என் நண்பனே

என் நண்பனே!

குளிர்க்காற்று உன்குருதியை தொட்டு...
கூச்சப்படுத்தினால் சொல்- என்
தோலுரித்து தோகையாய்...
போர்த்திவிடுகிறேன்!

ஆதவன் அருகினில் வந்து மாதவம்...
புரிந்தாலும்! எனது இரைப்பையைக்...
கிழித்து குடையமைத்து - நுன்சக்தியை
பருகாமல் நான் காப்பேன்!

என் நெஞ்சத்தின் கருவறையில்...
வீற்றிருக்கும் உன் பாதச்சுவடுகளில்,
முள்தோய்த்தால்! எனது கபாலத்தை...
செதுக்கி, உன்பாதத்திற்கு பூபாளம் இடுவேன்!

செந்தாமரையாய்! பொத்திப் பொத்திப்பார்க்கும்...
உன் செம்மேனியில் சேதாரமானால் - என்...
நரம்புகளில் பாயும் இரத்தஅணுக்களின்
மொத்தமும் துணுக்குகளாக பிழிந்து இடுவேன்!

உன்வயிற்றினுள் பசியின் வேசிகள்...
பங்குகொண்டால்! எனது,
நெஞ்சத்தைக் கிழித்து மஞ்சத்தை...
உணவாக்குவேன் உனக்கு!

இதமாக நீ சாய்ந்து இளைப்பாற - எனது
தோளினை இரும்பாய் மாற்றி...
இடம்பெயர்க்கிறேன் உனது...
தலையருகினில்!

நீ! ஒய்யாரமாய் சொப்பனம் காண!
மூட்டுகளை முறித்து சட்டம் மூட்டுவேன்!
நரம்புகளால் வேய்ந்து! சொர்க்கரதம்...
நானமைப்பேன் உனக்கு!

உதிரம், உருவம், உறவு, என...
சம்பந்தமில்லாமல் உண்டான,
நட்பெனும் உணர்வு! - என்...
நாடித்துடிப்புகளுக்கு உணவு!

உடலும் உனக்கே! உயிரும் உனக்கே!
உனக்கில்லையென்று! சொல்வதற்கு...
எனக்கில்லை உரிமை!

எழுதியவர் : Maniaraa (26-Jul-16, 11:41 pm)
பார்வை : 567

மேலே