நீதிக்குமுன், பணமும், அதிகாரமும்

நீதி எல்லருக்கும் சமம் என்று எப்படித்தான் ஏற்பது.
பாதி - பணக்காரர்களுக்கும், மீதி - அதிகாரவர்கத்திற்குமல்லவா விற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

விற்பதிற்குப் பொருளாகிப் போனதனால்

பெறுவதற்குப் பணம்காசு வேண்டுமென்றோ?

கற்பதற்குப் பள்ளிகள்தன் இருந்தென்ன - நீதி

அற்பனுக்கும் கிடைக்கும் வழி படம் எங்கே?

அதிகாரம் பெற்றவர்கள் ஆட சொன்னால் - நீதி

அரங்கத்தில் அலங்கோலமாய் ஆடுதடா

சாதிக்காரர் போடுகின்ற வலையினிலே - நீதி

சாட்சியின்றி சாகக் கிடக்குதடா,

மனசாட்சி உள்ளோரே மனிதன் - அந்தோ,

இங்கே பிணச்சாட்சி கூட வெல்லும் - பணமிருந்தால்.

ஏனிந்த அவலநிலை - எண்ணிப்பாரீர்,

காசுபணம் அதிகாரம் எத்தனைநாள்.

கடவுளுக்குக் கண்கள் உண்டு திறக்கட்டும்,

நீதி என்றும் நிலைக்கட்டும், செழிக்கட்டும்!!

எழுதியவர் : பொ. வெங்கடாச்சலம் ( ஏன் அப (26-Jul-16, 11:48 pm)
சேர்த்தது : Arunakiri
பார்வை : 59

மேலே