இங்கு கடவுள் விற்கப்படும்…
பத்து ரூபாய் கொடு
பக்கத்தில் செல்லலாம்
ஐம்பது ரூபாய் கொடு
அருகில் செல்லலாம்
ஐநூறு ரூபாயா?
ஆண்டவனிடமே செல்லலாம்.
நெய்விளக்குப் பத்து ரூபாய்
நெய்வேத்தியம் ஐம்பது ரூபாய்
அர்ச்சனைத் தட்டு இருபது ரூபாய்
ஆராதனையோ அருபது ரூபாய்..
பிரச்சனைகளா? தீர்த்துக்கொள்ளலாம்..
பரிகாரங்களா? பார்த்துக்கொள்ளலாம்..
பணம் வேண்டுமா? கேட்டுக்கொள்ளலாம்..
வா.. இங்கு கடவுள் விற்கப்படும்!!!
விலையா? வெறும் விழிப்புணர்வு தான்!