தவிக்கிறேன் தனலில்
அன்பென்று பொய்சொல்லி அருகினில் வந்தாய். வம்புகள் செய்து புதுஇன்பம் தந்தாய். மெய்என நம்பி மையல் கொண்டேன். பொய்யனாய் நீமாற தீயினில் நின்றேன். முழுதாய் நம்பிநான் பழுதாய் ஆனேன். அழுதே நாளும் தேய்பிறை ஆனேன். கானல் நீர் என நீயாகிப்போனாய். காதல்கனவுகள் கருகுது வீணாய். உறங்காத இரவினை நீதந்தாய் எனக்கு. மறந்து நீ வாழ்ந்திட எனை மணந்தது எதற்கு?