்ற ஆவலுடன் இருந்தாள்.

"யு ஆர் பியூட்டிபுல், பவித்ரா" என்று சொல்லி "மே ஐ நோ சம்திங் மோர் அபௌட் யு" என்றான்.

அதற்கு பவித்ரா, "ஐ ஆம் எ ஸ்டூடண்ட். டூயிங் மை கிராடுவேஷன் இன் எ காலேஜ் நியர் ஈஸ்ட் தாம்பரம். மைசெல்ஃப் அன்ட் த்ரீ அதர்ஸ் ஆர் ஸ்டேயிங் இன் எ ரெண்டெட் ஹோம் கம் ஹாஸ்டெல் இன் மேடவாக்கம்" என்று விளத்தினாள்.

"ஐ ஸீ" என்று கூறி விட்டு சுற்றிவளைக்காமல் நேரடியாகவே அவன் கேட்க நினைத்ததை கேட்டுவிடத் தோன்றவே, "முன்பின் அறியாத என்னிடம் ஏன் உன் விசிட்டிங் கார்டை வைத்துக்கொள் என்றாய்" என்று கிடுகிடுவென்று கேட்டான்.

"பி கூல் வைத்தி. எவெரிதிங் ஹேப்பண்ஸ் பார் எ ரீஸன்" என்று அவள் சிரித்துக்கொண்டே சொல்லவும், வைத்தி மனதில் "ஏதோ பலநாள் பழகியவள் போல் வைத்தி என்று கூப்பிடுகிறாளே" என்று வியந்து நிற்கும் போது, அவள் தொடர்ந்து, "வைத்தி என்று உங்களை கூப்பிட்டது சரியில்லை என்று தோன்றினால் .. பிளீஸ் எக்ஸ்கியூஸ் மி" என்று மிழற்றினாள்.

"இவள் பிறர் மனதில் நினைப்பதைக் கூட தெரிந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவளா" என்று மீண்டும் வியந்து நின்றான். "நீ என்னை வைத்தி என்றே கூப்பிடலாம், பவித்ரா" என்று அவன் சொன்ன வார்த்தைகள் அவள் செவிகளில் தேனாகப் பாய்ந்தன.

"என்னைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்வதற்கு முன் உங்களை பற்றியும் கொஞ்சம் நான் தெரிந்துகொள்ள வேண்டாமா" என்று வினவினாள் பவித்ரா.

"ஓ ஷ்யூர்" என்ற வைத்தி, "என் பெற்றோருக்கு நான் ஒரே மகன். ஐ அம் தி எச்.ஆர்.டி.ஹெட் இன் ஏன் ஐ.டி. ஃபேம்" என்று இயம்பியபொழுது பவித்ரா அவன் மேலும் தொடர்வதற்குள் இடைமறித்து,

"தென் ஐ கேன் கெட் மை ஜாப் ஒன்ஸ் ஐ கம்ப்ளீட் மை ஸ்டடீஸ்" என்று மிழற்றவும், "ஓ ஷ்யூர்" என்றான் வைத்தி சிரித்துக் கொண்டே. பவித்ராவும் அவனுடன் சேர்ந்து சிரித்தாள் ஓர் சிசுவினைப் போல்.

"தென் லெட் அஸ் பி இன் கான்டேக்ட் வித் ஈச் அதர் கொய்ட் ஆஃபன்" என்று விதத்தவும், "ஓ ஷ்யூர்" என்று வைத்தி புகல்ந்தான்.

பவித்ரா "குட் நைட் அண்ட் ஸ்வீட் ட்ரீம்ஸ்" என்று கூறிவிட்டு தொடர்பைத் துண்டித்துவிட்டாள்.

பவித்ராவின் சந்திப்பு அவன் வாழ்வில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று திடமாக நம்பினான்.

3.

அதன் பிறகு, பலமுறைகள் விருப்பத்துடன் பவித்ராவுடன் தொடர்பு கொண்டான் வைத்தி. ஒருமுறை கைபேசியில் தொடர்பு கொண்டு, "மகாபலிபுரம் போகிறேன். நீயும் வருகிறாயா" என்று வினவ, அவள் "நோ" வலத்தி மறுத்து விட்டாள். பவித்ராவின் வலத்தல் அவனுக்கு பெரிய ஏமாற்றம் அளித்தது. இருந்தாலும், அதை அவளிடம் காட்டிக்கொள்ளவில்லை. அதன் பிறகு சில நாட்கள் அவளுடன் தொடர்பில்லாமல் இருந்தது.

பிறகு, ஒரு நாள் அவளே அவனை கைபேசியில் அழைத்துப் பேசினாள்.

அதன் பிறகு, ஒரு மாத காலத்திற்குள் வைத்தி பவித்ராவை பலமுறை கைபேசியில் தொடர்புகொண்டான். அவர்கள் இருவரும் வாட்ஸ் அப் பில் வரும் நகைச்சுவைகளை பகிர்ந்து கொண்டு சிரித்துக் கொள்வதும், வேறு பல செய்திகளையும் பகிர்ந்து கொள்வதன் மூலமும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளத் தொடங்கினர்.

தொலைக் காட்சியில் சினிமா பார்த்துக் கொண்டிருக்கும் போது வரும் காதல் காட்சிகளில், வைத்தி தன்னை கதாநாயகனாகவும் பவித்ராவை கதாநாயகியாகவும் பாவித்துக் கொண்டதும் உண்டு.

பவித்ராவின் நினைவாக சில பழைய புதிய திரைப்படங்களிலிருந்து காதலுணர்வூட்டும் பாடல்களை தேர்ந்தெடுத்தது சீ.டி.யில் பதிவிறக்கம் செய்து, இரவில் படுத்துறங்கும் முன் கேட்பதை வாடிக்கையாக்கிக் கொண்டான்.

காதல் வியாதி பொல்லாதது. அது கண்ணும் காதும் இல்லாதது என்று கூறியது எவ்வளவு உண்மை !

பவித்ராவின் படிப்பு முடிந்த பிறகு அவளையே திருமணம் செய்து கொள்ளலாமென்று நினைத்தான் வைத்தி.

இருந்தாலும் அப்படியொரு எண்ணம் அவளுக்கும் இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள விரும்பினான். அதற்காக அவளை நேரில் காண்பதற்கு விழைந்தான்.


4.

வைத்திக்கும் பவித்ராவுக்கும் இடையில் நட்பு தொடரும் அதே நேரம், வைத்தி வாடகைக்குத் தங்கி இருக்கும் வீட்டிற்கு சொந்தக்காரியான கோமளத்திற்கு அவள் பேத்தியை வைத்திக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டுமென்றோர் எண்ணம் தோன்றி இருந்தது. ஏனென்றால் வைத்தியின் நன்னடத்தை தான் அதற்கு காரணம். அது மட்டுமல்ல வைத்தி கோமளம் பாட்டியின் தூரத்து உறவினர் ஒருவரின் ஒரே மகன்.

ஒரு வருடத்திற்கு முன்பு அந்த தூரத்து உறவினர் கோமளத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு வைத்திக்கு சென்னையில் வேலை கிடைத்திருப்பதாகவும், அதனால் அவன் தங்கியிருக்க வாடகைக்கு ஒரு வீடு பார்த்துக்கொடுக்க முடியுமா என்றும் கேட்டபொழுது, "என்னடீ தங்கம் உனக்கு அவன் மகன் என்றால் எனக்கு பேரன் தானே .. நானிருக்கும் வீட்டின் மேல்பகுதி காலியாகத்தான் வெச்சிருக்கேன். எப்பவாவது பெங்களூரில் இருக்கும் என் மகன் குடும்பத்துடன் வந்தால் அவர்கள் இருப்பதற்கு சவுகரியமாக இருக்குமே என்றுதான் அதை வாடகைக்கு விடாமல் இருக்கிறேன். மேலும், என் கணவரின் பென்ஷன் இப்போ கிடைக்கிறது. தேவைப்பட்டால் மகன் குமரேசன் வேறு பணம் தருகிறான். தனிக்கட்டையாய் நான் இருக்கிறேன். வைத்தி வந்தால் என் பேரன் என் கூடவே இருப்பதாக சந்தோஷப் பட்டுக்கொள்வேன். தாராளமாக அனுப்பிவை. அவன் இங்கேயே மேல்மாடியில் இருந்துகொள்ளட்டும்" என்று சொல்ல, தங்கம் அளவுகடந்த மகிழ்ச்சி அடைந்தாள்.

கோமளம் பாட்டி சொன்னதை வைத்தியிடம் தெரிவித்தபோது அவனும் சந்தோஷப்பட்டான். காரணம் பள்ளிக்கரணைக்கும் வேளச்சேரியில் இருக்கும் அவனது ஆபீஃஸுக்கும் இடையில் இருக்கும் தூரம் மிகவும் சொற்பம் தான். பள்ளிக்கரணையில் கோமளம் பாட்டியின் வீட்டில் வைத்தி வந்து தங்கிக்கொண்டான். வாடகையாக மாதம் எட்டாயிரம் ரூபாய் கொடுத்தான். அவ்வப்பொழுது, கோமளம் பாட்டி வைத்திக்கு தான் செய்யும் உணவையும் பகிர்ந்து கொடுத்து விடுவாள்.

தங்கம் வைத்தியை காண சென்னைக்கு வரும்பொழுது தன் விருப்பத்தை அவளிடம் தெரிவிக்க வேண்டுமென்று நினைத்திருந்தாள் கோமளம் பாட்டி.


5.

ஒருநாள் பவித்ராவை நேரில் சந்திக்க விரும்பி, வைத்தி கைபேசியில் தொடர்புகொண்டு, அவளிருப்பிடத்தின் விலாசம் தரும்படி கேட்டான். பவித்ரா அவளிருப்பிடத்தின் விலாசம் கொடுப்பதால் வேறு சில இன்னல்கள் விளையலாமென்றெண்ணி தரமறுத்து விட்டாள். "வேறெங்காவது சந்தித்துக் கொள்வோமா" என்று கேட்டான்.

"வேண்டுமென்றால் நீங்கள் இருக்கும் வீட்டிற்கே வருகிறேனே" என்று சொல்ல, வைத்தி சற்று யோசித்தான்.

பிறகு, “நானிருக்கும் வீட்டின் கீழ் ஒரு வயதான பாட்டி இருக்கிறார். ஒரு வகையில் எங்களுக்கு அவர் தூரத்து உறவினர் வேறு. கோமளம் பாட்டி நல்லவர் தான் என்றாலும் சில சமயங்களில் ஏதாவது காரணம் சொல்லி வேவு பார்க்கும் உள்ளம் கொண்டவர். எனவே, பாட்டி இருக்கும் பொழுது என் இருப்பிடத்திற்கு நீ வருவது சரியில்லை" " என்று சொல்லவும் பவித்ரா,

"அதுபோலத் தான் என் நிலைமையும். நாங்கள் வசிக்கும் வீட்டிலிருக்கும் பெண்மணிக்கும் ஆண்கள் வீடு தேடி வந்தால் பிடிக்காது" என்றாள்.

"அப்படியென்றால் நாமிருவரும் எப்படி எங்கு சந்திப்பது. இன்னும் எத்தனை நாட்கள் இப்படியே கைபேசியிலேயே பேசிக் கொண்டிருப்பது. உன்னிடம் கைபேசியில் பேசுவதை விட, நேரில் நிறைய பேச வேண்டும் போல் இருக்கிறது" என்று புகல்ந்தான்..

அதற்கு அவளும், "எனக்கும் அதே ஆசை தான். எதற்கும் ஒரு நல்ல வேளை வரும். அதுவரை இருவரும் பொறுத்திருப்போம்" என்று கூறினாள் பவித்ரா.


6.

ஒரு வாரத்திற்குப் பிறகு ..

எழுபது வயதைக் கடந்து விட்ட கோமளம் பாட்டிக்கு உடல் நலம் குன்றவே, கட்டிலில் படுத்திருந்தாள். அருகில் சென்ற வைத்தி, பாட்டியின் நெற்றிப் பொட்டைத் தொட்டுப் பார்த்தான். நல்ல ஜுரம் இருப்பதை அறிந்துகொண்டு, வீட்டிற்கு அருகிலிருக்கும் டாக்டரை அழைத்து வந்தான்.

பாட்டியை பரிசோதித்த அவர் ஒரு ஊசி போட்டுவிட்டு, இரண்டு மாத்திரைகளை எழுதிக் கொடுத்து காலையும் மாலையுமாக மூன்று நாட்களுக்குக் கொடுக்க வேண்டுமென்று சொல்லிச் சென்றார்.

டாக்டர் எழுதிய மாத்திரைகளை உடனே வாங்கி வந்து, பாட்டிக்கு கஞ்சி வைத்துக் கொடுத்துத்துப்பின் மாத்திரைகளையும் கொடுத்துத்தான். அன்றிரவு பாட்டியின் அருகிலிருந்த சோஃபாவில் கண் விழித்துக் காத்திருந்தான்.

மறுநாள் காலையில் பாட்டிக்கு ஜுரம் தணிந்திருந்தது. பாட்டி கட்டிலில் எழுந்து உட்கார்ந்து கொண்டு, "ஏண்டா வைத்தி நேற்றிரவு நீ தூங்கவில்லை போலிருக்கே" என்று வினவ வைத்தி, "அப்படி ஒன்றும் இல்லை பாட்டி" என்று நப்பிளித்தான்.. "பொய் சொல்லாதேடா கண்ணா. உன் கண்ணை யார் பார்த்தாலும் சொல்லிவிடுவார்கள் .. நீ தூங்கவில்லை" என்று சொல்லும் போது வைத்தி புன்னகைத்தான்.

"பாட்டி நான் உங்களுக்கு சூடா காஃபி போட்டுக்கொண்டு வருகிறேனே" என்று சொல்ல, "உனக்கு எதுக்கு வீண் சிரமம்" என்றாள் பாட்டி. "இதுல என்ன சிரமம் இருக்கு. காஃபி ஓரளவுக்கு நல்லா போடுவேன் பாட்டி" என்று சொல்லிக்கொண்டே கிச்சனுக்குள் சென்று, பத்து நிமிடங்களில் காஃபி கொண்டு வந்து கொடுத்தான்.

“பல்லு தேய்க்கணும் டா கண்ணா” என்று சொன்னபோது பாட்டியின் கையைத் தாங்கலாகப் பிடித்து கட்டிலில் இருந்து இறங்குவதற்கு உதவினான்.

“எனக்கு ஜுரம் இப்போ நல்லாவே குறைஞ்சாச்சு” என்றவாறே அறையிலிருந்த பாத்ரூமிற்குள் சென்ற சிறிது நேரத்தில் முகத்தை முந்தானையில் துடைத்துக் கொண்டே வந்து சோபாஃவில் அமர்ந்து, வைத்தி கொடுத்த காஃபியைக் குடித்தாள். "நீ நன்னாவே காஃபி போட்டிருக்கயே" என்று அவனை மெச்சினாள்.

“பாட்டி நான் உங்களுக்கு ஏதாவது டிபஃன் செய்து தரட்டுமா" என்றுகேட்க, "வேண்டாம் .. ஓட்ஸ் கஞ்சி வைத்துக் கொள்கிறேன் .. நீ போய் கீஸரை போட்டு வை. நான் குளிக்கணும்" என்றதும்,

"ஒருநாள் குளிக்காமல் இருந்தா என்ன பாட்டி. நேத்திக்கு ஜுரம் இருந்ததே. அதனாலத் தான் கேட்கிறேன். ஓட்ஸ் கஞ்சி நானே போட்டுத் தரேனே" என்றதற்கு,

“குளிக்காமலிருப்பதே நோய்க்கு இடம் கொடுக்கும். எனக்கு இப்போ ஒண்ணுமில்லை. முந்தாநாள் கோயிலுக்குப் போயிட்டு வரச்சே ரெண்டு துளி மழை தலைல விழுந்தது. உடம்புக்கு ஒத்துக்கல்ல. அவ்வளவு தான் டா அப்பனே. நீ கீஸர் சுவிச்ச போட்டுட்டு வா" என்றாள் மீண்டும்.

வைத்தி அவ்வாறே செய்யவும், “உனக்கு ஆபீசுக்குப் போக வேண்டாமா .. போய் குளிச்சு ரெடி ஆகு" என்றதும் "நான் இன்னிக்கு லீவு போட்டு உங்க கூடவே இருக்கப் போறேன்” என்றான்.

"அப்போ உனக்கும் சேத்து சமைச்சுடறேன்" என்று சொல்லி சிரித்தாள் பாட்டி.

"நீங்க சொல்லிக்கொடுத்தால் நானே சமைக்கிறேனே " என்றதற்கு பாட்டி, "உன் காஃபி போலவே நல்லா இருக்குமா" என்று கேட்டாள்.

"அது நீங்க சொல்லிக் கொடுக்கிறதப் பொறுத்திருக்கு" என்றதும் பாட்டி மீண்டும் சிரித்தாள்.

"குளிக்காம சமைக்கக் கூடாது. நீ குளிச்சுட்டு வா" என்றதும் வைத்தி, "காஃபி மட்டும் குளிக்காம போடலாமா” என்று திருப்பிக் கேட்க, "அப்படி இல்லடா வைத்தி. காஃபிய யாராவது சுவாமிக்கு நைவேத்யம் பண்ணறாளா. மடியோடு சமைச்சா, பூஜை செய்தப்பறம் அன்னத்தில் சொட்டு நெய் விட்டு ஸ்வாமிக்கு நைவேத்யமா கொடுக்கலாம் இல்லையா" என்று உரைத்தாள்.

“சரி பாட்டி வேகமா குளிச்சுட்டு வரேன்" என்று சொல்லி விட்டுச் சென்ற அரை மணி நேரத்திற்குள் திரும்பி வந்தான். அதற்குள், கோமளம் பாட்டி குளித்து முடித்திருந்தாள்.

வைத்தியின் நெற்றியில் விபூதி இல்லாதிருப்பதைக்க கண்டு, "நெத்தில கொஞ்சம் விபூதி எடுத்து இட்டுக்கோ" என்று கட்டளை இடுவதுபோல் கிளத்தினாள்.

மறுக்காமல், அவ்வாறே வைத்தி செய்துகொள்ளவும், "பின் பக்கம் போயி கொஞ்சம் செம்பருத்திப்பூ பறிச்சுண்டு வருவியா" என்று வினவினாள். "சரி” என்று சொல்லி பூக்கள் பறித்துக் கொண்டு வந்தான். "ஓட்ஸ் கஞ்சி போடட்டுமா" என்று கேட்டதற்கு பாட்டி தலையாட்டி சம்மதம் தெரிவித்தாள்.

வைத்தி சமையலறையில் புகுந்ததும், கோமளம் பாட்டி அவளது நித்ய பூஜையை செய்ய முற்பட்டாள். சாதாரண நாட்களில் ஒருமணி நேரத்திற்கு மேல் பல அம்பாள் ஸ்லோகங்கள் சொல்லி வழிபடும் அவள் அன்றைய பிரார்த்தனையை வெகுவாக சுருக்கிக் கொண்டாளென்றால் அதற்கு காரணம் அவளது உடல் நலக்குறைவே தவிர வேறு ஒன்றுமில்லை.

ஓட்ஸ் கஞ்சி கொண்டு வந்தான் வைத்தி. “நீயூம் குடிச்சுக்கோ கண்ணா” என்று மிகுந்த வாத்சல்யத்துடன் சொல்ல, பாட்டிக்கு கொடுத்தபின் அவனும் ஒரு கிளாஸ் குடித்தான். பிறகு, டாக்டர் கொடுக்கச் சொல்லியிருந்த இரண்டு மாத்திரைகளை பாட்டியின் கையில் கொடுத்து “இதையும் சாப்பிடுங்கோ" என்று மாத்திரைகளை விழுங்குவதற்கு தண்ணீரும் கொடுத்தான். அதற்கு மறுப்பேதும் கூறாமல் மாத்திரைகளை விழுங்கினாள் பாட்டி.

"நான் சித்த நேரம் இப்படியே சோஃபால இருக்கேன். உனக்கு ஏதாவது வேலை இருந்தா அதை செய்துக்கோ. பத்தரை மணிக்கு மேல சமைச்சுக்கலாம்" என்றவுடன். "உங்களை எப்படி தனியே விட்டுட்டு போறது. நான் போன பிறகு நீங்கள் அடுக்களைக்குப் போயி சமைக்கக் கூடாது" என்று திட்டவட்டமாகக் கூறவும், "இன்னிக்கு நீ சமைச்சு நான் சாப்பிடனும்னு பகவான் எழுதி வெச்சுருக்கான். மஞ்சு வர்ற சமயம் ஆச்சு" என்று சொல்லும் பொழுதே மஞ்சு உள்ளே வந்தாள். "என்னம்மா .. உடம்பு சரியில்லையா" என்று கேட்டாள்.

"ஆமாண்டி ஒரு சின்ன ஜுரம்" என்று பாட்டி சொல்லும் போது வைத்தி "மஞ்சு பாட்டியை கொஞ்சம் கவனிச்சுக்கோ" என்று சொல்லிவிட்டு மாடிக்குச் சென்று விட்டான்.

மஞ்சு அவள் பணிகளை செய்யத் தொடங்கினாள். சோஃபாவில் அமர்ந்திருந்த பாட்டி அப்படியே அதில் தலை சாய்த்து கண்ணயர்ந்து விட்டாள்.


7.


பத்தரை மணிக்கு வைத்தி கீழே இறங்கி வந்தான். அவன் வந்ததும் மஞ்சு சென்றுவிட்டாள். சற்று நேரத்தில் பாட்டி விழித்து, "ரொம்ப க்ஷீணமா இருந்துது. என்னை அறியாமலே கண் அசந்துட்டேன் " என்று சொல்லி, "மிளகு ஜீரக ரசம் வெச்சு சாப்ட்டா க்ஷீணம் போயிடும் டா வைத்தி" என்றாள்.

வைத்தி நன்றாக கழுவிய பச்சரிசியை குக்கரில் இட்டு அதில் பாட்டி சொன்ன அளவுக்குத் தண்ணீர் விட்டு, ஸ்டவ் பற்றவைத்து, குக்கரை வைத்தான். பிறகு, மிளகு ஜீரக ரசம் வைத்து, அப்பளங்களை சுடும்பொழுது, முதல் அப்பளம் தீயில் எரிந்து கருகி விட்டது. அதைப் பார்த்த பாட்டி, “வைத்தி ஸ்டவ்வெ சிம்ல போட்டுக்கோ .. அப்பளம் கருகாது” என்று சொல்லிக் கொடுத்தாள்.
சிறிது நேரத்தில் சமையல் ரெடியாகியது. “எப்போ சாப்பிடணுமோ அப்போ சொல்லுங்கோ" என்று சொல்லிவிட்டு, சோஃபாவில் வந்து அமர்ந்துகொண்டான்.

பன்னிரெண்டு மணியளவில் இருவரும் உண்டு முடித்தனர். சாப்பிடும் பொழுது வைத்தியை நோக்கி பாட்டி. "வைத்தி உனக்குன்னு ஒரு கைருசி இருக்குடா. மிளகு ரசம் ஜோரா இருக்கு" என்று அவனை புகழ்ந்தாள்.

“எல்லாம் நீங்க சொல்லிக்கொடுத்ததின் மகிமை” என்று வைத்தி பதிலளித்தான்.

தன் பேத்தி மோகனாவைக் கல்யாணம் செய்துகொண்டால், அவள் தூரமாகியிருக்கும் பொழுது, அவனே அவளுக்கு சமைத்ததுபோடுவான் என்று கோமளம் பாட்டி மனதில் வேறுவிதமாகக் கணக்குப் போட்டதை வைத்தி அறிந்திருக்க வாய்ப்பில்லையே !

அன்று மாலை பெங்களூரில் இருக்கும் பாட்டியின் மகனிடமிருந்து ஃபோன் வந்தது. மகனுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது இருமுவதைக் கேட்ட மகன் "என்னம்மா இருமுற" என்று கேட்டதற்கு "ஒண்ணுமில்ல டா .. தொண்டை வறண்டிருக்கு. சூடா கொஞ்சம் தண்ணி குடிச்சா சரியா போயிடும்" என்று பொய்யுரைத்தாள்.

"நான் ஒரு வேலை விஷயமா சென்னைக்கு புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன். ராத்திரி வந்துடுவேன். ஃபிளைட்லயே சாப்பாடு கிடைக்கும். அதனால நீ பிரத்யேகமா எனக்குன்னு ஒன்னும் செஞ்சு வைக்கவேண்டாம். சரியா" என்ற சொல்ல, "சரிடா" என்றாள் அவனது தாயார்.

அன்றிரவு, மகன் வந்த பிறகு நடந்தவற்றை எல்லாம் தாயின் மூலமாகவும், வைத்தி மூலமாகவும் தெரிந்து கொண்டான். "எனக்கு இங்கு ரெண்டு நாள் வேலையிருக்கு. நான் போகும்போது நீயும் என் கூடவே பெங்களூருக்கு வந்து கொஞ்ச நாள் இரு" என்று சொன்னதும் தாயும் சரியென்று சொல்லிவிட்டாள்.

இரண்டு நாள் பிறகு கோமளம் பாட்டியும் மகனுடன் பெங்களூருக்குச் சென்றுவிட, வைத்தி மட்டும் அந்த வீட்டில் தனிமையில் இருந்தான்.


8.

அன்று சனிக்கிழமை. விடுமுறை நாள் என்றாலும் வழக்கம் போல் காலை ஆறு மணிக்கு எழுந்து விட்டான். ஏழு மணிக்கு மஞ்சு வந்து அவளது பணிகளை செய்துவிட்டுச் சென்று விட்டிருந்தாள்.

ஈரப்பதம் மிக்க காற்று இந்தியப் பெருங்கடலின் தென் மேற்குப் பகுதிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லத் தொடங்கியிருந்தமையால் வானம் மூடியிருந்தது. ஏழரை மணிக்கு வரும் செய்தியில், காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் பெரும்பாலும் வானம் மேகமூட்டத்துடன் இருந்தாலும், ஓரிரு இடங்களில் மிதமான அல்லது இடியுடன் கூடிய கனத்த மழை பெய்யலாம் என்ற வானிலை அறிவிப்பு வெளியானது.

பைக்கை எடுத்துக் கொண்டு, மகாபலிபுரம் வரை சென்று வரலாமென்று நினைத்திருந்த அவன் வானிலை அறிவிப்பை கேட்டபின், அந்த ஐடியாவை கைவிட்டு விட்டான்.

மத்திய உணவிற்குப் பிறகு வேளாச்சேரியில் இருக்கும் ஃபொனிக்ஸ் மாலுக்கு சென்று ஏதாவது படம் பார்த்துவிட்டு, அங்கேயே இரவு உணவும் முடித்துக் கொண்டு வரலாம் என்று நினைத்துக் கொண்டே, ஒரு ஆப்பிளும் ஒரு வாழைப் பழமும் எடுத்து நறுக்கி, காலை காஃபி குடித்தது போக மீதமிருந்த பாலை அதில் ஊற்றி, கெல்லாக்ஸ் சேர்த்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

அப்பொழுது, பவித்ராவின் நினைவு வைத்திக்கு வந்தது.

என்ன ஆச்சரியம் ! காற்றில் கலந்திருக்கும் காந்த அலைகள் அவன் மனதிலிருப்பதை எடுத்துச் சென்று பவித்ராவிற்குச் சொல்லிவிட்டதோ என்னவோ, அவள் நினைவு வந்த பத்து நிமிடங்களில் அவளிடமிருந்து அவனுக்கு கைபேசியில் அழைப்பு வந்தது.

"ஹாய் வைத்தி. என்ன செய்துகொண்டிருக்கிறாய்" உன்னைத் தான் நினைத்துக்கொண்டிருக்கிறேன் என்றா அவனால் சொல்ல முடியும் ?

"ஐ ஆம் அலோன் அட் ஹோம்"

"அலோன் ? பாட்டியம்மா இல்லையா” ?

“பாட்டி வீட்டில் இல்லை. பெங்களூருக்கு போயிருக்காங்க" என்று நடந்தவற்றை அப்படியே சொல்லி முடிக்கவும், "உனக்கு போரடிக்கலையா" என்று கேட்டாள் பவித்ரா.

அதற்கு வைத்தி "எஞ்சாயிங் மியூசிக்" என்று பொய்யுரைத்தான்.

"இங்கிலிஷ் ஆர் ஹிந்தி"?

"தமிழ்"

"கிளாசிக் ஆர் ஸம்திங்க் எல்ஸ்"?

"ரொமான்டிக் ஃபிலிம் சாங்ஸ்" மீண்டும் பொய்.

"ஓ வெரி குட். சோ யு ஆர் ஃபிரீ நவ்".

"எஸ்"

"தென் மே ஐ கம் டு கிவ் யு கம்பெனி"? என்றவள் கேட்டதும், என்ன சொல்வதென்று தெரியாமல் அவனிருக்க அவள் மீண்டும் "வைத்தி, டிட் யு ஹியர் மி"? என்று கேட்டாள்.
"எஸ். ஐ டிட் ஹியர் யூ"

"இப் சோ ஓய் நோ ஆன்சர்"

"ஐ பெண்ட் டு பிக் தி வாட்டர் பாட்டில்" மீண்டும் பொய்.

"மே ஐ கம்? ஐ ஆம் ஆல்சோ ஃபிரீ நவ். டு யு ரிமெம்பர் வாட் ஐ டோல்டு யூ ஃபியூ டேஸ் பேக்" ?

வைத்தி அவள் எதை நினைவூட்டுகிறாள் என்பதை புரிந்து கொண்டான்.

"ஐ விவிடலி ரிமெம்பர். ஓ.கே .. கம்" என்று அவன் விலாசத்ததையும், வருவதற்குரிய வழியையும் கூறினான்.

அவளுடன் கொஞ்சம் அரட்டை அடித்துக் கொண்டிருக்கலாம். பிறகு, சமயம் பார்த்து " ஐ லவ் யு" ன்னு சொல்லிவிடலாமென்றும் நினைத்துக் கொண்டான்.

"ஓகே .. ஐ அம் தெயர் இன் அபௌட் ஏன் அவர்" என்று சொல்லி முடித்தாள்.


9.

பவித்ரா வந்தால் அவளுக்கு ஏதாவது திண்பதற்குக் கொடுக்கவேண்டுமே என்று நினைத்தான். அவன் பர்ஸை எடுத்துப் பார்த்தபோது அதில் அதிகப் பணம் இல்லையென்று தெரிந்து, பைக்கில் ஏறி முதலில் ஏ.டி.எம். சென்று பணம் எடுத்துக் கொண்டு, பின் அருகிலிருக்கும் கடைக்குச் சென்று பழங்கள், ஜூஸ், ஸ்வீட்ஸ், என்று கண்ணில் பட்டதனைத்தும் வாங்கி கொண்டு வீடு திரும்பினான்.

சற்று நேரம் கழிந்த பின், பவித்ரா, "வீட்டருகில் வந்துவிட்டேன்" என்பதை கைபேசியில் தொடர்புகொண்டு வைத்திக்குச் சொல்லவும், அவன் மாடியிலிருந்து இறங்கி வந்து வீட்டு வாயிலில் நின்று கொண்டிருந்தான்.

பவித்ரா வந்ததும் "வேகம் உள்ளே வா. யாராவது பார்த்து விட்டால் தகராறு ஆகிவிடும்" என்று சொல்ல, அவள் உள்ளே வந்ததும் வராததுமாக கதவுகளை உள்பக்கம் பூட்டிவிட்டு, அவளை பின்தொடர்ந்து மேலே வந்ததும், பவித்ராவை மேலிருந்து கீழ்வரை நோக்கினான்.

உடலெது உடையெது என்று பாகுபடுத்த முடியாதபடிக்கு பவித்ரா அணிந்திருந்தாள் மஞ்சள் நிறத்தில் ஒரு சல்வார் உடை. கட்டிவைக்காத கூந்தல். காதிரண்டில் தொங்கும் சிறு தங்கக் குண்டலங்கள். கழுத்தில் சிறியதொரு செயின். கையில் ஒரு வளையல். நெற்றியில் சிறிய கறுப்புப் பொட்டு. மையிட்ட கண்களை எந்த ஒரு ஆண்மகன் கண்டால் போதும். அங்கே, அப்பொழுதே மையல் கொள்வான். அவள் கண்களில் அப்படியொரு வசீகர சக்தி இருந்தது.

அவள் வீட்டிற்குள் விரைந்து மாடிப்படிகள் ஏறிச் செல்லும் போது எழுந்த ஒலி அவள் காலில் கொலுசு அணிந்திருக்கிறாள் என்பதை வைத்தி முதலிலேயே உணர்ந்து திருந்தான்.

"யு லுக் வெரி பியூட்டிஃபுல் இன் திஸ் அட்டைர்" என்றதும், பவித்ரா புன்முறுவல் செய்தாள். அதில் அவள் அழகு இன்னும் அதிகரித்தது போலொரு உணர்வு வைத்திக்கு ஏற்பட்டது.

பவித்ரா, வைத்தி வசிக்கும் இருப்பிடத்திற்குள் பிரவேசித்ததும் அதன் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று பார்வையிட்டாள். வரவேற்பறையின் ஒருபுறம் படிகள் மாடிப் பகுதிக்கு வருவதற்கும், மறுபுறம் டெர்ரெஸ்சுக்குப் போவதற்கும் இருந்தன. பெரிய வீடாகையால், மொட்டை மாடி மிகவும் பெரிதாக இருந்தது. வீட்டின் புறப்பகுதியில், கிணறு, துளசி மாடம், தென்னை, வாழை, பூச்செடிகள், முருங்கை, பப்பாளி, எலுமிச்சை, பலா மரம் இருந்தன. மாலை நேரங்களில் மொட்டை மாடியில் வந்து அமர்ந்து கொண்டால் போதும், இயற்கையுடன் இணைந்துவிட்டது போலொரு உணர்விருக்கும்.

நீளமான வரவேற்பறைகள் ஒரு சிறிய பூஜா அறையும், கிழக்குப் பகுதியில் சமையலறையும், தெற்குப் பகுதில் இரண்டு பெரிய அறைகளும், நடுவே ஒரு பொதுக் குளியலறையும், வரபேற்பறையின் மேற்கில் மூன்று படிகள் கீழ் இறங்கினால் ஒரு அகலமான "சிட் அவுட்" இருப்பதை கண்டு, அங்கு போவதற்கு மூடியிருந்த கதவைத் திறந்தாள். "அங்கே போகவேண்டாம் .. யாராவது பார்த்துவிட்டால், பாட்டியிடம் செய்தி போய்விடும். இதோ இந்த ஜன்னல் வழியே வெளியே பார்க்கமுடியும்" என்று சொல்லிக்கொண்டே, ஜன்னலின் திரைச்சீலையை சற்று ஒதுக்கி வைத்தான். அதன் வழியே அவள் பார்த்தபோது, வைத்தி வீட்டிற்கருகில் இருக்கும் ஒரு விளையாட்டு மைதானம் வரை தெரிந்தது. நான் வருவதை இதன் வழியாகத் தான் நீ பார்த்தாயா" என்று கேட்க, "எஸ்" என்றான்.

"வீட்டில் இருக்கும் ஜன்னல்களை எல்லாம் திறந்து வைத்தால் நல்ல காற்றோட்டம் இருக்கும் .. இல்லையா" என்று கேட்க, "உண்மை தான். கூடவே தூசியும் வரும்" என்று பதிலளித்தான் வைத்தி.

அவன் கூற்றை ஆமோத்தித்து அவளிரு விழிகளை சிமிட்டவும் "என்ன கண்ணுல தூசி விழுந்துடுத்தா" என்று வைத்தி வினவ, "நோ .. நோ .. ஐ ஜஸ்ட் என்டோர்ஸ்டு யுவர் ஸ்டேட்மென்ட் பை ப்ளிங்கிங் மை ஐஸ்" என்றாள்.

வைத்தியின் வீட்டை முற்றிலும் பார்வையிட்ட பவித்ரா, “எனக்கு வீடு ரொம்ப பிடிச்சிருக்கு. யு ஹேவ் கெப்ட யுவர் ஹோம் வெரி நீட் எண்ட் க்ளீன்" என்று சொல்லி விட்டு, "மிகவும் அமைதியாக இருக்கிறது இந்த இடம். ஐ லைக் இட்" என்று முடித்தாள். அதற்கு வைத்தி "தாங்க்ஸ்" என்றுமட்டும் சொன்னான்.

“ஆனால் இரண்டு லிவிங் ரூமுக்கு ஒரே ஒரு டாய்லெட் கம் பாத் இஸ் நாட் எ குட் ஐடியா. ஐ வில் ஹேவ் டு பி வெரி கேர்ஃபுல் ஓயில் யூஸிங் இட்" என்று சொல்லி கலகலவென்று சிரித்தாள். வைத்தியும் அதைக் கேட்டு சிரித்தான்.

பவித்ரா வந்த சிறிது நேரம் கழிய, வீட்டின் வெளியிலிருந்த அழைப்பு மணியின் ஓசை கேட்டது. அப்பொழுது மணி பத்தரை. "யாரோ வர்றாப்போல இருக்கு" என்று பவித்ரா சொல்லவும், " நம்மிருவருக்கும் மதிய உணவு வருகிறது. நான் சென்று வாங்கி வருகிறேன்" என்று சொல்லி கீழ் இறங்கிச் சென்று அதைப் பெற்றுக்கொண்டு வந்தான்.

"எங்கிருந்து வருகிறது உனக்கு உணவு" என்று பவித்ரா கேட்கவும், "வீட்டிற்குப் பக்கத்தில் ஒரு தெலுங்கு குடும்பத்தினர் அவர்கள் இல்லத்தில் சமையல் செய்து என்போன்ற சிலருக்கு உதவுகிறார்கள். உணவு காரசாரமாக இருக்கும். விடுமுறை நாட்களில் எனக்கு மதியம், இரவு இரண்டு வேளைக்கும் அங்கிருந்து உணவு வந்துவிடும்" என்றான்.

"குட் அரேஞ்ச்மென்ட் " என்றாள் பவித்ரா.

"எங்கு உட்கார்ந்து அரட்டையடிக்கப் போகிறோம்" என்று கேட்க, "கம் .. வி வில் சிட் இன் திஸ் ரூம்" என்று சொல்லி பவித்ராவை ஓரறைக்குள் அழைத்துச் சென்றான். அங்கிருந்த சோஃபாவில் பவித்ரா அமர்ந்து கொண்டாள்.


10.

அந்த அறையின் கிழக்கு மற்றும் தென்புறத்து சுவர்களில் கூரையை ஒட்டி நீளமாக லாஃப்ட் வித் ஸ்லைடிங் டோர்ஸ் இருந்தது. அதை பார்த்து "வெரி யூஸ்புல் லாஃப்ட்ஸ்" என்றாள்.

அதற்கு வைத்தி, "நான் வரும்பொழுது லாஃப்ட்டிற்கு கதவுகள் இல்லை. லாஃப்ட் திறந்திருந்தால் பார்ப்பதற்கு அழகாக இருக்காது, தூசிகள் சென்று அங்கு வைத்திருக்கும் பொருள்கள் மீது படிந்துவிடும். கதவுகள் இருந்தால் நல்லது என்று சொன்னேன். பாட்டி அதை ஏற்று, இரண்டு அறைகளில் உள்ள லாஃப்ட்டில் கதவுகள் பொறுத்திவிட்டாள்" என்றான்.

"உனக்கு செஸ் விளையாடத் தெரியுமா" என்று பவித்ராவிடம் கேட்டான் வைத்தி. அவள் “ஓரளவுக்குத் தெரியும்” என்றாள்.

"நான் என்ன செஸ்ல க்ரேன்ட் மாஸ்டரா ? இரு .. செஸ் போர்டு கொண்டுவருகிறேன்" என்று சொல்லி, ஓரிரு நிமிடங்களில் இரண்டு போர்ட் கேம்ஸ் கொண்டு வந்தான். ஒன்றை தான் பக்கத்தில் வைத்து விட்டு, செஸ் போர்டை எடுத்து விரித்தான்.

அப்பொழுது, பவித்ரா அதெனென்னது" என்று கேட்க, “அது "வேட் ப்ளஸ்" என்ற ஒரு சொல்விளையாட்டு. வி வில் பிளே இட் ஆஃப்டர் எ கேம் ஆஃப் செஸ்" என்று சொல்லி "வேட் ப்ளஸ்" விளையாட்டு இருக்கும் பெட்டியை அவளிடம் கொடுத்தான்.

அதை அவள் பார்த்துக்கொண்டிருக்கும் போது, கட்டில் மீதிருந்து ஒரு பெரிய துணியை எடுத்து இரண்டாக மடித்து சென்டர் டேபிள் மீது விரித்து, இரண்டு பிளாஸ்டிக் நாற்காலியை எதிரும் புதிருமாய் இருத்தி அதில் அமர்ந்து கொண்டனர். இருவருக்கும் நடுவில் செஸ் போர்ட் வைத்து, "வாட் இஸ் யுவர் சாய்ஸ் .. ப்லாக் ஆர் ஒயிட்" என்றதற்கு, "ஒயிட்" என்றாள்.

"சோ யு வாண்ட் டு மேக் தி ஃபஸ்ட் மூவ். சோ பி இட்" என்றவாறே சென்று, இரண்டு கண்ணாடி கிளாசில் பழச்சாறு கொண்டுவந்து ஒன்றை அவளிடம் கொடுத்தான்.

இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு அதை அருந்தும் போது "திஸ் இஸ் தி ஸ்டார்ட்டர் ஃபார் அவர் லன்ச்" என்றான் வைத்தி.

ஒருவர் பின் ஒருவர் காய்கள் நகர்த்த, நேரமும் நகர்ந்தது. ஒன்றன் பின் ஒன்றாக வைத்தியின் குதிரை, பிஷப், நான்கு சிப்பாய்களை வெட்டி வீழ்த்தினாள் பவித்ரா. அவர்கள் இருவரின் விளையாட்டை பார்த்தவர்கள் பவித்ரா தான் நன்றாக விளையாடினாள் என்று சொல்வார்கள். ஆனால், வைத்தி வேண்டுமென்றே சிலமுறைகள் தவறாக காய்களை நகர்த்த, பவித்ரா அந்த சந்தர்ப்பங்களை நன்கு பயன்படுத்திக் கொண்டாள் என்ற சங்கதி வைத்திக்கு மட்டும் தானே தெரியும் !

"யு ஆர் கோயிங் டு லூஸ், வைத்தி" என்றாள் பவித்ரா.

"அப்படித்தான் தோன்றுகிறது, பவித்ரா. மந்திரி இல்லையென்றாலும் இரண்டு யானைகள் இன்னும் இருக்கின்றன" என்று சொல்லி, "யானை பலம் கொண்டு சேனை பல வென்று ஆளப்பிறந்தாயடா .. வைத்தி ஆளப்பிறந்தாயடா " என்று பாடி நிறுத்தினான்.

அதைத் தொடர்ந்து பவித்ரா "அத்தை மகளை மணம்கொண்டு இளமை வழிகண்டு வாழப் போகின்றாயா .. வைத்தி வாழப் போகின்றாயா" என்று முடித்து, சிரித்தாள்.

அதற்கு அவன், "பட் ஐ ஹேவ் நோ அத்தை" என்று சொல்லி சிரித்துக் கொண்டே, போர்டில் இருந்த காய்களை எல்லாம் குலைத்துவிட, அவள் "திஸ் இஸ் சீட்டிங் .. திஸ் இஸ் சீட்டிங்" .என்று சொல்லி அவனை அடிப்பதற்கு கையைத் தூக்க, அவள் கையை பற்றிக்கொண்ட வைத்தி சில நொடிகளுக்குப் பின் கைவிட்டு விட்டுவிட்டான். அந்த சில நொடிகளில், அவள் கையின் மென்மை பூவினும் மென்மையானது என்பதை உணர்ந்து கொண்டான்.

சிதறியிருந்த செஸ் காய்களை எடுத்து வைத்து விட்டு, "வேட் ப்ளஸ்" விளையாடுவதற்காக அதிலிருந்த போர்டில் ஒன்றை அவள் முன் வைத்து, அந்த சொல்விளையாட்டிற்கு தேவையான ஆங்கில எழுத்துக்கள் அச்சிடப்பட்டிருந்த சிறு சிறு கட்டைகளையும் அவளிடம் கொடுத்தான். “விளையாட்டு விதிமுறைகளை நன்றாக படித்துக் கொள். தென் ட்ரை டு மேக் எ கேம்" என்றான். அவள் விதிமுறைகளை படித்துக் கொண்டிருந்தாள்.

அப்பொழுது, வைத்தி, “இதுவும் ஸ்க்ராபில் போலத்தான். பட் தி நம்பர் ஆஃப் டைல்ஸ் ஆர் ஃபியூவர்" என்றபோது,

அவள், "கேன் ஐ யூஸ் தி ரெட் லெட்டெர்ட்டு டைல்ஸ் அஸ் வெல் ..?" என்று வினவ, "யு கேன் .. பட் தி ரெட் டைல்ஸ் ஆர் ஃபார் யங் சில்ட்ரன். ஐ விஷ் யு ட்ரை எ கேம் வித் தி 26 பிளேக் டைல்ஸ் ஏண்ட் தி 2 ப்ளேன்க் டைல்ஸ் ஓன்லி " என்றான்.

"இன்னொரு விஷயம் என்ன தெரியுமா ? இந்த விளையாட்டைக் கண்டுபிடித்தது ஒரு தமிழன்" என்று சொல்லவும், " எஸ் .. எஸ் .. வெங்கடாச்சலம் என்பவரின் பெயர் இந்த புக்லெட்ல படித்தேன்" என்றாள்.

பவித்ரா, முதல் மூன்று வார்த்தைகள் அதிலிருக்கும் ஐந்து உயிர் எழுத்துக்களை உபயோகித்து சுலபமாக முடித்து விட்டாள். பிறகு, அவள் நினைக்கும் வார்த்தைகளுக்குத் தேவையான உயிர் எழுத்துக்கள் இல்லாமல் தவிப்பதைக் கண்ட வைத்தி, "யு ஹேவ் டு பி வெரி ஜுடீஷியெஸ் இன் யூஸிங் தி வவ்வல்ஸ்" என்றான்.

"நோ ப்ராப்லெம் .. ஸீ தி புக்லெட். தெயர் ஆர் சம் சேம்பிள் கேம்ஸ்" என்று சொல்லவும், அவன் கொடுத்த புக்லெட்டை திறந்து பார்த்து, "எஸ் .. எஸ் .. நிறையவே சேம்பிள் கேம்ஸ் இருக்கு. ஒன் ஹேஸ் டு க்ரேஸ்ப் இட் ஃபுல்லி ஏண்ட் தென் மேக் ஏன் அட்டெம்ப்ட்" என்றாள்.

"ரெட் டைல்ஸ்ஸையும் உபயோகித்து ஆளுக்கொரு கேம்ஸ் செய்வோமா" என்று கேட்டான்.

அவள், "ஓகே" என்று சொல்லி, "நான் வெற்றி பெற்றால் என்ன பரிசு கிடைக்கும்" என்று கேட்டாள்.

வைத்தி, "என்னையே தருகிறேனே" என்று முதலில் கூற நினைத்து, பின் அது தவறு என்றுணர்ந்து, "ஃபைவ் ஹண்ட்ரெட் ருபீஸ்" என்றான்.
"ஐ காண்ட் கிவ் தேட் மச் .. ஜஸ்ட் ஹண்ட்ரெட் ருபீஸ்" என்றாள்.

இருவரும் சம்மதிக்க, சொல்விளையாட்டுத் தொடங்கியது. இருவரும் தனித்தனியாக சில சொற்களை அமைத்தனர்.

இறுதியில் கணக்கெடுத்தபோது, பவித்ராவுக்கு அதிக பாயிண்ட்ஸ் கிடைத்ததிருக்க, "ஸீ ஐ ஹேவ் வொன்" என்று கூறி மகிழ்ந்தாள். வைத்தி பர்சில் இருந்து நூறு ரூபாய் எடுத்துக் கொடுத்தான். அதை அவள் பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டாள் சிரித்துக் கொண்டே.

அப்பொழுது, மணி பன்னிரெண்டாகியிருந்தது. “மதிய உணவு உண்ணலாமா” என்று சொல்லி, தெலுங்கு குடும்பத்தினர் இல்லத்திலிருந்து கொண்டுவரப்பட்டிருந்த மதிய உணவை இருவரும் பகிர்ந்துண்டனர். பிறகு, அறைக்குள் வந்து சோஃபாவில் அமர்ந்து கொண்டனர்.

11.

வைத்தி கைபேசியை எடுத்து நண்பர்கள் அனுப்பியிருந்த குறுந்தகவல்களை படித்துக்கொண்டிருந்த பொழுது, பவித்ராவைப் பார்த்து, "ஆண்களை படைத்தபின் ஆண்டவன் ஏன் பெண்களை படைத்தான் தெரியுமா" என்று கேட்டான்.

"ஆண்களை கட்டுப்படுத்த வேண்டுமென்றெண்ணிய கடவுள் பெண்களை படைத்து, பெண்கள் கையில் அதற்குரிய ரிமோட்டையும் கொடுத்தார் " என்று சொல்லி சிரித்தாள்.

பவித்ராவின் இந்த எதிர்பாராத விடையை கேட்டு அவன் ஒருகணம் திகைத்திருந்தாலும், சிரித்தான்.

"சரி .. அப்படியே இருக்கட்டும். பெண்களை படைத்த பின் ஆண்டவன் ஏன் வேறொன்றையும் படைக்கவில்லை" என்றதும், "பெண்களைக் காட்டிலும் புத்தியுள்ளவர்களை அவன் இனி படைக்கக் கூடாது என்று எண்ணிய பெண், கடவுள் கொடுத்த ரிமோட்டை உப்யோகித்து விட்டாள்" என்று சொல்ல, இருவரும் கலகலவென்று சிரித்தனர்.

பிறகு, ஏதேதோ ஜோக்குகள் சொல்லி இருவரும் சிரித்து மகிழ்ந்தனர். நேரம் போவதே தெரியாமல் இருவரும் வேறு பல விஷயங்களை விவாதிக் கொண்டிருந்த போது, கிச்சனுக்குச் சென்று ஒரு பெரிய தட்டில் தின்பதற்கு வாங்கி வந்திருந்த பண்டங்களையும், மற்றொன்றில் பழங்களையும் கொண்டு வந்து சென்டர் டேபிள் மீது வைத்தான். பிறகு, ஃபிரிட்ஜில் இருந்து ஃபுரூட் ஜூஸ், கோகோ கோலாவும் அதனுடன் இரண்டு கண்ணாடி கிளாசும் கொண்டு வந்தான்.

அதையெல்லாம் பார்த்த பவித்ரா, "ஒய் சோ மெனி ஐடெம்ஸ்" என்று கேட்க, “ஒருவனுக்குரிய உணவைத்த தானே இருவரும் பகிர்ந்து கொண்டோம். பேசிக்கொண்டே இவற்றிலும் கொஞ்சம் உண்போம்" என்ற வைத்தி, "டேக் சம்திங்" என்று சொல்லி சுவீட்ஸ் வைத்திருக்கும் தட்டை நீட்டினான்.

அதிலிருந்து ஒரு ஜிலேபியை அவள் எடுத்துக் கொண்டதும், அவனும் ஒன்றை எடுத்துக் கடித்தான். இருவரும் வேறு பல பண்டங்களை எடுத்து தின்று கொண்டே எதை எதையோ பற்றி பேசி சிரித்து மகிழ்ந்தனர்.

அப்பொழுது, வெளியில் நன்றாக வீசிய காற்று திறந்து வைத்திருந்த ஜன்னல்கள் வழியாக அறைக்குள் சுற்றி சுற்றிச் வர, அந்த அறை ஏ.சி. செய்யப்பட்டது போல் ஆகிவிட்டிருந்தது.

காற்றில் பவித்ராவின் துப்பட்டா அங்குமிங்கும் பறக்க, அதை எடுத்து அவளருகில் வைத்துக் கொண்டாள்.

மழை வருவதற்குரிய அறிகுறிகள் தென்பட, வானம் மெல்ல மெல்ல இருட்டத் தொடங்கியதால், அறைக்குள் வெளிச்சம் வெகுவாகக் குறைந்தது.

வைத்தி எழுந்து சென்று அறையிலிருந்த இரண்டு டியூப் லைட்டுக்களையும் போட்டுவிட்டு, அவன் இருந்த இடத்தில் வந்து அமர்ந்து கொண்டான்.

"மாநகரில் ஓரிரு இடங்களில் மழை வரலாம் என்று வானிலை மையம் அறிக்கை விடுத்திருப்பது உனக்குத் தெரியுமா" என்று பவித்ராவிடம் கேட்டான்.

"நான் நியூஸ் எப்போதாவது தான் பார்ப்பேன்" என்று சொல்லிக் கொண்டே, ஒரு ஆரஞ்சு பழத்தை எடுத்து, தோலுரித்து, சிறு சிறு சுளைகளை தட்டில் வைத்தாள். பிறகு, சுளை ஒன்றை எடுத்து கை நகத்தால் அதன் மேலிருக்கும் ஃபைபரை கிழிக்க, சுளை விரிந்தது.

அவள் செய்கையை பார்த்துக் கொண்டிருந்த வைத்திக்கு, ஆரஞ்சில் விரிந்த சுளையும் சாயம் பூசாத அவளது இதழ்களும் ஒன்று போலிருப்பதாகத் தோன்றியது. உரித்த சுளையிலிருந்த விதைகளை நீக்கிவிட்டு, அதை பவித்ரா வாயில் போட்டுக்கொண்டாள்.

அப்பொழுது பவித்ரா, "இசைக்கும் எமோஷனுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா " என்று வைத்தியிடம் வினவினாள்.

"நிச்சயமா இருக்கு"

"எப்படி .. கேன் யு எக்ஸ்பிலைன்"

"ஓ ஷ்யூர். ஸ்ரீ கிருஷ்ணன் புல்லாங்குழலிசைக்க அவர்பின் ஆவினம் செல்லவில்லையா ?

“பைடு பைப்பர்” (Pied Piper) இசைக்கு பின்னால் ஹமீளின் நகரத்து எலிகள் சென்று வெசர் நதியில் (Weser River) வீழ்ந்த கதை உனக்குத் தெரியாததல்ல. உறுதி யளித்த பணத்தை கொடுக்கவில்லை யென்பதால் பைடு பைப்பர் சின்னச்சிறு குழந்தைகளை இசையால் ஆகர்ஷித்துச் சென்று நதியில் இறக்கி மூழ்கடிக்கச் செய்ததான் என்றும் வரலாறுகள் கூறுகின்றனவே.

பயிர்களும் இசை கேட்டால் அதன் உற்பத்தித் திறன் அதிகரிக்கும் என்பார்கள்.

இசையில் இருக்கும் அந்த ஈர்ப்பு சக்தியால் பயிர், விலங்கினம் ஆகர்ஷிக்கப்படும் என்றால், ஆறறிவு ஜீவிகள் ஈர்க்கப்பட்ட மாட்டார்களா என்ன ?

நவரசம் எனப்படும் ஒன்பது சுவைகளாகிய பயம், வீரம், இழிப்பு, அற்புதம், இன்பம், அவலம், நகை, கோபம், சாந்தம் ஆகிய உணர்வுகளை இசை மூலம் உணர முடியும்.
சுதந்திர தினத்தன்றும், குடியரசு தினத்தன்றும் நாம் தேசபக்தி பாடல்கள் கேட்கிறோம் என்று வைத்துக்கொள். அதில் நம் மனம் லயித்து விட்டால், நமக்குள்ளொரு வீரம் வரும்.

அது போலவே, கடவுள் பக்திப் பாடல்கள் கேட்கும் பொழுது, தெய்வ பக்தி வரும். எமோஷனலி சார்ஜ்டு பாடல்கள் கேட்கும் போது, அதற்கேற்ப உணர்வுகள் உயிர் பெரும். அப்போ இரண்டிற்கும் தொடர்பு இருக்குன்னு தானே அர்த்தம்"

"எஸ் .. எஸ் .. ஐ அக்ரீ வித் யு"

"மனோ விஞ்ஞானி டேனியல் லெவிட்டின் கேளிக்கையைக் காட்டிலும் அதிக தெய்வீக சக்தி இசைக்கு உள்ளது" என்று சொல்கிறார் என்றான் வைத்தி.

அதைக் கேட்ட பவித்ரா, "அடேங்கப்பா .. நீ நிறைய விஷயங்களைக் கற்று வைத்திருக்கிறாய். ஐ லவ் இட்" என்றாள்.

"அது மட்டுமல்ல பவித்ரா .. இசையின் இந்த வலுவான தொடர்பால் மனிதர்களுக்கு விழிப்புணர்வுகளைக் கொடுக்கமுடியுமென்றும், ஆவேசம், கோபம் இவ்வுணர்வுகளை இசை மூலம் கட்டுப்படுத்தலாமென்றும், கேளிக்கைக்கு மட்டுமின்றி மனிதர்களுக்கு புதிய உற்சாகமும் கொடுக்க முடியுமென்றும் சொல்கிறார். இன்னும் சொல்லவேண்டுமென்றால் சொல்கிறேன். கேள்.

வேதங்களிலிருப்பது இசை. வெண்பாக்களில் இருப்பது இசை. காற்றில் இருப்பது இசை. கடல் அலைகள் எழுப்புவது இசை" என்று முடித்தான்.

பவித்ரா அவன் அறிவு கூர்மையையை நினைத்து வியந்தது மட்டுமல்லாமல் அவனுக்குப் பரிசாக ஒரு முத்தமும் கொடுக்கவேண்டுமென்று மனதில் நினைத்துக் கொண்டு. "நீ கூறுவதை என்னால் மறுக்க இயலாது, வைத்தி. ஐ ஆம் வெரி ப்லீஸ்டு வித் யுவர் ஆன்சர்" என்று கைகள் தட்டி அவனை மேலும் ஊக்குவித்தாள்.

வைத்தி, "தேங்க யு" என்று சொல்லி புன்னகைத்தான்.

12.

பிறகு, ஏதோ நினைவு வர, "ஏதோ ரொமான்டிக் சாங்ஸ் என்று சொன்னதுபோல் இருந்ததே" என்றாள் பவித்ரா.

"நீ வருவதற்கு சற்று முன் அது முடிந்துவிட்டது" என்று மீண்டும் பொய்யுரைத்தான்.

"கேன் யு பிளீஸ் பிளே இட் எகைன்.. சோ தேட் ஐ கேன் ஆல்சோ நோ யுவர் லைக்ஸ்"

பவித்ராவிடமிருந்து இப்படியொரு விருப்பம் வருமென்று வைத்தி எதிர்பார்த்திருக்கவில்லை.

வேறு வழியின்றி, "ஓ ஷ்யூர். ஒருவர் விருப்பம் போலவே மற்றொருவரின் விருப்பமும் இருக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. நான் பழைய தமிழ் திரைப்படப் பாடல்களை மிகவும் விரும்பிக் கேட்பவன். உனக்கு அது பிடிக்கவில்லை யென்றால் தயங்காமல் சொல்லிவிடு, பாட்டை அப்பொழுதே நிறுத்திவிடுகிறேன், சரியா" என்று சொல்லி, அவன் லேப்டாப்பில் ஒரு சி.டி.யை நுழைத்தான்.

"மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்" என்ற பாடல் முதலில் ஒலித்தது. அவள் மௌனமாகவே இருந்து அதை ரசித்தாள்.

அடுத்து வந்தது "எங்கே அவள் என்றே மனம் தேடுதே ஆவலால் ஓடிவா" என்ற பாடல். அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த பவித்ரா மனதில், "உன்னருகில் தானே இருக்கிறேன் வைத்தி" என்று சொல்லத் தோன்றியது.

வைத்தி ஆப்பிள் ஒன்றை எடுத்து பவித்ராவிடம் கொடுத்தான். மறுக்காமல் அதை அவள் பெற்றுக் கொண்டாள். அவனும் கையில் ஒரு ஆப்பிள் எடுத்து சுவைக்கத் தொடங்கினான்.

"எப்படி, எப்பொழுது அவளிடம் அவன் விருப்பத்தை தெரிவிப்பது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தான்" அந்நேரம் " சித்திரம் பேசுதடி" என்ற பாடல் ஒலிக்கத் தொடங்கியது. இருவரும் வேறொன்றும் பேசாமல் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது வெளியே காற்றின் வேகம் அதிகரிக்க, ஜன்னல் கதவுகள் "பட் பட்" என்று அடித்தன. வைத்தி எழுந்து சென்று கட்டில் அருகிலிருக்கும் ஜன்னல் கதவுகளை இழுத்து மூடும் நேரம், பவித்ரா மற்றொரு ஜன்னல் கதவுகளை மூடிவைத்தாள். ஜன்னல் கதவுகளை மூடிய வைத்தி கட்டிலில் உட்கார்ந்து, மடியில் ஒரு தலைகாணியை எடுத்து வைத்துக் கொண்டான். பவித்ரா அவளிருந்த இடத்திலேயே உட்கார்ந்து கொள்ளப் போகும் போது, "நீயும் கட்டில் மீதே உட்கார்ந்து கொள்ளலாம்" என்றான்.

அவளும் கட்டிலின் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டாள். வெளியில் காற்றின் வேகம் அதிகரித்துக் கொண்டிருந்தது என்பதை அவர்களால் உணர முடிந்தது. வரவேற்பறையில் திறந்திருந்த ஜன்னல்கள் வழியாய் ஊடுருவிய காற்று அவர்களிருந்த அறைக்குள் வந்துகொண்டிருந்தது.

வைத்தி மீண்டும் எழுந்து சென்று திறந்திருந்த ஜன்னல்களை எல்லாம் மூடிவைத்து கட்டிலில் அமர்ந்து கொள்ளும் நேரம், "என்னவளே அடி என்னவளே என் இதயத்தைத் தொலைத்துவிட்டேன்" என்ற பாடல் ஒலிக்கத் தொடங்கியது.

வைத்தி பவித்ராவைப் பார்த்த பொழுது, அவள் கண்களை மூடிக்கொண்டு பாட்டிற்குத் தகுந்தபடி கால்களால் தரையில் தாளமிட்டுக்கொண்டிருந்தாள் என்பதை அவள் காலில் அணிந்திருந்த கொலுசின் அசைவுகளிருந்து புரிந்து கொண்டான்.

அடுத்து வந்த பாடல், "மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ." முதலடியைக் கேட்டதும் பவித்ரா "காதல் இல்லையேல் சாதல் மேல்" என்றாள். அவர்கள் இருவரும் பாடலை கண்மூடி ரசித்துக் கொண்டிருந்தார்களா அல்லது அவரவரின் கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்களா என்று தெரியவில்லை.

"தேவி ஸ்ரீ தேவி உன் திருவாய் திறந்தொரு வார்த்தை சொல்லிவிடம்மா" என்ற பாடலைத் தொடர்ந்து "அமுதும் தேனும் எதற்கு நீ அருகினில் இருக்கையிலே" வரவும், வைத்தி பவித்ராவை ஓரக்கண்ணால் பார்க்க, அவள் நிலத்தில் தன் கால்விரல்களால் கோலமிட்டிக் கொண்டிருந்தாள்.

"பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வர நினைத்தேன்" பாடல் வரவும், பவித்ரா "இன்னும் பக்கம் வரவா" என்று மனதில் நினைத்தவாறே எழுந்து, ஜன்னலருகில் செல்வதைக் கண்டதும், "பக்கம் வருவாள் என்று நினைத்தால் விலகி அல்லவா செல்கிறாள்" என்று மனதில் நினைத்துக் கொண்டு கண்களை மீண்டும் மூடிக்கொண்டான்.

அவன் அவளை விரும்புகிறான் என்பதை அப்பொழுது சொல்லிவிடலாமா என்று நினைத்தான். அந்தப் பாடல் ஒளித்துக் கொண்டிருக்கும் போதே, பவித்ரா திரும்பி வந்து, கட்டிலில் மீண்டும் உட்கார்ந்து கொண்டாள்.

இப்பொழுது அவனுக்கும் அவளுக்கும் இடையில் இருந்த தூரம் வெகுவாகக் குறைந்திருந்ததை வைத்தி கவனிக்கவில்ல.

அப்பொழுது .. வானில் பளீரென வந்த மின்னலின் ஒளி திரைச்சீலைகளை தாண்டி அந்த அறைக்குள் வீச, வைத்தி கண்கள் திறக்கும் அந்நேரம், பேரிடியின் ஒலி கேட்க, மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டு, அறையில் இருள் சூழ்ந்தது. இடியோசை கேட்டு நடுங்கிய பவித்ரா ஒரே தாவலில் வைத்தியை இரு கைகளால் இறுக்கிக் கட்டிக்கொண்டாள். இடி ஓசை சற்று நேரம் நீடித்திருந்தது. இதை சற்றும் எதிர்பாராத வைத்திக்கு மனிதில் குபீரென ஒருவித பயமும் அதைத்தொடர்ந்து ஒருவித நடுக்கமும் ஏற்பட்டதை பவித்ரா உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.

"என்ன காரியம் செய்யத் துணிந்து விட்டாய் .. பவித்ரா" என்று வைத்திக்கு கத்த வேண்டும்போல் தோன்றிய மறுகணம், "இப்படியொரு பேரிடியை இதுவரை நான் கேட்டதே இல்லை. இடியோசையில் இதயம் ஒருசில நொடிகள் நின்றுவிட்டது போல் உணர்ந்திருந்த அவன், ஒரு ஆண் நடுங்கிவிட்டேன் என்றால் பவித்ரா ஒரு பெண் எவ்வளவு நடுங்கியிருப்பாளோ என்று நினைக்கவும் அவன் தவறவில்லை.

இருள் கவ்விய அறையில் லேப்டாப் வெளிச்சம் கொஞ்சம் தெரிந்தது. அவன் நெஞ்சில் புதைத்திருத்த அவள் முகத்தை தொட்டு அப்புறப்படுத்துவதா .. வேண்டாமா என்று ஒருசில நொடிகள் சிந்தித்தான். அவளது இறுகிய கைகள் இன்னும் இறுகியது போலொரு தோற்றம் அவனுக்கு அவளது இறுக்கத்தில் இருக்கும் பொழுது.

அவனது மேனியெங்கும் புல்லரிக்கும் அந்நேரம், இன்னும் சில வினாடிகள் அவள் அப்படியே இருந்தால் அவன் என்னென்ன செய்வானோ என்று அவனால் உறுதியாக நம்பமுடியவில்லை. பவித்ராவும் அவனை தன் பிடியிலிருந்து விடுவதாகத் தெரியவில்லை. அதுவரை விலகியிருந்த அவன் இருகைகளை அவள் மேனியில் வைத்தான். அப்பொழுது மீண்டுமொரு மின்னல். அதைத் தொடர்ந்து ஒரு இடி. இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்திருக்க ஒலித்தது ஓர் பாடல்."கண்ணுக்குள் நூறு நிலவு .. இது ஒரு கனவா .."

நூறு நிலவுகள் போதாது. நூறாயிரம் நிலவுகள் நொடிப்பொழுதில் அவன் கண்களில் தோன்றி மறைந்தன. அவன் கண்களில் தோன்றிய நிலவுகளில் ஒன்றேனும் அவள் கண்களுக்குத் தெரிந்திருக்குமா என்றொரு சந்தேகம் அவன் மனதில் எழுந்தது. அசையாமல் அவளிருக்க, அவன் சற்று அசைந்தான். அவள் மெல்லக் கண்கள் திறந்தாள். அவள் முகம் அவன் நெஞ்சில் புதைந்திருப்பதை உணர்ந்தாள். வைத்தி உடனே அவள் மேனியில் வைத்திருந்த கைகளை நீக்கவும், அதை அவள் தன்னிரு கைகளால் பற்றிக்கொண்டாள்.

அவள் கண்களை நோக்கினான் அவன். அவள் பயம் விலகியிருந்தது போல் தோன்றியது. "செம இடி" என்று இருபொருள் பட உரைத்தான்.

நாணத்தால் அவள் கன்னங்கள் சிவந்தன போலொரு தோற்றம் அவன் கண்களுக்குப் புலப்பட்டது.

"ஐ காட் ரியல்லி ஃபிரைட்டன்டு. வாட் எ தண்டர். நெவர் ஹேடு இட் பிஃபோர்" என்றாள்.

"ஐ வாஸ் ஃபிரைட்டன்டு ட்வைஸ்" என்று சொல்லி அவளை பார்க்கவும், அவள் "எப்படி" என்று வினவ, "யு ஹெல்டு மி வெரி டைட்டிலி" என்று பதிலளிக்க, அவள் மௌனித்திருந்தாள்.

லேப்டாப்பிலிருந்து அடுத்து வந்தது ஒரு பாடல் .. பார்த்த முதல் நாளே .. உன்னைப் பார்த்த முதல் நாளே .. காட்சி பிழைபோல". கட்டிலிலிருந்து அவன் இறங்க முயன்ற பொழுது அவள், அவன் கைகளை பிடித்திழுத்தாள். அப்பாடலில் வரும் சில வரிகளைக் கேட்டதும், இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள, அவன் விரல்கள் அவள் கன்னத்தை வருட, அவள் கண்களை மூடிக்கொண்டாள். அவள் அவன் அவன் உள்ளங்கையில் ஒரு முத்தம் கொடுத்தாள். அவள் அவன் மார்பில் முகம் புதைக்க, வைத்தி அவளை அணைத்துக் கொண்டான். அவள் கூந்தலில் விரல்களிட்டு வருடி விடும் பொழுதே அவள் காதோரம் இதழ்கள் பதிய, அவள் சிலிர்த்தாள்.

அப்பொழுது, மின்னலே படத்தின் வசீகரா என்ற பாடல் வரவும், இருவரது உடலிலும் மின்னல் வேகத்தில் வெப்பம் தாக்க, இருவரும் தன்னிலை இழந்தனர். பாடலின் ரிதத்திற்கு தகுந்த பீட்ஸ் இருவரது உடல்களை ஊடுருவியது. ஒருவரை யொருவர் பிரிய மனமில்லாமல் அணைத்திருக்க, "பூங்கதவே தாழ் திறப்பாய் .. பூவாய் பெண் பாவாய்" என்ற பாடல் தொடங்கியது.

சொர்க்கத்தின் நுழைவாய்ப் பூங்கதவுகள், மலர் மொட்டுக்கள் இயற்கையின் செயலால் விரிவதுபோல் விரிந்தன.

அவன் மீதவளும், அவள் மீதவனும் மாறி மாறி முத்த மழை பொழிந்தனர். பவித்ராவின் அங்கத்தில் அவன் இதழ்கள் படாத இடமே இல்லை என்று சொல்லவிடலாம். தலை முதல் பாதம் வரை ஓரிடம் விடாமல் எங்கும் முத்தங்கள் பதித்தான். இருவரின் நாசியிலிருந்து வெளியேறிய வெப்பக்க காற்றால் அந்த அறையின் வெப்பநிலை சற்று ஏறிவிட்டதை இருவரும் உணரும் நிலையில் இல்லையே ! கடல் அலைகள் எழுந்து பின் விழுந்து கடலோடு கடலோடு கலப்பது போல் அவன் பவித்ராவின் உடலில் எழுவதும் விழுவதும் தொடர்ந்தது. பாடலின் இசையலைகள் அவர்களின் உடலசைவிற்கு சமமாக இருந்தது. இசையால் ஈர்க்கப்பட்டனவோ அவ்விரு இளம் உள்ளங்கள்.

பாடல் முடியும் தருணம், சாகர சங்கமம் முற்றுப் பெற, லேப்டாப்பில் இருந்த பேக்-அப் பவர் குறைந்து, லேப்டாப் செயலற்று நின்றது.


13.

அதுவரையில் மெய்மறந்து இணைந்திருந்த இருவரும் இணை பிரிய, பவித்ரா எழுந்தாள். மேலாடையொன்றும் அவள் மேனியில் இல்லாதிருப்பதைக் கண்டு, அவளொரு கையால் நெஞ்சிரு செழிப்பை மூடிக்கொண்டு, மற்றொரு கையால் அவளணிந்திருந்த ஆடைகளை எடுத்தணிந்து கொள்ள முற்பட்டாள்.

அவள் நெற்றிப் பொட்டில் ஒரு முத்தமிட்டான் வைத்தி.

"யூ ஹேவ் ரியலி வெட்டெட் மி, வைத்தி. ஐ ஆட் டு ஹேவ் எ பாத் நவ்" என்று சொல்லி அந்த அறைக்குள்ளிருக்கும் குளியறைக்குள் நுழைந்தாள்.

அப்பொழுது, வெளியில் மழை ஓய்ந்திருந்தது.

குளித்து, ஆடைகளணிந்து வெளியே வந்த பவித்ரா, சோஃபாவில் சென்று அமர்ந்துகொண்டாள். வைத்தி ஒரு கிளாசில் பழரசம் கொடுக்க, அவளது வலக்கரம் அசைத்து வேண்டாமென்று சைகை செய்தாள்.

"ஏன்" என்று வைத்தி கேட்டவும், "நவ் ஐ வாண்ட் டு லீவ் ஃபிரம் ஹியர்" என்றாள்.

வைத்தி, "ஐ வில் டிராப் யு" என்தற்கு அவள், "நோ .. ஐ வில் கோ மைசெல்ஃப்" என்று சொல்லி எழுந்து வாயிற்கதவை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

ஒன்றும் பேசாமல் வைத்தி அவள் பின் சென்று, கதவுகளைத் திறந்தான்.

வீட்டருகில் இருந்த சாலையில் சற்று மழைநீர் தேங்கி இருக்கக் கண்டு, "டேக் கேர் .. பவித்ரா. கிவ் மி எ கால் வென் யு ரீச் ஹோம்" என்றான். "ஐ வில்" என்றவாறே நடந்து சென்று பிரதான சாலையை அடைந்தாள்.

வைத்தி, பவித்ரா செல்வதை பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது, அதிர்ஷ்ட வசமாக ஒரு ஆட்டோ எதிர்ப்புறக் குறுக்குச் சந்திலிருந்து வரவும், பவித்ரா அதை நிறுத்தி, அதில் ஏறிக்கொண்டாள். சில நொடிகளில் ஆட்டோ வைத்தியின் கண்களில் இருந்து மறைந்தது.

பவித்ரா சென்ற பின், வைத்தி அவன் அறைக்குள் பிரவேசித்தான். அறையில் இருள் சூழ்ந்திருந்தது. இருளில் அவன் அமர்ந்திருக்க, அவன் மனம், "பவித்ரா பழரசம் பெற்றுக்கொள்ள மறுத்தது மட்டுமல்லாமல் உடனே வேறு சென்றுவிட்டாள். அவளைக் கொண்டு விடுகிறேன் என்று சொன்னதற்கும் மறுத்து விட்டாள். ஏதோ அதிர்ஷ்டம் .. ஆட்டோ கிடைத்தது. இல்லையென்றால் எவ்வளவு தவித்திருப்பாளோ .. எப்படியும் மேடவாக்கம் சென்றடைவதற்கு முப்பது நிமிடங்கள் தேவைப்படும். மழையின் காரணமாக அதிகமாகக் கூடத் தேவைப் படலாம். வீடு வந்து சேர்ந்து விட்டேன் என்று தகவல் தருவாளா .. மாட்டாளா என்று குழம்பியிருந்த அதே நேரத்தில், டைம்பாஸ் செய்ய வந்த அவளிடம் தவறாக நடந்து கொண்டு விட்டோமா .. பேரிடியின் காரணமாக பயந்து தன்னைக் கட்டிக் கொண்ட அவளிடம், நெறி தவறி நடந்து கொண்டு விட்டோமா என்றெல்லாம் நினைத்து நினைத்து மனம் வருந்தினான்.

பவித்ரா சென்று இரண்டு மணி நேரத்திற்குமேல் ஆகிவிட்டது. அவளிடமிருந்து ஒரு செய்தியும் வைத்திக்கு வரவில்லை. அவளை அழைத்து விவரம் கேட்க நினைத்தான். இருளில் கைபேசி இருக்குமிடம் தெரியாமல் கட்டிலில் விரல்களால் தடவித் தேடிய போது, பவித்ராவின் உடலை அவன் விரல்கள் தீண்டியது நினைவுக்கு வந்தது.

அவன் மீது நிச்சயமாக அவளுக்கு கோபமும் எரிச்சலும் தோன்றியிருக்க வேண்டும். வீட்டிற்கு விருந்தாளியாக வந்த பவித்ராவிடம் அவன் நடந்துகொண்ட விதம் மாபெரும் தவறு மட்டுமல்ல, தண்டனைக்குரிய குற்றமும் கூட என்று அவன் மனம் நினைத்தபோது, அவன் உடலில் ஒரு நடுக்கம் தோன்றியது.

கைக்குக் கிட்டிய கைபேசியை எடுத்து, பவித்ராவுடன் தொடர்பு கொண்டு சில நொடிகள் காத்திருந்தான். பவித்ராவின் கைபேசி ஒலித்ததே தவிர அதை அவள் எடுக்கவில்லை. தொடர்பு கொண்டவரின் தொடர்பு தொடர்பு கொண்டவருக்குக் கிடைக்காவிட்டால், என்ன செய்தி கிடைக்குமோ அது தான் வைத்திக்கும் கிடைத்தது. அவன் தொடர்பை டிஸ்கனெக்ட் செய்து மீண்டும் தொடர்பு கொண்டான். மீண்டும் அதே நிலை. மீண்டும் இருமுறை தொடர்பு . ஒரு பலனும் இல்லை. வெறுப்படைந்து அவன் கைபேசியை வீசிக் கட்டில் மீதெறிந்தான். அவனுக்கு அவன் மீதே கோபம் உண்டானது.

நேரம் கடந்தது. பவித்ராவிடம் மறுநாள் காலையில் தொடர்பு கொண்டு மன்னிப்புக் கேட்டுவிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று முடிவு செய்தான். பிறகு, அவன் எப்பொழுது உறங்கினானோ தெரியவில்லை.

14.

காகத்தின் கரைச்சலும், புள்ளினங்கள் கூவலும் கேட்டு கண் விழித்தான் வைத்தி. அப்பொழுது மணி எட்டு. கைபேசியை எடுத்த போது, அதிலிருந்த பேட்டரியில் மின்சக்தி இல்லையென்று தெரிய வந்தது. கைபேசியை மின்னிணைப்பு செய்து கொண்டிருக்கும் போது, நேற்றிரவில் பவித்ரா அவளது இல்லம் சென்றடைந்தபின் அவனுடன் தொடர்பு கொண்டிருக்கலாம். கைபேசியில் சார்ஜ் தீர்ந்து இருந்ததால் ஒருவேளை அவளுக்கு அவனுடன் தொடர்பு கொள்ள இயலாதிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டான்.
கைபேசி சார்ஜ் ஆகிக்கொண்டிருக்கும் பொழுதே, பவித்ராவை அழைத்தான். அப்பொழுதும் பவித்ராவின் கைபேசி ஒலித்ததே தவிர. அதை அவள் எடுக்கவில்லை.

அவன் சென்று பல் துலக்கி, முகம் கழுவி வந்து மீண்டும் ஒருமுறை தொடர்பு கொண்டான். சில நொடிகள் ஒலித்த பவித்ராவின் கைபேசியில் "ஹலோ .. யாரு" என்று கேட்க, "பவித்ரா .. வைத்தி" என்று சொல்ல, "ராங் நம்பர்" என்று சொல்லி மறுமுனையிலிருந்தவர் தொடர்பைத் துண்டித்தார்.

வைத்திக்கு ஒரே அதிர்ச்சி. பவித்ரா அவனிடம் தொடர்பு வைத்துக்கொள்ள விரும்பாமல் ராங் நம்பர் என்று சொல்லிவிட்டாளா. அவன் மீண்டும் தொடர்பு கொண்டபோது, "ஏம்பா ஒருதடவை சொன்னாத் தெரியாதா உனக்கு" என்று சொல்லவும் தொடர்பு துண்டிக்கப்பட்டது. வைத்திக்கு என்ன செய்வதென்றே புலப்படவில்லை.

அதே நேரம் ..

பவித்ரா அவளது கைப்பேசியை அவளிருக்குமிடத்தில் தேடிக் கொண்டிருந்தாள். அவளது கைப்பையில் தேடினாள். அவளிருக்கும் இல்லத்தின் எல்லா இடங்களிலும் தேடினாள். கிடைக்கவில்லை. அவளுடன் இருப்பவர்கள் மூவரிடமும் கேட்டாள் .. நீங்கள் யாராவது என் கைபேசியை கண்டீர்களா" என்று. அதற்கு அவர்கள் இல்லை என்று கூறிவிட்டனர்.

எங்கே வைத்தேன் என்று தெரியவில்லையே. ஒருவேளை வைத்தியின் இருப்பிடத்தில் வைத்துவிட்டு வந்துவிட்டேனா. இல்லையே .. வைத்தியின் வீட்டிலிருந்து ஆட்டோவில் வரும்போது தானே, அம்மாவிடமிருந்து ஃபோன் வந்தது.

அதன் பிறகு, பஸ் நிறுத்தத்தில் இறங்கி ஆட்டோவிற்கு பணம் கொடுத்து விட்டு வீடு திரும்பி வந்தேன். ஆட்டோவிற்குப் பணம் கொடுக்கும் போது, கைபேசியை ஆட்டோவில் வைத்ததை நினைவு கூர்ந்தாள். பிறகு, அதை எடுக்காமல் வந்துவிட்டேனா .. ஆம். அப்படித்தான் இருக்க வேண்டும். ஐயோ .. இப்பொழுது என்ன செய்வது. மோசம் போய்விட்டோமே என்று நினைத்து வருந்தினாள் பவித்ரா.

விலையுர்ந்த கைப்பேசியைத் தொலைத்து விட்டோமே என்ற வருத்தத்தை விட, அதிலிருக்கும் காண்டாக்ட் நம்பர் மற்றும் டேட்டா போய்விட்டதே என்ற வருத்தம் தான் மேலோங்கி நின்றது. கைபேசி தொலைத்து விட்டோமென்று போலீசிடம் சென்று புகார் கொடுக்க அவள் மனம் இடம் கொடுக்கவில்லை. ஆனால், கைபேசி யாரிடம் கிடைத்ததோ அவர்கள் அதை துர்ப்பிரயோகம் செய்தால் .. என்று நினைத்தபோது, அவள் நெஞ்சம் கலங்கினாள்.


15.

"என்னங்க. எந்திரிங்க. எட்டு மணியாச்சு. இன்னிக்கு தொழிலுக்கு போறதில்லையா" என்று கேட்டவாறே, உறங்கி கொண்டிருக்கும் தன் புருஷனை தட்டி எழுப்பினாள் புஷ்பா.

"ஆமாம் புள்ள. உடம்பெல்லாம் ஒரே அசதியா இருக்கு. கொஞ்ச நேரம் கூட தூங்க விட்டேன் என்னெ" என்று சொல்லி திரும்பிப் படுத்துக்க கொண்டான் அவள் புருஷன்.

:அப்போ எப்போ தொழிலுக்குப் போவே" என்று கேட்டாள் புஷ்பா.

"ரெண்டுமணிக்கு மேல போனா வுண்டு .. இல்லேன்னா இல்ல" என்றான் அவன்.

"அப்ப சரி. நான் மார்க்கெட்டுக்கு போயி உனக்குப் பிடிச்ச விராலு மீனு வாங்கியாறேன். நல்லா சாப்பிடு. அப்படியே உறங்கி எந்திரிச்சு கடைக்கு போயி, தாடி மீசை வெட்டிக்கிட்டு வா. கல்யாணம் ஆயி ஒரு வருஷம் ஆச்சு. எப்ப என் பேரப்புள்ளய தரப்போறேன்னு உங்க அம்மா கேக்கறா" என்றவள் தொடர்ந்து, "ஏங்க .. இந்த ஃபோனு யாரோடுது. விடிஞ்சதுலேந்து யாரு யாரோ ஃ போன் பண்ணி பவித்ரா பவித்ரா ன்னு கேக்கறாங்களே" என்று சொன்னவுடன், படுத்திருந்த அவன் எழுந்து, "இது ஏது ஃபோன்" என்று கேட்க, புஷ்பா தொடர்ந்தாள்.

"காலேல ஆட்டோவெ தண்ணி ஊத்தி கழுவப் போறச்செ அங்க இருந்திச்சு: என்று சொல்லி அந்த கைபேசியை புருஷன் கைல கொடுத்தாள். அதை வாங்கிப் பார்த்த புஷ்பாவின் கணவன், "ரொம்ப விலையுள்ள ஃபோனு இது. நேத்து ராத்திரி கடைசி சவாரியா ஒரு சின்னப் பொண்ணு ஏறிச்சு. ஒருவேளை, அந்தப் பொண்ணு பேரு பவித்ராவா இருக்குமோ" என்றான் அவன்.

"ஐயோ பாவம் அந்தப் பொண்ணு. ஃபோனு இல்லாம திண்டாடிக்கிட்டு இருக்கும். நீ போயி அதுகிட்ட கொடுத்துடு. உனக்கு ரொம்ப புண்ணியமா இருக்கும். என் வயத்துல அவ ஆசிர்வாதத்துல ஒரு புள்ளகுட்டி வரட்டும்" என்றதும்,

"போடி பைத்தியம். நான் எங்க போயி அந்த பொட்டப்புள்ளய தேடறதாம்" என்றான்.

"வேற எங்க தேடுவ. நேரா அந்தப் பொண்ணு வீட்டுக்குப் போயி கொடுத்துடு"

"அது முடியாதே”

"ஏன்"

"அந்தப் புள்ள மேடவாக்கம் பஸ் ஸ்டாண்டுல இறங்கிடுச்சு. அந்தப் புள்ள இந்தப் பக்கம் போச்சோ. யாருக்குத் தெரியும். வீட்டுக்குப் போயி இறங்கி இருந்தாத் தானே எனக்கு அவ வீடு தெரியும்"

"அதுவா .. சங்கதி. அப்போ இந்த ஃபோன நானே வெச்சுக்கவா. நீ எனக்கு குடுத்த ஃபோனு ஒரு டபாக்கூரு ஃபோனு. அதுல ஒரு எளவும் சரியா கேக்கறதில்ல".

"வேண்டாம் .. வேண்டாம் . அந்தப் புள்ள போலீசுல புகார் கொடுத்து இருந்தா, நீ பேசறதை போலீசு ட்ரேக் செய்து உன்னைப் போட்டு நச்சரிக்கும். எதுக்கு இந்த வேண்டாத வம்பு. ஒன்னு பண்ணுவோம். ரெண்டு மூணு மாசம் பொறுத்துக்கோ. அப்பறமா ஒருநாள் நான் கடைக்குப் போயி அதுல இப்ப நீ வெச்சுருக்கற சிம் கார்டு போட்டுத் தரேன். அது வரைக்கும் நீ இதுல ஓங் கைய வெச்சுடாதே, சரியா" என்று சொல்ல, “மூணு மாசம் வரைக்கும் ஏன் பொறுத்திருக்கணும். இன்னிக்கோ நாளைக்கோ சிம் கார்டா மாத்திக்கொடுத்தா என்ன கெட்டா போகும்" என்று கேட்க, "சொன்னா சொன்னதை கேளு" என்று அவன் கத்த, புஷ்பாவும் "சரிங்க. அப்போ நான் போயி உனக்கு மீனு வாங்கியாறேன்" என்று கூறி அங்கிருந்து வெளியேறினாள்.

பவித்ராவின் ஃபோனில் இருந்த சிம் கார்டை தனியாக வெளியில் எடுத்து விட்டு, பக்கத்தில் இருந்த சின்ன பீரோவைத் திறந்து அதற்குள் சிம்கார்டையும், ஃபோனையும் போட்டு விட்டான்" அவன்.

16.

கோமளம் பாட்டியின் மகன் குமரேசன் பெங்களூர் வந்த மறுதினம் தாயை அழைத்துக் கொண்டு அப்போலோ மருத்துவ மனைக்குச் சென்றான். அவரை பரிசோசித்த மருத்துவர் பெரிதாக்க கவலைப்படுவதற்கு ஒரு அவசியமுமில்லை . மழைகாலம் காரணமாய் நெஞ்சில் கபம் சற்று அதிகமாகி இருக்கிறது என்று கூறி, கபம் குறைய மருந்து எழுதிக்கொடுத்து, ஐந்து நாட்கள் அதை உட்கொண்டால் போதும் என்று விட்டார்.

அன்று மாலை வைத்தியின் தாய் தங்கம் மாமியிடமிருந்து கோமளம் பாட்டிக்கு ஃபோன் வந்தது. அப்போது கோமளம் பாட்டி தான் பெங்களூரில் இருப்பதாகக் கூறி, அவளுக்கு உடல் நலம் குன்றியிருந்த போது வைத்தி செய்த உதவிகளை நினைவுகூர்ந்து, அவனை மிகவும் புகழ்ந்தாள். அதைக் கேட்டு தங்கம் மாமி உள்ளம் குளிர்ந்தாள்.

"நீங்க பெரியவா. உங்களை போன்றவர்களின் ஆசிர்வாதம் இருக்கும் போது வைத்திக்கு வேறு என்ன வேண்டும்" என்று தங்கம் மாமி சொல்ல, "தங்கத்திற்கு பிறந்தது தங்கமாத் தானே இருக்கும்" என்று பாட்டி சொல்லும் போது, தங்கம் மாமி இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்தாள்.

அப்பொழுது, பாட்டியின் பேத்தி மோகனவிற்கும் வைத்திக்கும் திருமணம் செய்துவைக்கலாம் என்று நினைக்றேன். குமரேசன் வந்திருந்த போது, வைத்திய பார்த்தான். அவனுக்கும் வைத்திய பிடித்திருக்கு. அதனால நீ வைத்தியின் ஜாதகத்தை குமரேசன் விலாசத்திக்கு அனுப்பிக் கொடு. நானும் மோகனாவின் ஜாதகத்தை உனக்கு அனுப்பித் தரச் சொல்றேன். இருவருக்கும் ஜாதப் பொருத்தம் இருக்கும்னு நம்பறேன். மத்தபடி தெய்வ நிச்சயம் எப்படியோ" என்றாள்.

அதற்கு, மறுப்பேதும் கூறாமல் தங்கம் மாமி, "அப்படியே செய்வோம்" என்றாள். இரண்டு நாட்களுக்குப் பின், தங்கம் மாமி வைத்தியின் ஜாதகத்தை அனுப்பி வைத்தாள். மோகனாவின் ஜாதகத்தை குமரேசன் தங்கம் மாமிக்கு அனுப்பி வைத்தான்.

மறுதினம், வைத்தி, மோகனா இருவரின் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு மோகனாவின் தாய் மங்களமும் பாட்டியும். அவர்களது ஜோதிடரிடம் சென்றனர். இருவரின் ஜாதகங்களின் கிரக நிலைகள் கண்டறிந்த ஜோதிடர் இருவரின் ஜாதகமும் அமோகமாக பொருந்தி இருப்பதாகக் கூறி, "பத்து பொருத்தங்களில் எட்டு பொருத்தம் இருக்கு. இது மாதிரி பொருத்தங்கள் கிடடைப்பது மிகவும் அபூர்வம்" என்று மொழிந்தார். அதைக் கேட்டு அவர்கள் இருவரும் சந்தோஷித்தனர்.

கோமளம் பாட்டி ஜோதிடரிடம். "அப்பிடியே கல்யாணம் எப்போ நடக்கும்னு சொன்ன நல்லா இருக்கும்" என்றாள்.

மீண்டும் இரண்டு ஜாதகங்களை பார்த்து, விரல்களில் ஏதோ கணக்கிட்டு, பின் பஞ்சாங்கத்தைப் புரட்டிப் பார்த்த ஜோதிடர், "தை பிறந்தால் நல்வழி பிறக்கும்" என்றார்.

அதைக் கேட்ட மோகனாவின் தாய் அவரிடம், "மகளுக்கு அவள் படிப்பு முடிவதற்குள் கல்யாணம் ஆகிவிடுமா" என்று வினவ, ஜோதிடர், "கிரக நிலைகள் அப்படித்தான் அமைந்திருக்கு. சுபஷ்யம் சீக்ரம்" என்றார்.

"கல்யாணத்திற்கு பின் அவள் படிப்பு தொடருமான்னு கொஞ்சம் பாத்து சொல்லுங்கோ" என்றாள் மங்களம்.

"படிப்பு தொடர்வதற்கு வாய்ப்புக்கள் இருக்கு. அது மட்டுமில்ல. நல்ல ரேங்க் வாங்கி பாஸாகிவிடுவாள்" என்றும் கூறினார்.

பாட்டியும் மங்களமும் மிக சந்தோஷத்துடன் அவருக்கு தட்சிணையாக ஐநூற்றி ஒன்று ரூபாய்கள் கொடுத்து அவரிடமிருந்து விடைபெற்றனர்.

17.

மங்களம், கோமளம் பாட்டி இருவரும் ஜோதிடரிடம் சென்ற அதே நாள், தங்கம் மாமியும் வைத்தி, மோகனா ஜாதகத்தை ஜோதிடரிடம் காண்பிக்கச் சென்றிருந்தாள்.

அந்த ஜோதிடரும் பத்து பொருத்தங்களில் எட்டு பொருந்தியிருப்பதாகக் கூறினார். மேலும், இருவருக்கும் வெகு சீக்கிரமே திருமணம் நடந்துவிடுமென்றும் கூறி, "பையனுக்கு ஜாதகத்தில் சனியின் பார்வை இருப்பது போல் தெரிகிறது. அது நீங்குவதற்கு சனிபகவானுக்கு பத்து வாரங்கள் சனிக் கிழமை தோறும் விளக்கேற்றி வழிபட்டால் போதும்" என்று கூறினார். தங்கம் மாமியும் அப்படியே செய்கிறேன் என்றாள்.

"நீங்கள் செய்வதைக் காட்டிலும், உங்க மகனே செய்தால் இன்னும் சிறப்பு" என்றார்.

தங்கம் மாமி, "அப்படியே செய்கிறேன்" ன்று சொல்லி விடை பெற்றாள்.

அன்றிரவு ..

"என்னம்மா .. படுத்துண்டாச்சா" என்றவாறே குமரேசன் தாயிருக்கும் அறைக்குள் வந்தான்.

"இருமல் மருந்து குடிக்கல்ல" என்று சொல்ல, அவன் மருந்தை எடுத்து வாயிலூற்றிக் கொடுத்தான்.

அதை அருந்திய பின், ஜோதிடர் கூறியதை மகனிடம் தெரிவித்தாள்.

அதைக் கேட்ட அவர் மகன் "தங்கம் மாமி ஜாதகத்தை ஊர் ஜோசியரிடம் காண்பித்திருப்பார்கள் என்று நம்புகிறேன். அவரிடம் இருந்து என்ன செய்தி வருகிறதென்று பார்ப்போம். மோகனாவிற்கு வைத்தியையும், வைத்திக்கு மோகனாவையும் பிடித்திருந்தால் மேற்கொண்டு தொடரலாம், அம்மா" என்றான்.

"நீ சொல்லறது சரிதான். நாளைக்கே தங்கத்திடம் பேசறேன். சம்மதம் என்றால் மோகனாவின் புகைப்படத்தை வைத்திக்கு அனுப்பிக்கொடு. அவன் பாக்கட்டும். அதுபோல வைத்தியின் புகைப்படத்தை உனக்கு அனுப்பித்தர தங்கத்திடம் சொல்லிடறேன்." என்றாள்.

"சரி அம்மா. நீ தூங்கு" என்று சொல்லி, தாய் படுத்துக் கொண்டதும், போர்வை எடுத்து அவள் கழுத்துவரை போர்த்தி, விளக்கை அணைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.


18.

மறுநாள், கோமளம் பாட்டி கூப்பிடுவதற்குள் தங்கம் மாமியிடம் இருந்து ஃபோன் வந்தது.

"நானே ஒன்ன கூப்டறதுக்கு இருந்தேன். நீயே கூப்டுட்டே. ஒரு நல்ல சமாச்சாரம் சொல்லப் போறேன்" என்றாள்.

"உங்க குரலின் தொனிலேந்து என்ன சொல்லப் போறேள்ன்னு நான் யூகிச்சிண்டாச்சு. சொல்லுங்கோ"

"ஜாதகபொருத்தம் பாத்தியா ? ஊர் ஜோசியர் என்ன சொன்னார்"

"நேத்திக்குத்தான் காமிச்சேன். நல்ல பொருத்தம் இருக்குன்னுட்டார். நீங்களும் அதை தானே சொல்லப் போறேள்"

"ரெண்டு பேர் ஜாதகமும் அமோகமா பொருந்திருக்குன்னு சொன்னார். பத்துல எட்டு பொருத்தம் இருக்காம். அவா ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆச்சுன்னா பாக்கி ரெண்டும் பொருந்திடும். பாத்துக்கோ " என்று இருபொருள் படும்படிக் கூறி கோமளம் பாட்டி சிரித்தாள்.

"ஊர் ஜோஸ்யர் நீங்க முதல்ல சொன்ன பத்துல எட்டு பொருத்தம் இருக்குன்னு சொன்னார். ஆனா நீங்க கடைசியா சொன்னதை சொல்லல்லேயே" என்று தங்கமும் சிரித்தாள்.

"அதை நானா சேத்துண்டேன். போதுமா" என்றாள்.

"வேற ஏதாவது சொன்னாரா ஜோசியர்" என்று தங்கம் மாமி கேட்டதும் விலாவாரியா பெங்களூரு ஜோசியர் சொன்னதனைத்தும் சொல்லி முடித்தாள் கோமளம் பாட்டி.

அதையெல்லாம் கேட்ட தங்கம் மாமி "வைத்திக்கு ஏதோ சனி பார்வை இருக்காம்" என்று சொல்லி ஊர் ஜோசியர் கூறியதனைத்தும் கூறி முடித்தாள்.

"அதுக்கென்னா .. நான் இன்னும் ஒரு வாரத்துல சென்னைக்கு திரும்பிப் போவேன். போனதுக்கப்பறம் நானே அவன சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு தீபம் ஏத்தி வெக்கச் சொல்லறேன். கவலைய விடு"

"வைத்திக்கு தெய்வ பக்தி இருந்தாலும் அவன் இந்த மாதிரி தீபம் எல்லாம் ஏத்தி வெப்பனான்னு எனக்கு சந்தேகமா இருக்கு".

"நீ வீணா கவலை பட்டுக்காதே. நான் சொன்னா வைத்தி கேப்பன், நீ அவனோட ஒரு ஃபோட்டோ குமரேசனுக்கு அனுப்பிக்கொடு. குமரேசன்ட்ட மோகனா ஃபோட்டோ ஓனக்கு அனுப்பி வெக்கச் சொல்லறேன். அதை வைத்திக்கு காட்டு. மோகனாவ அவனுக்கு நிச்சயம் பிடிக்கும். மோகனாவுக்கும் வைத்திய நிச்சயம் பிடிக்கும். பாத்துக்கோ " என்றாள்.

"ஒங்க வாக்கு பலிக்கட்டும். அடுத்த மாசம் வைத்தியோடு அப்பாக்கு ஸ்ரார்த்தம் வரது. இங்க வந்து செய்யப்போறானா, இல்ல சென்னைலயா ன்னு தெரியல்ல. அங்க பண்ணப் போறான்னா நான் அங்க வருவேன். வைத்திட்ட பேசீட்டு மறுபடியும் உங்கள்ட்ட பேசறேன். உடம்ப பாத்துக்குங்கோ" என்றாள் தங்கம் மாமி.

"நானும் சென்னைக்குப் போனப்பறம் ஃபோன் பண்ணறேன். வெச்சுடட்டுமா" என்று சொல்லி கைபேசியின் தொடர்பைத் துண்டித்தாள் கோமளம் பாட்டி.


19.

செல்ஃபோன் தொலைத்தபின், மிகுந்த கவலையுடன் இருந்தாள் பவித்ரா. அம்மாவிடமிருந்து ஃபோன் வரும். அந்த செல்ஃபோன் யார் கையில் கிடைத்திருந்தலும், அதிலிருக்கும் சிம் கார்டை அவர்கள் ஒருவேளை மாற்றியிருந்தால், அம்மாவிற்கு என் நம்பர் கிடைக்காமல் போகும். அம்மா என்னுடன் தொடர்பு கொள்ளமுடியாமல் தவித்து, எனக்கு என்ன ஆச்சோ, ஏதாச்சோ என்று பீதியடைந்து இங்கே வந்தால் என்ன செய்வது என்று குழம்பிப் போயிருந்தாள்.

எனவே, ஃபோன் தொலைந்து போன விஷயத்தை அம்மாவிற்கு தெரிவித்து விடுவோம் என்றெண்ணிக் கொண்டாள்.

அவளுடன் தங்கி இருக்கும் சித்திகாவிடம், அம்மாக்கு ஃபோன் தொலைந்து போன விஷயத்தை சொல்லவேண்டும். ஏதாவது அர்ஜெட் என்றால் உன் ஃபோன்ல கான்டெக்ட் பண்ண சொல்லட்டுமா" என்று கேட்டாள்.

அதற்கு சித்திகா, "நீ வேண்டுமானால் ஃபோன் தொலைந்துபோன விஷயத்தை உன் அம்மாவிடம் சொல்லிக்கொள். ஆனால், ஒரு அவசரத்திற்குக் கூட இதில் அவங்க கூப்பிடக் கூடாதென்று" திட்டவட்டமாகக் கூறிவிட்டாள்.

சித்திகாவின் இந்த பதிலால் பவித்ரா சற்று கோபம் கொண்டாலும், அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், பானுவின் நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டு, தாயிடம் விஷயத்தைக் கூறி, வேறொரு ஃபோன் வாங்கிய பிறகு, புதிய நம்பரை தெரிவிப்பதாகவும் சொல்லிவிட்டாள்.

பவித்ராவின் செல்ஃபோன் தொலைந்த விஷயம் மறுநாள் அவள் வாழ்ந்து வரும் வீட்டு சொந்தக்காரி நளினிக்குத் தெரிய வந்தது. பவித்ராவை அழைத்து, "கவலைப் படாதே. நான் புதிய செல்ஃபோன் வாங்கித் தருகிறேன்" என்று அவளிடம் கூறினாள்.

பவித்ராவுக்கு நளினி அவள் செலவில் செல்ஃபோன் வாங்கித் தருவதற்கும் ஓர் காரணம் இருந்தது.

நாற்பது வயதடைந்தும் திருமணம் செய்து கொள்ளாத நளினி அரசியல் செல்வாக்கு படைத்தவள். பெண்கள் சுயவுதவிக் குழு என்ற போர்வையில், பவித்ரா போன்ற இளம் பெண்களை பிரைன்வாஷ் செய்து, சட்ட விரோத செயல்களில் ஈடுபடுத்தி அவர்கள் மூலம் பணம் சம்பாதிப்பது ஒன்று தான் அவள் கொள்கை. பவித்ராவுக்கு முன் அவள் வலையில் சிக்கியவர்கள் தான் சித்திகா, ஸ்ம்ரிதி, பானு.
நளினி எப்படிப்பட்டவள் என்பதை அறியாமல், அவள் ஆசை வார்த்தைகளை நம்பி, அவள் நடத்திவரும் குழுவில் பவித்ரா சேர்ந்துவிட்ட ஒரு மாதத்திற்குள் நளினியின் மறுபக்கம் அவளுக்குத் தெரியவந்தது.

தப்பித்து ஓடி விடலாமென்றால் படிப்பு வீணாகி விடும். போலீசிடம் சென்று நளினி நடத்திவரும் பெண்கள் சுயவுதவிக் குழு பற்றிய தகவல்களை தெரிவித்தாலும் ஒரு பலனும் இருக்காது. ஏனென்றால் போலீசில் அவளுக்கு செல்வாக்கு இருந்தது தான்.

தகப்பன் இல்லாத பவித்ரா நன்கு படித்து, ஒரு வேலையில் சேர்ந்து, தாயை அவள் வாழ்நாள் முழுதும் மகிழ்விக்க வேண்டும் என்று நினைத்திருந்தாள்.

அவளொரு நெறிகெட்ட தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஒருத்தியின் கூட்டத்தில் இருப்பது அவள் தாய்க்குத் தெரிந்தது விட்டால், உயிரையே விட்டுவிடுவாள் என்றும் அறிந்திருந்தாள்.

படிப்பையும் தாயையும் விட்டுவிட்டு எங்காவது ஓடிவிட்டாலும், அவளைக் கண்டறிந்து நளினியின் கையாட்கள் கொலையும் செய்து விடுவார்கள் என்றும் அறிந்திருந்தாள்.

முதல் முறை, நளினி நடத்தும் தொழில் பற்றி பவித்ரா தெரிந்து கொண்ட போது, அவள் சொல்லுவது போல் நடந்துகொள்ளா விட்டால், கொன்று நடுவழியில் எறிந்துவிடுவேன் என்று மிரட்டி இருந்தாள்.

அவளறியாமல் அவளது விசிட்டிங் கார்ட் வைத்தியின் கைகளுக்குப் போனதால் அவன் தொடர்பு எதிர்பாராமல் கிடைத்த ஒன்று. சினிமா, பீச், மகாபலிபுரம் போகலாம் என்று அழைத்தபோது மறுத்ததிற்கு காரணம் நளினியின் ஆட்கள் அவளது நடவடிக்கைகளை கண்காணித்து வருவது தான். அவளுக்குத் தெரியாமல் பிற ஆடவர்களுடன் தொடர்பு வைத்துக் கொளவதை நளினி மேடம் ஒரு போதும் அனுமதித்ததில்லை. வைத்தியுடன் பவித்ரா சுற்றுவது நளினி மேடத்திற்கு தெரியவந்தால் நிலைமை சிக்கலாகிவிடுமென்றும் அவள் அறிந்திருந்தாள்.

வைத்தியை அவனிருக்கும் இடத்தில் நேரில் சந்தித்து அவனைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டபின் அவன் உதவியுடன் நளினியின் சமூக விரோத செயல்களை உலகிற்கு அம்பலப் படுத்த வேண்டுமென்று நினைத்திருந்தாள்.
ஒருவேளை, பவித்ராவும் ஒழுக்கம் கெட்டவள் என்று தெரிந்து, உதவ முன்வரவில்லை என்றால் என்ன செய்வது என்று நினைத்த போது, அவள் நெஞ்சம் கலங்கினாள்.

இரண்டு நாட்களுக்குப் பின், நளினி புதியதோர் செல்ஃபோன் வாங்கி பவித்ராவிற்கு கொடுக்க வைத்திருந்தாள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக பவித்ரா அன்று மாலை கல்லூரியிலிருந்து திரும்பி வரும் வேளை சாலையைக் கடக்க முயற்சி செய்த போது புயல் வேகம் பறந்து வந்த காரொன்று அவள் மீது மோத, அடிபட்டு அநாதை போல் நடுவீதியில் குற்றுயிரும் குலைவுயிருமாக வீழ்ந்து கிடக்கும் அவளை மக்கள் பலரும் பார்த்து பரிதாபம் தெரிவித்தார்களே தவிர, ஒருவரும் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்ல முன்வரவில்லை.

பிராதான சாலையில் போக்குவரத்து தடைப்பட்டதால் வழி எங்கும் வாகனங்கள் நின்றுவிட, விரைந்து வந்த காவல் துறையினர் பலத்த காயங்களுடன் பவித்ராவை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் அவள் உயிர் பிரிந்து விடுகிறது.

பவித்ரா கைப்பையில் இருக்கும் கல்லூரி அடையாள அட்டையிலிருந்து அவள் விலாசம் அறிந்துகொண்டு காவல்துறை நளினியின் இருப்பிடம் சென்று செய்தியைத் தெரிவித்த போது அதிர்ச்சி அடைந்தாள். பவித்ராவைத் தன் தொழிலில் அரங்கேற்றும் நாள் விரைவில் வருமென்று காத்திருந்த நளினிக்கு பவித்ராவின் அகால மரணம் மாபெரும் ஏமாற்றத்தை அளித்துவிட்டதே என்று மனதில் புலம்பிக்கொண்டாள்.


20.

கோமளம் பாட்டி தங்கம் மாமியிடம் ஃபோனில் தொடர்பு கொண்ட இரண்டு நாட்களுக்குப்பின் மதிய நேரம் குரியரில் ஒரு அழைப்பிதழ் வந்தது. அதைப் திறந்து பார்த்தாள் பாட்டியின் மருமகள் மங்களம்.

அதைக் கண்ட, கோமளம் பாட்டி மருமகளிடம், " யாரிடமிருந்து இன்விடேஷன் என்று வினவினாள்.

"சாம சாஸ்திரியின் மகன் கோபால் பையனுக்கு உபநயனப் பத்திரிகை"

"பூணூல் என்னிக்கு"

"அடுத்து வர சனிக்கிழமை"

"எங்க வெச்சு நடத்தறா" என்று கேட்டாள் கோமளம் பாட்டி.

"சென்னைல வெச்சுத் தான்".

" சென்னைலையா .. சென்னைல எங்கே"

"அடையார்ல"

"கோபால் இப்போ அடையார்லயா இருக்கான்"

"ஆமாம். போன வருஷம் துபாய்லேந்து வந்துட்டார்"

"இப்போ கோபால் என்ன பண்ணறான்"

"ஏதோ ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்ணறார் ன்னு சொன்னார்" மோகனாவோடு அப்பா.

"ஓ. அப்படியா ? ம்ம்ம். குமரேசனும் சாம சாஸ்திரியின் மகன் கோபாலும் இஞ்சினீரிங் ஒரே காலேஜ்ல தான் படிச்சா. இஞ்சினீரிங் படிச்சதுக்கு அப்பறம் கோபாலுக்கு துபாய்ல வேலை கிடைச்சுப் போயிட்டான். அவனைப் பாத்து பல வருஷம் ஆச்சு" என்றாள் கோமளம் பாட்டி.

இரவு குமரேசன் வீடு வந்ததும், "குமரேசா .. கோபால் பையனின் பூணூலுக்கு நீ போவியா" என்று கேட்க அவன், "நானும் மங்களமும் போவோம்" என்றான்.

"அப்போ நானும் கூடவே வரேன். மோகனாவையும் கூட்டிண்டு போகலாம். மோகனாவும் வைத்தியும் ஓதத்தரை ஒத்தர் பாத்துண்ட மாதிரியும் ஆகும். இல்லையா" என்று தாய் கேட்க, "அதுவும் சரிதான் அம்மா" என்றான் குமரேசன்.

உபநயனத்திற்கு முன்தினம் வெள்ளிக் கிழமையன்று பெங்களூரிலிருந்து அவர்கள் நால்வரும் சென்னை வந்தடைந்தனர்.

உபநயன சுபகாரியத்தில் பங்கேற்றபின், கோமளம் பாட்டி பள்ளிக்கரணையில் இருந்து கொள்கிறேன் என்று சொல்லிவிட, ஞாயிறுக் கிழமை காலை குமரேசன், மங்களம், மோகனா பெங்களூருக்குச் சென்று விட்டனர்.

மோகனாவைப் பற்றி வைத்தி என்ன நினைக்கிறான் என்று தெரிந்து கொள்ள வேண்டுமென்று கோமளம் பாட்டி நினைத்திருந்தாள்.


21.

நளினி அவள் இல்லத்தில் சோஃபாவில் அமர்ந்திருந்தவாறே கால்களை டீ-டேபிள் மீது நீட்டியிருந்தபடி, தினகரன் நாளேடு பார்த்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது, அவளருகில் வைத்திருந்த கைபேசி ஒலித்தது.

கைப்பேசியைக் எடுத்து, அழைத்தவர் யாரென்று பார்த்த உடனே, டீ-டேபிள் மீதிருந்த கால்களை நிலத்தில் வைத்து, எழுந்து நின்றாள்.

அவர்கள் இருவருக்குமிடையில் பேசிக்கொண்டது ...,

"ஐயா .. வணக்கம். நல்லா இருக்கீங்களா ? ரொம்ப நாளாச்சு உங்ககிட்டயிருந்து ஃபோன் வந்து. என்னை மறந்துட்டிங்கன்னு நினச்சுட்டேன் ஐயா " என்று வழக்கத்திற்கும் அதிகமாக குழைந்தாள்.

"நான் நாலாத் தான் இருக்கேன். சொல்லப்போற விஷயத்தை நல்லா கேட்டுக்கோ" என்றவுடன் "சொல்லுங்க ஐயா" என்றாள்.

"மாநில அரசுக்கு மட்டும் தெரிந்திருந்த உன் பெண்கள் சுய உதவிக்குகுழு இப்போ மத்திய அரசுக்கும் தெரிஞ்சிருக்கு" என்றதும், "அப்டீங்களா ஐயா" என்று சொல்லி தொடர்ந்து, "ஏதாவது பிரச்னை கிச்சனை ஆயிடுமா ஐயா" என்று கேட்கும் போதே அவள் குரலில் ஒரு வித பயம் தெரிந்தது.

"பயப்படும்படி ஒன்னும் இல்லை, நளினி. நீ இனிமே தில்லிலயும் கொடிகட்டிப் பறக்கப் போகிறாய் என்று சொல்ல வந்தேன்"

"அப்டீங்களா ஐயா ? உங்களைப்போல நடமாடும் தெய்வங்களின் கருணை இருக்கும் போது, எங்க குலதெய்வத்தைக் கூட கும்பிடணும்ன்னு தோணறதில்லை ஐயா"

"சரி .. சரி .. ரொம்பவே குழையாதே. உடம்புக்கு நல்லதில்ல. நீ தனியாத்தான் இருக்கே. பக்கத்தில யாருமில்லையே" என்றதும், "தனியாத்தான் ஐயா இருக்கேன்".

"இந்தியாவில புதிய தொழில் தொடங்குவதற்கு வெளிநாட்டிலிருந்து பலபேர்கள் தில்லிக்கு வந்திருக்காங்க. அதில சிலபேர் தமிழ்நாட்ல தொழில் தொடங்க விரும்புறாங்களாம்" என்று சொல்லும்போது இடைமறித்து "நான் நடத்தற தொழிலா ஐயா" என்றதும், "சீ வாய மூடு" என்று நளினியை அதட்டி விட்டு, "அவங்க செய்ய நினைக்கற தொழில் எலெக்ரானிக்ஸ் சம்பத்தப்பட்டது. பத்தாயிரம் கோடி முதலீடு. தொழிற்சாலை தொடங்குவதற்கு தேவையான நிலமெல்லாம் பாத்துட்டாங்களாம்”.

"இப்போ அவங்க சென்னைல தங்கி இருக்காங்க. மகாபலிபுரம், பாண்டிச்சேரி சுத்திப்பாக்கணுமாம்.. அவங்க மூன்று பேருக்கு நீ உதவி செய்யணும்" என்றதும்,

"என்னங்கய்யா .. பெரிய பெரிய வார்ததை சொல்றீங்க. செய்துடறேன் ஐயா .. ஆனா .." என்று நளினி குரலை நீட்டிய போது,

"பணம் அதிகம் வேணும். அவ்வளவு தானே. நீ எதிர்பார்க்கறதுக்கு மேல கிடைக்கும். அது மட்டுமில்ல. அவங்களை திருப்திபடுத்தினா போதும். அவங்க தனியா நிறைய பரிசுகளும் கொடுப்பாங்க" என்றான்.

"எப்போ வேணுமாம் ஐயா" என்று கேட்டாள் நளினி.

"வெள்ளி, சனி இரண்டு நாட்களுக்குத் தேவை. ஞாயிறு மதியத்திற்கு மேல் தான் உன்னிருப்பிடத்திற்கு திரும்பி வரமுடியும் என்பதை முன்கூட்டியே உன்னிடம் சொல்லி விடுகிறேன்" என்றதும் நளினி, "சரீங்கைய்யா" என்று மட்டும் சொல்லி நிறுத்த, மறுமுனையில் அவர் தொடர்ந்து, "நான் சொல்லும் பெயரையும் நம்பரையும் குறித்து வைத்துக்கொள். நாளை அந்த நபர் உன்னுடன் நேரில் தொடர்பு கொள்வார். வரும் பொழுது உனக்கு ரொக்கப் பணம் தந்து விடுவார். வெள்ளிக்கிழமை மூன்று மணியளவில் மீண்டும் அவரே வந்து உங்களை எல்லாம் அழைத்துச் செல்வார். அதுபோல ஞாயிறு மதியத்திற்கு மேல் உன்னிருப்பிடத்திற்கே திருப்பிக் கொண்டுவந்து விட்டுவிடுவார் " என்று முடித்தார்.

நளினிக்குத் தலை கால் புரியவில்லை. இருப்பினும் அவள் மனதில் ஒரு சிறு சந்தேகம்.

அவள் சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள. "ஐயா .. உங்களை எல்லாம் அழைத்துச் செல்வார் என்றீர்களே. நானும் போக வேண்டுமா" என்று கேட்டாள்.

"ஆமாம், நளினி. நீ அவர்களுடன் சென்றால் உன் பெண்களுக்கு ஒரு மனோதைரியம் இருக்கும். அதனால் தான்" என்றதும், "சரீங்கைய்யா" என்றாள்.

"இறுதியாக ஒன்று சொல்கிறேன். இது உன் வாழ்வில் ஒரு புதிய திருப்பத்தை தரும். எனவே ஆக்ட் இன்டெலிஜெண்ட்லீ" என்றதும் நளினி "அப்படியே ஆகட்டுமய்யா .. வணக்கம்" என்றதும் அவர்களின் சம்பாஷணை நிறைவு பெற்றது.

மறுநாள், நளினியை அந்த நபர் நேரில் சந்தித்து, என் பெயர் முத்துக்குமரன், ஐயாவுக்கு ரொம்ப நெருக்கமானவன் என்று அறிமுகப்படுத்துக் கொண்டு, ஐந்து லட்சம் ரொக்கப் பணம் கொடுத்து விட்டு, மீண்டும் வெள்ளிக் கிழமை சந்திப்பதாகக் கூறிச் சென்று விட்டார்.

நளினி வெள்ளைக் கிழமை வரக் காத்திருந்தாள்.


22.

நளினி, வெள்ளிக் கிழமை அன்று காலை வீட்டு மாடிக்குச் சென்று, சித்திகா, ஸ்ம்ருதி, பானு, மூவரையும் அழைத்து, அவர்கள் ஒவ்வொருவர் கையிலும் புத்தம் புதிய ஐநூறு ரூபாய் நோட்டுக் கட்டு கொடுத்து, "இன்று நீங்கள் எங்கும் வெளியில் நீங்கள் போக வேண்டாம். மதியத்திற்கு மேல் நான் கூப்பிடும் பொழுது நீங்கள் கீழே வந்தால் போதும்" என்று சொல்லிவிட்டு வந்துவிட்டாள்.

அந்த இளம் பெண்கள் மூவரும் கத்தைப்பணம் கையில் இருப்பதைப் பார்த்து வியப்பில் ஆழ்ந்திருக்க, சித்திகா மற்ற இருவரையும் நோக்கி, "மேடம் நடத்தற தொழில் மோசமென்றாலும், நம்மிடம் அவள் நடந்து கொள்ளும் முறை எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு. இவ்வளவு பெரிய தொகை நமக்குக் கொடுத்திருக்கின்றார் என்றால் அவங்களுக்கு ஏதோ லாட்டரி அடிச்சிருக்கணும். சோ லெட் அஸ் என்ஜாய் லைஃப் ஆஸ் இட் அன்ஃபோல்ட்ஸ்” என்றாள். ஸ்ம்ருதி, பானு, இருரும் சித்திகாவின் கூற்றை மறுக்கவில்லை.

அன்று மாலை கிட்டத்தட்ட நான்கு மணியளவில் நளினி வீட்டின் வாயிலில் கருப்பு நிற மஹிந்திரா ஸ்கார்பியோ வந்து நின்றது. நளினி ஓட்டுநர் இருக்கை அருகிலும், சித்திகா, ஸ்மிருதி, பானு, மூவரும் பின்னிருக்கைகளிலும் ஏறி அமர்ந்து கொண்டனர்.

மேடவாக்கத்திலிருந்து கிளம்பிய அந்தக் கார், சோழிங்கநல்லூர் ஓ.எம்.ஆர். சிக்னல் தாண்டி, ஈ.சி.ஆர். சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி மகாபலிபுரம் கடந்து, பாண்டிச்சேரிக்குச் செல்லும் சாலையில் இருக்கும் தனியாருக்குச் சொந்தமான பேரடைஸ் ரிசார்ட்ஸ் வந்து நின்றது.

நளினி இறங்கியதும், மற்றவர்களையும் இறங்கிக்கொள்ளச் சொன்னாள். அப்பொழுது, அவர்களருகில் ஓடிவந்த ஒரு பணியாள், நளினிக்கு வணக்கம் சொல்லி, வரவேற்பறைக்கு அழைத்துச் சென்று, அமர்ந்துகொள்ளும்படிக் கூறி, 'ஐயா இப்போ வந்துடுவார்" என்று சொல்லி அங்கிருந்து சென்றுவிட, நளினி ஒரு சோஃபாவில் உட்கார்ந்து கொண்டாள். மற்ற மூவரையும் அமர்ந்து கொள்ளச் சொன்னாள். அங்கிருக்கும் பெரிய சோஃபா ஒன்றில் மூவரும் அமர்ந்து கொண்டனர்.

சற்று நிமிடங்களில், வெள்ளை நிறத்தில் டீ-ஷர்ட்டும், ஜீன்ஸும், கண்களில் கண்ணாடியும் அணிந்து வரும் மனிதர் வேறு யாருமில்லை, அவள் இல்லத்திற்குச் வந்து ஐந்து லட்சம் ரொக்கப் பணம் கொடுத்த முத்துக்குமரன் என்பதை கண்டதும், இருக்கையிலிருந்து எழுந்து நின்ற நளினி, "ஐயா நீங்க .. இங்க இருப்பீங்கன்னு எதிர்பாக்கல" என்று சொல்லும் போதே மற்ற மூவரும் இருக்கையிலிருந்து எழுந்து நின்றனர்.

"மேல ரெண்டு ரூம் உங்களுக்கு அர்ரேன்ஜ் பண்ணிருக்கேன். வாங்க போகலாம்" என்று சொல்லி அவர் முன் செல்ல அவரைப் பின்தொடர்ந்தனர் மற்றவர். நளினிக்கு ஒரு தனி அறையையும், மற்றவர் மூவருக்கும் ஒரு அறையையும் காண்பித்துக் கொடுத்து, நளினியை பிறகு சந்திப்பதாகக் கூறி சென்று விட்டார் அந்த மனிதர்.

இரண்டு ஏக்கர் பரப்பளவில் இருந்த அந்த தனியார் ரிசார்ட்டில் ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு சமமாக அனைத்து வசதிகளும் இருந்தன. அவளுக்குகென்று ஒதுக்கப்பட்டிருந்த அந்த அறையிலிருந்து கிழக்குப் புறத்தில் அலை மோதும் கடல் தெரிந்தது.


23.

ஏழரை மணியளவில் நளினியின் அறைக்குள் பிரவேசித்த முத்துக்குமரன், விருந்தினர் மூவரும் வந்து விட்டதாகக் கூறி, நளினியுடன் வந்திருக்கும் பெண்களை ஒவ்வொருவராக அழைத்துச் சென்று, அவர்கள் தங்கி இருக்கும் அறைக்குள் அனுப்பிவைத்த பின், நளினியை அழைத்துக்கொண்டு முத்துக்குமரன் அவர் தங்கியிருக்கும் அறைக்குள் சென்றார். நளினியை இருக்கையில் அமர்ந்து கொள்ளச் சொல்லிவிட்டு, இண்டர்காமில் ஒரு பாட்டில் ஸ்காட்ச் விஸ்கியும் அதனுடன் வேறு சில ஐட்டம்ஸும அவரது அறைக்கு கொண்டுவரும்படி பணித்த பத்து நிமிடங்களில் பணியாள் ஒருவன் வந்து அவர் விரும்பியதனைத்தும் அங்கு வைத்து விட்டு வெளியேறினான்.

"லேட் அஸ் ஹேவ் சம் ட்ரிங்க்ஸ்" என்று நளினியைப் பார்த்து முத்துக்குமரன் சொன்னதும், "ஐ டோன்ட் டேக் ட்ரிங்க்ஸ்" என்றாள் நளினி.

ஆச்சரியத்துடன் அவளை பார்த்த முத்துக்குமரன், "இஸ் இட் .. ஐ காண்ட் பிலிவ் இட்" என்று சொல்லி, "தென் ஐ ஆம் ஆர்டரிங் சம் சாஃ ப்ட் ட்ரிங்க்ஸ் ஃபார் யு" என்றபடியே, இன்டெர்காமில் ஆப்பிள் ஜூஸ் கொண்டுவர பணித்தார்.
சிறிது நேரத்தில் ஆப்பிள் ஜூஸும் வந்தது.

ஒரு கோப்பையில் ஆப்பிள் ஜூஸ் ஊற்றி நளினியிடம் கொடுத்து விட்டு, இன்னொரு கோப்பையில் ஸ்காட்ச் ஊற்றி, அதில் இரண்டு ஐஸ்கட்டிகளை போட்டு, சீயர்ஸ் என்று அவளுக்குச் சொல்லாமலே, ஒரே விழுங்கில் முடித்து விட்டு, நளினியிப் பார்த்தார்.

நளினியின் அழகிய கண்கள், கட்டுக்குலையாத மார்பு, இடுப்பில் இருக்கும் வனப்பு முத்துக்குமாரனை அவள் பால் ஈர்த்தன. நாற்பது வயதாகியும் நளினி எப்படி அவள் சரீரத்தை இவ்வளவு கண்ணும் கருத்துடன் பாதுகாத்து வருகிறாள் என்பதை அறிந்து கொள்ள ஒரு ஆவல் அவர் மனதில் எழுந்தது.

"ஹவ் ஓல்டு ஆர் யு நளினி" என்று அவளிடம் பேச்சை தொடங்கினார் முத்துக்குமரன்.

"பெண்களின் வயதும் ஆண்களின் வருமானமும் பிறர் தெரிந்து கொள்ளக் கூடாது" என்றாள் நளினி.

"உண்மை தான். இன் மை எஸ்டிமேஷன் யு ஷுட் பி அபவுட் ஃபார்ட்டி. இந்த வயதிலும் இவ்வளவு கண்ணும் கருத்துமாக உன் மேனியை பாதுகாத்து வருகிறாய் என்றால் நீ நிச்சயமாக யோகா செய்கிறாய் என்று எண்ணத் தோன்றுகிறது" என்றார் முத்துக்குமரன்".

தன் வயதை சற்று குறைத்து மதிப்பிட்டதை எண்ணி நளினி உள்ளூர மகிழ்ந்தாளே ஒழிய. முத்துக்குமாரனுக்கு பதிலேதும் கூறவில்லை.

கையிலிருந்த ஜூஸில் ஒரு பாதியைக் குடித்து, இரண்டு கேஷ்யூ எடுத்து மெல்லத் தொடங்கினாள்.

மீண்டும் கோப்பையில் விஸ்கி ஊற்றிய போது, நளினி அதில் இரண்டு ஐஸ்கட்டிகளை எடுத்திட்டாள்.

"தேங்க யு" என்ற முத்துக்குமரன், "வாட் வுட் யு லைக் டு ஹேவ் ஃபார் டின்னர்" என்று கேட்டு, அவர்களிருவருக்கும் டின்னர் ஆர்டர் செய்து விட்டு, கோப்பையிலிருந்த விஸ்கியைக் காலி செய்து, "ஒன் மோர் எண்ட் தட் இஸ் ஆல்" என்று சொல்லி மீண்டும் காலியான கோப்பையில் விஸ்கி ஊற்றிக் கொண்டார்.

ஐஸ்கட்டிகள் எடுத்திடும் போது நளினியைத் தடுத்து, "நோ ஐஸ் திஸ் டைம்" என்று விட்டார்.

ஒன்பது மணியளவில் இருவருக்கும் டின்னர் வந்தது. பணியாள் இருவருக்கும் டின்னர் பகிர்ந்தளிக்க, அவர்களிருவரும் உண்டு முடித்தனர்.

முத்துக் குமரன் புகைபிடிப்பதற்கு எழுந்து வெளியே செல்லும் போது, "நளினி வுட் யு மைண்ட் ஸ்பெண்டிங் தி நைட் வித் மி" என்று கேட்க, சரி என்று சொல்வதா, இல்லை என்று சொல்வதா என்று முடிவெடுக்க முடியாமல் இருந்தாள் நளினி. நளினியிடமிருந்து பதிலொன்றும் வராததைக் கண்டு, முத்துக்குமரன், "நான் திரும்பி வரும் போது, நீ இங்கிருந்தால் உன் முடிவு என்ன என்பதை நான் அறிந்துகொள்வேன். நான் திரும்பி வருவதற்குள் ஒரு முடிவெடு" என்று கூறிவிட்டு வெளியே சென்று விட்டார்.

நளினி என்ன முடிவு எடுப்பதென்று தெரியாமல் குழம்பியிருந்தாள். ஐயாவுக்கு மிகவும் நெருக்கமானவர் முத்துக்குமரன். மறுத்துவிட்டால் அதனால் வரும் பின்விளைவுகள் எப்படியிருக்குமோ என்றெண்ணிய போது, "இறுதியாக ஒன்று சொல்கிறேன். இது உன் வாழ்வில் ஒரு புதிய திருப்பத்தை தரும். எனவே ஆக்ட் இன்டெலிஜெண்ட்லீ" என்று ஐயா கூறியது நினைவு வந்தது. எனவே, முத்துக்குமரனுக்கு மறுப்பேதும் கூற வேண்டாம் என்று முடிவெடுத்தாள்.


24.


சற்று நேரம் பிறகு, முத்துக்குமரன் திரும்பி அறைக்குள் பிரவேசித்த பொழுது நளினி அங்கு அமர்ந்திருக்கக் கண்டு அறையின் கதவுகளைத் தாளிட்டு அவளருகில் வந்தமர்ந்தார்.

சனிக்கிழமை காலை , தூங்கி எழுந்த நளினியிடம் ”வந்திருக்கும் விருந்தாளிகள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். உன் பெண்கள் மூவரும் மிகவும் அனுசரணையாக இருப்பதாகக் கூறினார்கள். எனவே, இது என் வகையாக உனக்கு அன்பளிப்பு" என்று கூறி கையில் ஐநூறு ரூபாய் கட்டுக்கள் இரண்டைக் கொடுத்து, "விருந்திடருடன் பாண்டிச்சேரி போகிறேன். மாலை நேரம் அவர்களுடன் திரும்பி வந்து விடுவேன். அறைக்குள்ளில் அடைந்து கிடக்காமல் நீங்கள் அனைவரும் ரிசார்ட்டை நன்றாகச் சுற்றிப்பாருங்கள்" என்றார். "சரி" என்று சொல்லிவிட்டு நளினி அங்கிருந்து வெளியேறி, அவளது அறைக்குள் சென்றாள்.

முத்துக்குமரன் விருந்தினரை அழைத்துக்கொண்டு பாண்டிச்சேரி புறப்படுவதற்கு சற்று முன், சித்திகா, ஸ்மிருதி, பானு, ஆகிய மூவரும் அவரது அறைக்கு வந்து சேர்ந்தனர்.

நளினி குளித்து விட்டு, இன்டெர்காமில் சித்திகாவை தொடர்பு கொண்டு, மூவரும் அவளது அறைக்கு வரவழைத்து, காலை உணவு அவர்களுடன் பகிர்ந்து கொண்டாள். பின், அன்றைய தினம் முழுவதும் உண்பதும், ரிசார்ட்டை சுற்றிப் பார்த்துக் கொண்டும் கழித்தனர். மூவரும் பல இடங்களில் நின்று இயற்கை சூழலில் தத்தம் செல்ஃபோன்களில் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

பாண்டிச்சேரிக்குச் சென்றிருந்தவர்கள் மாலையில் திரும்பிய பிறகு, இரவுப் பொழுதை முன்தினம் போலவே விருந்தினர் அறைகளில் கழித்தனர்.

ஞாயிறு காலை, சித்திகா விருந்தினரின் அறையிலிருந்து தன் அறைக்கு வந்த குளித்துக் கொண்டிருக்கும் போது தான் அணிந்திருந்த தங்க வளையல்கள் கையில் இல்லாதிருக்கக் கண்டு, அவைகள் விருந்தினரின் அறையில் வீழ்ந்திருக்கலாம் என்றெண்ணி அந்த அறைக்குள் சென்று, அதை தெரிவிக்க, அவர் தேடியெடுத்துக்கொள் என்று கூறிவிட்டு, வெளியே சென்றுவிட்டார். சித்திகா படுத்திருந்த கட்டிலில் தேடித் பார்த்தாள். கிடைக்க வில்லை. ஒவ்வொரு இடமாக தேடிக் கொண்டிருக்கும் பொழுது, அந்த அறையில் ரகசிய கேமரா இரண்டு இடங்களில் பொருத்தி வைத்திருப்பது அவளுக்குத் தெரிய வந்தது. அவள் தேகத்தில் ஒரு நடுக்கம். “இந்த அறையில் ரகசிய கேமரா இருப்பது போல், மற்ற அறைகளிலும் இருக்குமோ என்று நினைத்தபோது, மனதில் பீதி தோன்றியது. எவரும் அறியாமல் வீடியோ எடுத்திருக்கக் கூடுமோ ? என்று சந்தேகித்தாள்.

அப்பொழுது, "ஆர் யு ஸ்டில் செர்ச்சிங் யுவர் கோல்டன் பேங்ள்ஸ் " என்றபடியே அறைக்குள் நுழைந்தார் விருந்தினர். "எஸ் சார்" என்றதும், அவரும் சேர்ந்து வளையல்களைத் தேடினார். இறுதியில், வளையல்கள் கிடைத்தன. ஆனால், அவள் சந்தேகத்திற்கு விடைதான் கிடைக்கவில்லை.
25.


நெஞ்சம் படபடக்க சித்திகா, நளினி மேடம் இருக்கும் அறைக்கு புயல் வேகத்தில் வந்து நின்றாள். பீதியில் பயந்திருந்த சித்திகாவின் நெற்றியில் வியர்வைத்துளிகள் அரும்பி இருந்தன. அவள் உடல் நடுங்குவதைக் கண்டுகொண்ட நளினி "ஆர் யு அன்வெல் சித்திகா" என்று வாத்சல்யத்துடன் கேட்க, மேடத்திடம் சித்திகா ரகசியக் கேமராக்கள் கண்டதை தெரிவித்தாள். அதைக் கேட்ட நளினியும் அதிர்ச்சியடைந்து, முத்துக்குமரன் ஐயாவிடம் அதைப்பற்றி கேட்கிறேன்" என்று சித்திகாவை சமாதானம் செய்து அனுப்பிவிட்டு, முத்துக்குமரன் இருக்கும் அறைக்குள் பிரவேசித்தாள்.

முத்துக்குமரனிடம் நளினி, "ஐயா .. இங்குள்ள அறைகளில் ரகசிய கேமராக்கள் பொருத்தப் பட்டிருக்கின்றவா" என்று சுற்றி வளைக்காமல் நேரடியாகவே கேட்டுவிட்டாள்.

நளினியின் இந்தக் கேள்வியை சற்றும் எதிர்பார்த்திருக்காத அவர், "அப்படியிருக்க வாய்ப்பில்லை" என்றார். பிறகு, அவளிடம், "உனக்கு ஏன் அப்படி ஒரு சந்தேகம்" என்று வினவ, சித்திகா விருந்தினருடன் இருந்த அறையில் இரண்டு இடங்களில் கேமரா பொருத்தி இருப்பதை பார்த்ததாக என்னிடம் இப்பொழுதான் வந்து கூறிச் சென்றாள். சித்திகா இருந்த அறையில் ரகசிய கேமராக்கள் இருக்குமானால் மற்றவர்கள் இருந்த அறைகளிலும் அவை பொருத்தப் பட்டிருக்கலாம் என்றே எனக்குத் தோன்றுகிறது. "உண்மையைச் சொல்லுங்க ஐயா" என்று கெஞ்சினாள் நளினி.

"நான் உண்மையை மறைக்க விரும்பவில்லை. சித்திகா சொல்வது உண்மை தான். இங்கிருக்கும் எல்லா அறைகளிலும் ரகசிய கேமராக்கள் பொருத்தப் பட்டிருக்கின்றன”.

"பிறர் அறியாமல் இருவர் உறவு கொள்வதை விடீயோ எடுப்பது சட்டப்படி குற்றமில்லையா" என்று நளினி கேட்க, “நீ செய்யும் இந்தத் தொழிலும் சட்டத்திற்கு விரோதமானது தானே. சொகுசு வாழக்கை வேண்டுமென்று நினைத்துத் தானே சித்திகா போன்ற இளம் பெண்களை ஆசைமொழிகள் கூறி உன்தொழிலில் ஈடுபடுத்திக் கொண்டு, அவர்கள் மூலம் நீ சம்பாதிக்கிறாய்.” என்று வினவிய முத்துக்குமாரனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல், “அப்படியென்றால் நாமிருவர் கொண்ட உறவும் வீடியோவில் பதிவாகி இருக்கவேண்டுமே" என்று கேட்டாள்.
"நாமிருவரின் உறவு கேமராவில் பதிவாகியிருக்காது. நான் சொல்வதை நீ நம்பு, நளினி. நம் ஐயா எப்படிப்பட்டவர் என்பது எனக்குத் தெரிந்திருப்பது போல் உனக்கும் தெரிந்தது தானே. நம் இருவரின் தற்காப்புக்குக் கருதி இந்த அறையில் இருக்கும் கேமராக்களை செயலிழக்கச் செய்திருக்கிறேன். எனவே, நம் இருவர் உறவும் கேமராவில் வரவில்லை. வீடியோ எடுத்திருந்தால் ஐயா அதை பயன்படுத்தி நம்மையும் மோசம் செய்யக்கூடும் அல்லவா. என்னை மட்டுமல்ல நான் கூடவே உன்னையும் காப்பாற்றியிருக்கிறேன் நளினி. எனவே, நீ அனாவசியமாக அச்சமடைய வேண்டாம்”.

ஆனால், மற்ற அறைகளில் அது ரிக்கார்ட் ஆகியிருக்கும். அது ஏனென்றால், வந்திருக்கும் விருந்தாளிகள் ஒருக்கால் உறுதி கூறியபடி முதலீடு செய்ய மறுத்தால், இந்த விடீயோக்களை வைத்து அவர்களை மிரட்டிப் பணம் பறிப்பதற்கு நம் ஐயா அதை பயன்படுத்திக் கொள்வார். எனவே, நீ பயப்படுவது போல் ஒன்றும் நடக்க வாய்ப்பில்லை", என்று நளினிக்கு ஆறுதல் கூறினார்.

கண் கலங்கி நிற்கும் நளினியின் அருகில் சென்று, "எப்படியோ ரகசிய கேமராக்கள் பொருத்தியிருப்பதை சித்திகா மூலம் நீயும் தெரிந்து கொண்டு விட்டாய். உனக்கு மேலும் இரண்டு லட்சம் ரூபாய் தருகிறேன். வைத்துக் கொள். சித்திகாவிடம் ஏதாவது சொல்லி சமாளித்து விடு. இதை நீ யாரிடமும் சொல்லாமல் இருந்தால் போதும். நானும் யாரிடமும் சொல்லமாட்டேன். நம் ஐயாவிற்கும் இது தெரியவேண்டாம். என்ன சொல்கிறாய் ? என்று கேட்டுவிட்டு, தலை குனிந்து நின்று கொண்டிருந்த நளினியின் தாடையில் கைவைத்து தூக்கி அவள் கண்களை நோக்கினார் முத்துக்குமரன்.

"ஐயா பணம் ஒன்றே என் குறிக்கோளாக இருந்தது உண்மை தான். ஆனால், என்னை நம்பியிருக்கும் இளம் செல்வங்களை நான் வஞ்சிக்க விரும்பவில்லை. எனக்கு பணம் தேவையில்லை. கேமராவில் பதிந்திருக்கும் விடீயோக்களை அழித்து விடுங்கள்" என்று நளினி கெஞ்சியபோது, அவள் கண்களில் நீர் நிறைந்திருந்தது.

"அது சாத்தியமில்லை, நளினி. இது எல்லாம் ஐயாவின் ஏற்பாடுகள். ஐயாவிற்கு இது தெரியவந்தால் நம் இருவர் நிலையும் அதோகதி தான். அவரை நானோ நீயோ பகைத்துக் கொள்வது புத்திசாலித்தனம் ஆகாது. எனவே, நான் சொல்வதுபோல் நடந்து கொள்" என்று அவர் நிலைமையை முத்துக்குமரன் விளக்கி, மேலும் இரண்டு லட்சம் ரூபாய் எடுத்து நளினியிடம் கொடுத்தார். வேறு வழியின்றி நளினி அதை பெற்றுக்கொண்டாள்.

வந்திருந்த விருந்தினர் மூவரும் அன்று மதியம் கிளம்பிச் செல்ல, நளினி, சித்திகா, ஸ்மிருதி, பானு, நால்வரையும் ஏற்றிக்கொண்டு அதே மஹிந்திரா ஸ்கார்பியோ பேரடைஸ் ரிசார்ட்டிலிருந்து மேடவாக்கம் இல்லம் நோக்கி விரைந்தது.

சித்திகா, ஸ்மிருதி, பானு, மூவரும் தமக்குக் கிடைத்த பரிசுகளை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு நளினி கொடுத்த பரிசு என்னெவென்று தெரியாமல்.


26.

அன்று சனிக்கிழமை. வைத்திக்கு விடுமுறை நாள்.

வைத்தி மதிய உணவருந்த உட்கார்ந்த போது, கோமளம் பாட்டி மாடிப்படிகளில் அருகில் நின்று "வைத்தி .. வைத்தி .. என்று கூப்பிடவும். "இதோ வந்துட்டேன் பாட்டி" என்று சொல்லியவாறே மாடிப்படிகளில் இறங்கி வந்தான் வைத்தி.

"இந்த கண்ணா .. சுண்டைக்காய் வத்தக்குழம்பு பண்ணினேன். உனக்குப் பிடிக்கும்ன்னு கொஞ்சம் கொண்டு வந்திருக்கேன்" என்று சொல்லி அவனிடம் ஒரு கிண்ணத்தை கொடுத்தாள் பாட்டி.

"தேங்க்ஸ் பாட்டி" என்று சொல்லி அதை வாங்கிக் கொண்டான்.

"வைத்தி சாப்பிட்டுட்டு கீழ வரையா .. உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்" என்றாள். சரியென்று அவன் சொல்ல, பாட்டி அவள் அறைக்குச் சென்றாள்.

சாப்பிட்டு முடித்த வைத்தி கீழே வந்தான். பாட்டியின் அருகில் இருக்கும் ஒரு நாற்காலியில் அவன் உட்கார்ந்து கொள்ள, "வத்தக் கொழம்பு நல்லா இருந்ததுதா" என்று கேட்க, "சூப்பரா இருந்தது பாட்டி" என்றான் அவன்.

நான் பெங்களுர்ல இருந்தபோது உன் அம்மா தங்கம் நீ எப்படி இருக்கேன்னு தெரிஞ்சுக்கறத்துக்கு ஃபோன் பண்ணியிருந்தா. நீ நான்னாயிருக்கேன்னு சொன்னேன். நான் ஜுரத்துல படுத்திருந்தபோது நீ என்ன நான்னா கவனிச்சுண்டேன்னும் சொன்னேன்”.

"என் பேத்தி மோகனா வந்திருந்த போது, நான் உனக்கு அறிமுகம் செய்தேனே. ஒப்புக்கு ஒரு ஹாய் என்று மட்டும் சொல்லிவிட்டு, பிறகு அவளிடம் நீ வேறொன்னும் பேசவே இல்லை. அவள் இப்போ எம்.பி.ஏ. பண்ணிண்டு இருக்கா. படிச்சு முடிச்சதுக்கப்பறம் அவளுக்கு நல்ல ஒரு வேலை வாங்கி கொடு. நீ தான் பெரிய ஆஃபீசுல எச்.ஆர்.டி ல இருக்கயே" என்றாள் பாட்டி.

"நிச்சயமா செய்யறேன் பாட்டி"

"உனக்கு மோகனாவ பிடிச்சிருக்கா"

"மோகனா அழகா இருக்கா. யாரும் அவளை பிடிக்கல்லேன்னு சொல்லமாட்டா பாட்டி'

"அவளுக்கும் ஒன்ன பிடிச்சிருக்குன்னு சொன்னா என்கிட்ட".

"இன்னிக்கி சாயந்தரம் கோயிலுக்குப் போறேன். நீ தான் எனக்குத் துணையாய் வரணும். வருவியா" என்று வினவினாள் கோமளம் பாட்டி.

"ஓ வரேனே" என்று பதிலளித்தான் வைத்தி.

"அப்போ சரி .. ஆறு மணிக்கு வா. போலாம். சித்த நேரம் நான் படுத்துக்கறேன்" என்று சொல்ல வைத்தி மாடிக்கு வந்து விட்டான்.

மாலை ஆறு மணிக்கு வெள்ளை வேஷ்டியும் ஷர்ட்டும் அணிந்து வைத்தி கீழே இறங்கி வரவும், பாட்டி ரெடியாக இருந்தாள். பாட்டியின் கையைப் பிடித்துக் கொண்டு, நாராயணபுரத்தில் இருக்கும் சித்தி விநாயகர் கோயிலை நோக்கிச் செல்லும் வழியில் பாட்டியைப் பார்த்த பலரும் "நல்லாயிருக்கீங்களாம்மா" என்று விசாரித்தனர். அவர்களுக்கெல்லாம் "ஆண்டவன் புண்ணியத்தில் நல்லா இருக்கேண்டா செல்லம்" என்று பதிலளித்தாள். கோமளம் பாட்டியைத் தெரியாதவர்களே அந்தப் பகுதியில் இல்லையோ என்று நினைத்து வைத்தி ஆச்சரியப்பட்டான்.. பாட்டியை பார்த்ததும் கோயில் அர்ச்சகர் மற்றும் அங்கு பணிபுரியும் சிலர் பாட்டியிடம் நலன் விசாரித்தனர். பாட்டி கோயில் ஆலுவலகத்திற்குச் சென்று அர்ச்சனை சீட்டு ஒன்று வாங்கி கொண்டாள்.

கோமளம் பாடியிடமிருந்து அர்ச்சனைப் பொருள்களைப் பெற்றுக்கொண்ட அர்ச்சகர், யார் யார் பேருக்கு அர்ச்சனை செய்யணுமோ அவா பேரும், கோத்திரமும் சொல்லுங்கோ" என்றதும் "வைத்தீஸ்வரன், ஸ்ரீவத்ஸ கோத்திரம்" என்று கோமளம் பாட்டி சொல்ல, வைத்தி ஒருகணம் திகைத்து, பாட்டியைப் பார்த்தான்.

சித்தி விநாயகனை வணங்கியபின் தீபாராதனை காட்டிய பொழுது, "விக்னேஸ்வரன் எல்லா விக்னங்களையும் விரையில் தடுப்பான்" என்று சொல்லி, பிரகாரத்தைச் சுற்றி இறுதியில் நவக்கிரகள் அருகில் வந்தனர்.

கோமளம் பாட்டி அகல் விளக்கு, திரி, எண்ணை, தீப்பெட்டி நான்கும் எடுத்து வைத்தியின் கையில் கொடுத்து சனி பகவானை மனதில் நினைத்துக் கொண்டு விளக்கேற்றி வை" என்றாள்.

பாட்டி ஏன் இவையெல்லாம் அவனுக்கு வேண்டி செய்கிறாள் என்று உடனே தெரிந்து கொள்ள விரும்பினான். வைத்தியின் முகத்தைப் பார்த்த பாட்டி, "கண்ணா ஆத்துக்கு போனப்பறம் எல்லாம் விபரமா சொல்லறேன். இப்போ நான் சொன்னதை நீ செய்" என்று கட்டளை இட்டாள்.

வைத்தியும் பாட்டி சொல்லைத்த தட்டாமல் அப்படியே செய்தான்.

பிறகு, இருவரும் வீடு திரும்பி வரும்பொழுது, வைத்தியிடம் அவள் தாய் கூறியதனைத்தும் ஒன்று விடாமல் சொல்லி முடிக்கவும், கோமளம் பாட்டி அவன் மீது வைத்திருக்கும் பாசத்தை முற்றிலும் உணர்ந்து கொண்டான்.

அது மட்டுமல்ல, அவன் தாயின் விருப்பப்படி குறித்த காலம் வரையில் வாரா வாரம் தவறாமல் சனி பகவானுக்கு தீபம் ஏற்றிவைப்பதாகவும் பாட்டிக்கு உறுதிமொழித்தான். அதற்கு காரணம் பவித்ரா ஒருநாள் மீண்டும் அவனுடன் தொடர்பு கொள்வாள் என்ற நம்பிக்கையில் தான்.


27.


பல நாட்கள் வைத்தி தன் மொபைலில் இருந்து பவித்ராவை அழைப்பதும், அதற்கு பதிலாக "நீங்கள் தொடர்பு கொண்ட எண் உபயோகத்தில் இல்லை" என்பதைக் கேட்டு கேட்டு மடுத்து விட்டிருந்தான்..

நாட்கள் நகர்ந்தன.

வைத்தி, தந்தையின் ஸ்ரார்த்தம் சென்னையில் கோமளம் பாட்டி வீட்டில் நடத்த முடிவெடுத்து, தாயை வரவழைத்தான்.

ஒருவார காலம் தாயின் அரவணைப்பில் இருந்தபோது, அவன் தாய் மோகனா ஜாதகம் மிகவும் பொருந்தி இருப்பதைக் கூறி, அவன் மோகனாவைத் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று வற்புறுத்த, தாயின் மனதை நோகடிக்க விரும்பாமல் தன் முடிவை விரைவில் தெரியப்படுத்துவதாகக் கூறினான்.

வைத்தியின் தாய் ஊருக்குத் திரும்பிச் செல்லும் முன், தவறாமல் சனி பகவானுக்கு சனிக்கிழமை தோறும் விளக்கு ஏற்றி வைக்கவும் பணித்தாள்.

மூன்று மாதங்கள் பிறகு, பவித்ராவுடன் அவனுக்கு ஏற்பட்ட தொடர்பு தற்காலிகமானது தான் என்பதை உணர்ந்து கொள்ளத் தொடங்கியதும் வைத்தியின் மனநிலையில் ஒரு மாற்றம் ஏற்பட்டது.

மோகனாவைத் திருமணம் செய்துகொள்ள சம்மதிக்க, இருவருக்கும் ஒரு சுப முகூர்த்தத்தில் நிச்சயதார்த்தம் பெங்களூரில் நடைபெற்றது. திருமணம் தை மாதம் நிச்சயிக்கப்படுகிறது.

மோகனா வைத்தி இருவரின் திருமணத்திற்கு பத்து நாட்கள் முன் ..

சென்னை சென்றிருந்த மோகனாவின் தந்தை புதியதொரு கைபேசி அங்கிருந்து வாங்கி வந்து அவளிடம் கொடுத்து, முதன் முதலாக அவளுக்கு வரவிருக்கும் கணவரிடம் தொடர்பு கொண்டு பேசும்படிக் கூற, அவள் வைத்திக்கு ஓரிரவில் ஃபோன் செய்தாள்.

வைத்தியின் கைபேசி ஒலிக்க, அழைப்பவர் யாரென்று பார்த்ததும் கைப்பேசியைக் கையில் எடுத்து, "ஹலோ .. பவித்ரா" என்று அவன் சொல்ல, மறுமுனையிலிருந்து " ஐ ஆம் நாட் பவித்ரா. நான் மோகனா பேசுகிறேன்" என்று பதில் வரவும் அவன் மனதில் ஒரே திகில்.

"அழைப்பவர் குரல் அறியாதிருப்பின் யார் பேசறது" என்று கேட்பதை விட்டு விட்டு, "ஹலோ பவித்ரா" என்கிறாரே என்று மோகனாவின் மனதில் ஒரு குழப்பம்.

"மோகனா .. இந்த நம்பர் உனக்கு எப்படிக் கிடைத்தது" என்று வினவினான் வைத்தி.

"யார் அந்தப் பவித்ரா என்பதை முதல்ல சொல்லுங்க" என்றாள் மோகனா.

ஏடாகூடமா ஏதாவது சிக்கலில் சிக்கிக்கொள்ளாமல் இருக்குவேண்டுமே என்று இறைவனை மனதில் நினைத்துக் கொண்டு, "பவித்ரா இஸ் நன் பட் ஏ கொலீக் ஆப் மைன், ஹு லாஸ்ட் ஹெர் மொபைல் ஃபியூ மந்த்ஸ் பேக்" என்று பொய்யுரைத்தான்.

அதைக் கேட்ட மோகனா “சென்னை சென்றிருந்த அப்பா புதிய கைபேசி அங்கிருந்து வாங்கி வந்து இப்போதுதான் கொடுத்தார். முதன் முதலாக உனக்கு வரவிருக்கும் கணவரிடம் தொடர்பு கொண்டு பேசு என்று அவர் கேட்டுக்கொண்டதால் தான் உங்களை அழைத்தேன்” என்றாள். அதைக் கேட்டு நிம்மதி பெருமூச்செறிந்தான் வைத்தி.

சிறிது நேரம் இருவரும் ஏதோ பேசிக்கொண்ட பிறகு, ஒருவர்க்கொருவர் “குட் நைட்” என்று சொல்லி இணைப்பைத் துண்டித்த, வைத்தி அவன் மொபைலில் பவித்ரா பெயரை நீக்கி மோகனா என்று திருத்திக் கொண்டான்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்..

பகலில் ஒரு இரவு இரவில் ஒரு நிலவு
நிலவில் இரு பிளவு பிளவில் ஒரு களவு
களவில் ஒரு உறவு உறவில் ஒரு பிரிவு
பிரிவில் புது உறவு உறவோ கண்ட கனவு

எழுதியவர் : (25-Jul-16, 12:44 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 560

மேலே