மண்ணில் பிறந்த பெண்ணிலா
என்னைக் காணத்தான் -தினம்
உலா வருகிறது அந்த நிலவு என நினைத்தேன்!
அது உன் அழகைக் காண்டதால்தான்
தேய்பிறையாய் ஆனதென்று அறிந்தேன்!
நிஜம்தான்
அந்த நிலவையே மயக்குதடி
உன்னிளம் அழகுதான்...!
பெண்ணே...!
உன்னைக் கண்டவன் எல்லோரும்
கவிஞனாய் ஆவான்...
ஒருவன் உன்னை இரசிக்காதிருந்தால்
அவன் ஒரு குருடன்தான் !