நண்பனுடன் வீதி உலா

அந்த தேரடி வீதியில்
நான்கு கால்களுடன்
இலக்கு தெரியா
பறவைகள் போல் அல்லவா
இரவில் சுற்றி சுற்றி
வந்தோம்!

நீயும் நானும்
இளவரசுகளின் வீதி உலா
என்றெண்ணியல்லவா
நிலவின் நட்பு முகம் ரசிப்போம்!

பத்து ரூபாய் பணக்காரர்கள்
நாம் அன்று ....
வறுமையின் பொருளை மெளனமாய் பேசிக்கொள்வோம்!

நாம் கண்ட கனவுகள் எத்தனையோ?
என் வலது கை
உன் தோள்பட்டைக்கு சொன்ன கதைகள்
நீ "உம் " சொல்லும் சத்தம்
இன்றும்
என் காதில் கேட்கிறதே

படித்தோம்
வேலைசெய்து கொண்டே
நம் கனவுகள் பெரிதாயினும்
ஆசைகள் (ஏக்கம்) சிறிதல்லவா அன்று ...
ஏக்கம் என்று சொன்னால்
வறுமை நம்மை கேலி செய்யுமோ என்ற மூட நம்பிக்கை இன்னும் எனக்குள்ளே
நண்பனே!

விளையாட்டாய் கேட்டு பார்ப்போம் இரு சக்கர வாகனத்தை ஓட்டிப்பார்க்க இன்னொரு
நண்பனிடம்
ஆசை தீராதே நமக்குள்ளே ....
திரும்புவோம் வீதி உலாவிற்கு
நாம் வாங்க வேண்டிய வாகனத்தின் பெயர் பட்டியல் தொடரும்
அன்றும் நாம் பத்துரூபாய்
பணக்காரர்கள் தான்!

விட்டுவிடுமா பருவம்
உன்னையும் என்னையும்
நீயும் அகப்பட்டாய்
நானும் அகப்பட்டேன்

காதல் மலர்ந்தது
உனக்குள் ஒரு பெண்
எனக்குள் ஒரு பெண்
இன்று விடா முயற்சியில் வாழ்க்கையிலும்
காதலிலும் வெற்றிபெற்றோம்
யாருக்கும் வலிக்காமல் ..,

நாம் கருப்பு சட்டை அணிந்தாலும்
ஆயிரம் முறை சுற்றியிருப்போமா?
நாம் எண்ணவில்லை
அந்த தேரடி வீதியின் நடுநிலையில்
கோவில் கொண்டவன்
எண்ணிகொண்டான் போல
அன்று இரு இளவரசுகளின் கனவுகளை
மட்டுமல்ல சுற்றுகளையும் தான் !

இன்று அவரவர் வாழ்க்கையில்
உழைப்பில்
நாமே குறையில்லா
சக்கரவர்த்தி ...
நீ ஒரு மூலையில்
நான் ஒரு மூலையில் ..
திரும்பி வருமா அந்த வீதி உலா!

(தொடரும்)

எழுதியவர் : மருதுபாண்டியன். க (26-Jul-16, 9:35 pm)
சேர்த்தது : மருதுபாண்டியன்க
பார்வை : 141

மேலே