என்னவள் நல்லவள்

நிலவே உன் தன்னொளி எங்கே

இன்று தணலாய் காய்வதேனோ

என் மனதை காய்ப்ப தேனோ

என்று கனவிலே நான் நினைத்தேன்

கனவு கலைந்தது விழித்து கொண்டேன்

என்னவள் என் பக்கம் இருக்க கண்டேன்

அவள் நிலவொத்த வதனத்தில்

அந்த நிலவின் குளிர்ச்சியும் அழகும் கண்டேன்

நேற்றைய ஊடலை மறந்து விட்டாள் போல !

இப்போது புரிந்தது என் கனவில் வந்த நிலவு

கற்பனையில் நான் கண்ட என் மனைவியின் கோபம் !

அறிந்தேன் இப்போது என்னவள் நல்லவள்

நேற்றைய என் வைதலை மனதில் வைக்கவில்லை

என்னைக் கோபத் தீயால் தீண்டவில்லை

அவள் என்றும் தன்னொளி பரப்பும் பூரண நிலவே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (31-Jul-16, 2:22 pm)
பார்வை : 171

மேலே