முகம் மூடும் முழுமை நிலா

தினமொரு பாட்டு
நானெழுத
திருமுகமே உன்
திரை திறவாய்

முன்பொரு நாளில்
பின்னிரவில்
உன் முகம் காண
நான் விரைந்தேன்
உன்னிரு விழி மட்டும்
நீ திறந்தாய்
பொன் விழியொழி கண்டு
நான் வியந்தேன்

காத்திரு என்று
நீ உரைத்தாய்
காத்திருப்பை கவிதைகளால்
நான் நிறைத்தேன்

என் கவிதைகளில்
நீ பூத்திருப்பாய்
புன்னகையால்
நான் பூப்பறிப்பேன்

நீ மலையாக
நான் உளியாகி
சிற்பம் காண்பது எப்போது

காகிதமே உன் மீது
நான் மையாகி
காவியம் படைப்பது எப்போது

ஜாதி காண்பது
ஜனங்களின் மரபு
காதல் ஜோதியே
இரு மனங்களின் தெரிவு

இன்னொரு முறை நான்
பிறப்பதாய் இல்லை
எனக்கென பிறந்தவள் உனை
இழப்பதாய் இல்லை

உன் செவ்விதழ் மலர்ந்து
சேதியைச் சொல்லு
சம்மதம் என்றால்
சரித்திரம் படைப்போம்.
***
.
.
-முஹம்மது பர்ஸான்.

எழுதியவர் : முஹம்மது பர்ஸான் (29-Jul-16, 12:07 pm)
பார்வை : 449

மேலே