மியா-ன்னு பேரு வைடா தம்பி

அண்ணே, எங்க பாப்பா பொறந்து மூணு நாளு ஆகுது. மூணு நாள் முடியறதுக்குள்ள 'மி'ல ஆரம்பிக்கற பேர வைக்கணும் சோதிடர் சொல்லிருக்காரு. ஒரு நல்ல இந்திப் பேரா சொல்லுங்க அண்ணே.
@%@
தம்பி, இன்னைக்கு 'தி இந்து' நாளிதழில் 'வெற்றிவேல்' ங்கற படத்தில நடிச்ச மியா ..... இப்ப 'எமன்'ங்கற படத்தில நடிக்கறாங்கன்னு செய்தி போட்டிருந்தாங்க. மியா கண்டிப்பா இந்திப் பேராத்தான் இருக்கும். அந்தப் பேரையே வச்சிருடா தம்பி. அந்தப் பேர எல்லாம் "ஸ்வீட் நேம்'னு சொல்லுவாங்கடா தம்பி.
@%@
சரிங்க அண்ணே
அண்ணே, மியா-ன்னு பேரு வச்சா எல்லாம் கிண்டல் பண்ணுவாங்களே.
@%@
அட போடா தம்பி தங்கப்பா. தமிழ்ப் பேரா இருந்தா அதக் கிண்டல் பண்ணறதுதான் தற்கால தமிழர் நாகரிகம். நீ பாப்பாவுக்கு மியா-ன்னு பேரு வச்சா கண்டிப்பா அந்தப் பேர எல்லாரும் "ஸ்வீட் நேம், ஸ்வீட் நேம்"-ன்னு பாராட்டுவாங்கடா தங்கப்பா.
@#@
சரி அண்ணே. நீங்க சொல்லற மாதிரியே செய்யலாம். சாய்ந்தரம் அஞ்சு மணிக்கு வீட்டுக்கு வாங்கண்ணே.
@#@
சரிடா தங்கப்பா.


@@@@@@@@@@@@@@@@@@@@@@
சிரிக்க அல்ல. சிந்திக்க. தாய்மொழிப் பற்றை வளர்க்க.

***********************************************************************************************************************
The name Miya is a baby girl name. The name Miya comes from the Japanese origin. In Japanese The meaning of the name Miya is: Three arrows; temple.
The meaning of the name “Miya” is: “Sacred House; temple; increasingly beautiful”. ..
Miya. It means "Princess" in Japanese.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@நன்றி: விக்கிப்பீடியா ^

Mia (Hebrew: מיה) is a feminine name. It is of Hebrew, Latin and Scandinavian origin. The earliest known reference was to the short form of Miriam (מִרְיָם), an ancient female Hebrew name. Bearing in mind that many Levite names are Egyptian, it might be derived from an Egyptian word myr, which means "beloved".

எழுதியவர் : மலர் (26-Jul-16, 10:30 pm)
பார்வை : 228

சிறந்த நகைச்சுவைகள்

மேலே