கணவனின் காதல் ரகசியம்
ஆருயிரே
படுக்கைவிட்டு
எனை முந்திக்கொண்டு
ஏன் எழுந்தாய்?
உன் வாசம் காணாமல்
என் இதயம் எப்படி சுவாசிக்கும்?
பெண்ணே
நீ துவட்டிய துண்டை
உலர்த்திவிடாதே
உன் கூந்தல் தீண்டிய ஈரப்பதம்
என் இருதுளை மூக்கினுள்
சென்றால் தானே
செங்குருதியும்
ஓட்டம்பெறும்!
அன்பே
இன்று ஏன் நீலநிற
பட்டு அணிந்தாய்
அதில் நெய்த நூலில் தானே நானாய் மாட்டிக்கொண்டேன்
மறந்துவிட்டாயா?
நீ விடுவித்தாலும்
எவ்வாறு அலுவலகம் செல்வேன்?
திங்கள் கிழமை மட்டும்
நாத்திகனாய் மாறிவிடுகிறேன்
நீ விரதம் என்று பட்டினி
கொள்கிறாய்
பலன் என்னமோ எனக்கு தான் -ஆனாலும்
என் இதயம் அல்லவா
புண்ணாகிறது!
இது சமயம்
நம் சண்டைகள் முற்றிடும் போது உனக்காகவே
ஆத்திகனாய் மாறிவிடுகிறேன்
நான்தானே சிவன்
நீ தானே என் (சக்தி)தேவி!
இனி பட்டினி விரதம்
வேண்டாம்
நம் காதல் சண்டை மட்டும்
போதும்!
அப்போ தலைமீது யாரென்று
கேட்டு விடேன்?
விடை வேண்டுமென்றால்
ஒரு காதை மட்டும் கொண்டு வா
என் இதழ் அருகே
அது சிவ ரகசியம் ......