அழகிய தமிழ் மகள்

காலை வேளையிலே
குளிக்க செல்லுகையிலே
ஆற்று ஓரத்திலே
குடமெடுத்து வந்தவளே

ஓர பார்வைப்பார்க்கதடி என்னை
உள்நெஞ்சு வேண்டுதடி யுன்னை

உன் கண்ணோடு தோற்றுப்போய்
ஒளியுதடி கயல்களெல்லாம் கல்லுக்கடியினிலே

ஆண்மயில் தோகையும் தோற்றுப்போகும்
என்னவளின் கூந்தல் அழகோடு

கொடிகளும் தடிம னானவைதான்
உன் இடையோடு ஒப்பிட்டால்

தேன் எடுக்கும் தேனீக்களும்
உன் இதழை மறந்தது ஏனோ?

அன்ன பறவைகளும் அழுகுதடி
உன் நடையோடு தோற்றுப்போய்

துள்ளல் நடை போடாதடி
புள்ளி மானும் அழுகுமடி

அல்லி தண்டும் அழுகுதடி
உன்கையின் பரிச மென்மைகண்டு


சங்குகள் வளைவுகளும் நேரானவைதானென
உன் கழுத்தைக்காண்கையில் தோணுதடி


முழுநிலவும் பிறை நிலவாய்
தேய்ந்து பார்த்தாலும் தோற்றுப்போகிறது
உன் நெற்றிப்போல் ஆகமுடியாமல்


என் தமிழ் மகளின் அழகை
பெண் போல வர்ணித்தாலும்
எப்பெண்ணும் பிறக்கமுடியாது
என் தமிழ் மகளின்
அழகுக்கு ஈடாக....

எழுதியவர் : ராகுல் கலையரசன் (30-Jul-16, 4:42 pm)
பார்வை : 340

மேலே